26 செப்டம்பர் 2010

டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமெரிக்கா ஆப்பு: மறுபக்கம் தேளும் கொட்டியது.

ஓசியாக அமெரிக்கா செல்ல பெரும் எதிர்பார்ப்போடு இருந்த டக்ளசுக்கு விசா வழங்க இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மறுத்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைப் பெரிதுபடுத்தினால் எங்கே இணையத்தளங்களில் இது பெரும் செய்தியாக வந்துவிடும் என அடக்கி வாசித்திருக்கிறார் டக்ளஸ். யாழில் தங்கியிருந்து வேலைசெய்துவரும் இவர், தனது விசா நிராகரிக்கப்பட்டது தொடர்பாக வாயே திறக்கவில்லை, அதனை கஷ்டப்பட்டு மறைக்க அது பெருவினையாக உருவெடுத்துள்ளது.
பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் அமெரிக்கா செல்லவிருப்பதாக அறிந்த பிரதமர், அவர் நாட்டில் இல்லாதவேளை பிரதி அமைச்சர் அப்பொறுப்பில் இருக்கவேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன, வீரக்குமார திஸாநாயக்காவை பிரதி அமைச்சராக நியமித்து, சத்தியப் பிரமாணத்தையும் எடுக்கவைத்துவிட்டாராம். இது டக்ளசுக்கே இப்பதான் தெரியுமாம். தனது அமைச்சுப் பொறுப்புக்கு பிரதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பாக டக்ளஸ் கடும் அதிருப்தியடைந்துள்ளாராம்! அமெரிக்க விசாவும் கிடைக்காமல், இப்ப பிரதி அமைச்சர் நியமனம் என்று, இருபக்க அடி வாங்கியுள்ளார் டக்ளஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக