
இலங்கையில் வைத்தே லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும், ஏற்கனவே 100 இயக்கத்தினர் இலங்கையில் உள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினர் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இவ்வாறான ஒரு செய்தி கசிவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்காவின் இக்குற்றச்சட்டை கோத்தபாய மறுத்திருந்தார்.
இதேவேளை இலங்கையைப் பயன்படுத்தி இந்தியாமீது தாக்குதல் தொடுக்க சீனா முயல்கிறது. இலங்கையுடன் சீனா கொண்டுள்ள தொடர்புக்கு இந்தியா வெளிப்ப்டையாகவே வருத்தம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எந்த நாட்டிலிருந்து தனக்கு அதிக ஆதாயம் கிடைக்கிறதோ அந்த நாட்டுக்கு இலங்கையை விற்க மஹிந்த தயாராக இருப்பதன் விளைவே இப்போது லஷ்கர் ஈ தொய்பாவினரும் இலங்கைக்குள் ஊடுவக் காரணமாகிவிட்டதாக அரசியல் அவதானிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக