08 செப்டம்பர் 2010

சீமான் பேசியதில் தவறில்லை அவரை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குனர் சீமானை ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இருவரும் சீமானை சந்தித்து பேசினர். பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சே அரசை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டார். இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை.அண்ணா பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை பொது மன்னிப்பு மூலம் விடுவிக்க வேண்டும். அதே போல், பரோலில் சென்று தாமதமாக சிறை திரும்பியவர்களுக்குப் பொதுமன்னிப்பு கிடையாது எனும் மனிதாபிமானமற்ற நிலையை அரசு கைவிட வேண்டும். சிறையில் இருப்பவர், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் பரோல் கிடையாது என்பதும் மனிதாபிமானமற்ற போக்கு. சீமானை அரசு விடுவிக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக