கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா சிறீலங்கா அரசை கடுமையாக விமர்சித்ததாகவும், ஆனால் சிறீலங்கா அதற்கான பதிலை தனது உரையில் சேர்க்காது தவிர்த்துவிட்டதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஓபாமாவின் பேச்சில் பின்வரும் விடயங்கள் இருந்ததாக பார்வையாளர் தெரிவித்துள்ளனர்.
தற்போது பொருளாதார நெருக்கடிகள் எமக்கு சுமையாக உள்ளபோதும், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளும் எமக்கு அச்சத்தை கொடுக்கின்றன. இன்று பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் அதற்காக நாம் மனித உரிமைகளை புறம்தள்ள முடியாது.
குறுகிய கால உறுதித்தன்மைக்காகவும், பொருளாதார நலன்களுக்காகவும் சுதந்திரத்தை விலையாக்க முடியாது.
சில நாட்டின் தலைவர்கள் தமது பதவிக்காலத்தின் எல்லைகளை இல்லாது செய்துள்ளனர். சிவில் நிர்வாகம் சீரழிந்துபோவதை நாம் காண்கிறோம். நல்லாட்சி அற்ற நிலையையும், ஊழல்களையும் நாம் காண்கிறோம். ஜனநாயகம் காலவரையறையின்றி குழிதோண்டி புதைக்கப்படுவதை நாம் காண்கிறோம்.
அமெரிக்காவிலும் சில தவறுகள் இருந்தாலும், வெனிசுலா அதிபர் கியூகோ சவேஷ் இதனை மேற்கொண்டுள்ளார். உகண்டா அதிபர் முசேவெனி அதனை மேற்கொள்ள முயலுகிறார் (பதவிக் காலத்தை அதிகரிக்க), சிறீலங்காவை பொறுத்தவரையில் நாம் தற்போது காணுவது அண்மைய நிகழ்வு என ஒபாமா தெரிவித்துள்ளதாகவும், ஆனால் ஒபாமாவுக்கு பின்னர் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தும் ஒபாமாவின் பேச்சுக்கு பதில் கொடுக்க சிறீலங்கா தவறிவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக