01 செப்டம்பர் 2010

உலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கு விடும் வேண்டுகோள் – தமிழீழ புரட்சிகர மாணவர்கள்.



பரந்த பூமி பந்தில் பரவி வாழும் தொன்மைமிக்க எம் தமிழ் தேசிய உறவுகளே நம் தேசிய தலைவரின் ஆயுத மௌனிப்புக்கு பிறகு, வெள்ளை கொடியுடன் சமாதனம் பேச வந்த நம் வீர தளபதிகளை உலக சட்டங்களை மதிக்காமல் சுட்டுகொன்ற சிங்கள இனவாத அரசு தடை செய்யப்பட்ட நச்சு குண்டுகளையும் கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி நிராதரவாய் நின்ற எம் மக்களை முள்ளிவாய்காலில் முடக்கி கொன்று அழித்தது.
நம் இனம் வீழ்ந்து விட்டதாய் கொக்கரித்த இனவெறி அரசுக்கு வீறு கொண்டு எழுந்த நம் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் கடும் நெருக்கடியை கொடுத்தது.
விளைவு மனித நேயம் மிக்க மேற்குலக நாடுகள் இனவெறி அரசை போர்குற்ற நாடாகவும், சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை போற்குற்றவாளியகவும் அறிவித்து உலக நீதிமன்றத்தில் நிறுத்த சொன்னது .
இந்தியா, சீனாஇபோன்ற நாடுகளின் துணையோடு தப்பித்து விடாலாம் என்ற ராஜபக்சேயின் கனவு நம் எழுச்சிமிக்க, உணர்வுமிக்க போராட்டங்களால் சிதைந்து விடும் என்ற பயத்தால் இதோ அவன் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகிறான் .
எதிரியாக நின்று வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த ராஜபக்சே துரோகிகளை உருவாக்கி வெற்றி காண விழைகிறான், அதன் ஏற்பாடுதான் அனைத்துலக எழுத்தாளர்கள் மாநாடு.
எழுத்து என்பது ஆத்மாவின் இரத்தம் இஎழுதுகிறவன் படைப்பவனுக்கு சமமானவன் இஉணர்வுகளை வார்த்தைகளாக வடிப்பவன்தான் எழுத்தாளன்.
உண்மைகளை கலப்படம் இல்லாமல் வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வருபவன்தான் உண்மையான் எழுத்தாளன்.
எழுத்துக்களின் வீரியம் சாம்ராஜ்யங்களை உருவாக்கியும் இருக்கிறது சரித்தும் இருக்கிறது.
உணர்வும், உண்மையும் உள்ள எழுத்தாளன் இறந்தும் வாழுகிறான். அது இல்லாத எழுத்தாளன் வாழ்ந்தும் இறந்தவனாகவே கருதப்படுவான்.
தன் தரம் தாழ்ந்தாலும் தமிழின் தரம் தாழ்ந்து விடகூடாது என்பதற்காக வறுமையிலும் தமிழை தாங்கி பிடித்த எழுத்தாளர்களை எம் இனம் இன்றளவும் தன்னகத்தே கொண்டுள்ளது .
கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழை கை ஆளுகிற எவனும் துரோகியாக இருக்க முடியாது
பெருமை மிக்க தமிழ் எழுத்தாளர்களே நம் இனத்தை அழித்தவன் உன்னையும் என்னையும் பிரிக்க செய்கிற சதிதான் கொழும்பு மாநாடு. பெருமை மிக்க தமிழ் எழுத்தாளனை ஒன்று கூட்டி அதை கேடயமாக பயன் படுத்தி குற்றவாளி ராஜபக்சே தப்பிக்க முயற்சி செய்கிறான்.
உன் ரத்த உறவுகளை கொன்று உன் நிலத்தில் புதைத்தவன் உன்னையே துரோகியாக்கும் நகர்வுதான் கொழும்பு மாநாடு.
புறக்கணித்து தமிழன்னையின் புதல்வன் என்று நிரூபி.
தமிழ் தேசிய தலைவரின் தம்பி என்பதை குற்றவாளிக்கு உணர்த்து
தமிழ் எழுத்தாளனும் அவன் தமிழும் ஒரு போதும் தமிழர்களுக்கு எதிராக நிற்காது என்பதை சிங்களனுக்கு உரத்து சொல்
உன் முடிவில்தான் உன் இனத்தின் விடியல் இருக்கிறது என்பதை மறந்து விடாதே
உலகம் உன்னை உற்று நோக்குகிற நேரம் சபலப்பட்டு விடாதே
மாநாட்டை புறக்கணித்து மானமுள்ள தமிழினத்தின் பெருமையை உலகுக்கு பறைசாற்று என்று தமிழ் எழுத்தாளர்களை தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு அன்போடு கேட்டுகொள்கிறது .
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்,
தலைமைச் செயலகம்,
பிரித்தானியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக