28 செப்டம்பர் 2010

நீதவான் குடிபோதையில் பெண்கள் விடுதியில் புகுந்து அட்டகாசம்!

அதிக குடிபோதையில் இருந்த நீதவான் விடுதியில் பணியாற்றும் இளம்பெண்களின் ஓய்வறை, எங்கே இருக்கிறது என்று மோப்பம் பிடித்து அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளார். கடமையிலிருந்த பாதுகாப்பு ஊழியர்களை இதனைத் தடுக்க முயற்சித்தபோது ஏற்பட்ட வாய்த்தரக்கத்தினால் ஆத்திரமடைந்த நீதவான், தான் ஒரு நீதவான் என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் எனவும் கூறி அந்த ஊழியர்களைத் தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து நீதவான் களியாட்ட விடுதிக்கு வெளியே வந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சூடு நடத்தி அந்த ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக குறித்த களியாட்ட விடுதி முகாமைத்துவம் கொள்ளுப்பிட்டி காவல்துறையில் முறைப்பாடு செய்து சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினருக்கு அந்த நீதவான், ஜனாதிபதியுடன் தமக்குள்ள உறவைத் தெளிவுபடுத்தினாராம் ! அவ்வாறு கூறிக்கொண்டு தாமும் தன்னுடன் வந்த சக நீதவான்களையும் அழைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தபோது, காவல்துறையினர் அவர்களை பலவந்தமாக கொள்ளுப்பிட்டி காவல்நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன்போது காவல்துறையினருக்கு வாக்குமூலம் அளிக்கவும் நீதவான்கள் மறுத்துள்ளனர்.
தற்பாதுகாப்புக்காக நீதவானுக்கு வழங்கப்பட்டிருக்கும் துப்பாக்கியைக்கூட இவர்கள் இவ்வாறான ஈனச்செயலுக்காக துஷ்பிரயோகம் செய்துள்ளமை மிகவெட்கப்படவேண்டிய ஒருவிடையம். இவர்கள் போன்றோரிடம் இருந்து மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைத்திருக்கும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக