13 செப்டம்பர் 2010

தமிழீழத்தின் விடுதலை நோக்கி, தொடரும் நீதிக்கான தார்மீக நடைப் பயணங்கள்…! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…..!


இலங்கை அரசினால் கடந்த வருடம் ஈழத்தமிழ் மீது மக்கள் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு போரில், உடல், உள, வாழ்வியல் ரீதியில் இன்று வரை மீளமுடியாது அல்லற்படும் மக்களிற்கு, நீதி வழங்கும் நடவடிக்கைகளில் அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வரும் சர்வதேச மன்றங்களை தட்டியெழுப்பும் வகையில் நீதி தேடி தொடரும் நீண்ட மனிதப் பயணங்கள்…! தமிழீழ மக்களிற்கு, இலங்கை இனவாத அரசினாலும், அதன் இராணுவ, காவற்றுறை, புலனாய்வுத் துறை படைகளினாலும் ஏற்படுத்தப்பட்டன வழிப்புக்கு எதிரான சட்டங்களுக்கு முறனான குற்றங்களுக்கும் மானிடத்திற்கு எதிரானகுற்றங்களுக்கும் போர்க் குற்றங்களிற்கும், தமிழீழ மக்கள் இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கும் பேரவலங்களிற்கும், சர்வதேசத்திடம் நீதி கேட்டு, சர்வதேச சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும், மனித நேய உணர்வாளர்களின் மகத்தான விடுதலை நோக்கிய அமைதி வழி செயற்பாடுகளை, நாடுகடந்த அரசாங்கம் வரவேற்று ஆதரவளிக்கிறது! அந்த வகையில் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் நாள் கனடா ரொரன்ரோ நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் 5 மாணவர்கள் சமாதானத்தை நோக்கி ஒபரா வின்ப்பிரேயை சந்திக்கழூ என்று அமெரிக்கா சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கி, கடும் குளிர் காலத்தில் 60 நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
அண்மையில் யூலை 2010ல் திரு.சிவந்தன் அவர்கள் பிரித்தானியாவில் இருந்து, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயலகத்தை நோக்கி «நீதிக்கான நடை» என்று கடும் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
 இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
 மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
 தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.என்கிற கோரிக்கைகளை முன் வைத்து பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய தமிழ் மக்களுக்கான அடுத்த நீதிப்பயணத்தை மேற்கொண்டிருக்கும்,
திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ், ஆகியோருக்கு, அவர்களின் இந்த மனித நேய முயற்சி அதன் இலக்கினை எட்டவும், இந்த நீதிக்கான நடைப் பயணத்தை ஒருங்கமைத்தோருக்கும் நாடு கடந்த அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
மனித நேய உணர்வாளர்களின் மகத்தான விடுதலை நோக்கிய இத்தகைய செயற்பாடுகள் தொடரப்பட வேண்டும், என்பதில் நாடுகடந்த அரசாங்கம் தனது அக்கறையை வெளிப்படுத்துகின்றது.

செயலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக