விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டதாக கூறுபவர்கள் எல்.டி.டி.இ. இயக்கத்துக்கு மீதான தடையை நீட்டிப்பது ஏன்? என்று வைகோ கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் ஓவியர் புகழேந்தியின் போர் முகங்கள் என்ற ஓவிய கண்காட்சி நடந்து வருகிறது. இதை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஓவியர் புகழேந்தி உலகின் மிக சிறந்த ஓவியர் ஆவார். இந்த ஓவியங்கள் இலங்கை தமிழர்கள் இந்திய அரசு உதவியோடு வல்லரசு உதவியோடு கொல்லப்பட்டதை உலகுக்கு உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளது. இதை பார்த்தால், ஈழத்தமிழர்கள் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த ஓவியங்கள் மூலம் தமிழ்ஈழ ஆதரவை ஏற்படுத்த வேண்டும்.
23 வருடங்களுக்கு முன் அதே நாளில் திலீபன் இறந்தார். அந்த ரத்தம் உறையவில்லை. விடுதலை புலிகளின் எண்ணம் வீண் போவது இல்லை. தமிழ் ஈழம் அமைத்தே தீரும்.
தற்போது இலங்கை அரசு தமிழர்களே இல்லாத நிலையை ஏற்படுத்த முயன்று வருகிறது. இலங்கையில் ஈழத் தமிழர்கள் பகுதியில் உள்ள இந்து சிவன், முருகன் கோவில்களில் புத்தர் சிலையை வைத்து வருகின்றனர். இதன்மூலம் ஈழத்தமிழர்கள் வாழ்ந்த இடத்தை அழித்து இலங்கை தீவாக மாற்றும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில் விடுதலைப்புலி இயக்கத்துக்கு மீதான தடையை மட்டும் நீட்டிப்பது ஏன்?
இதுகுறித்தான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயத்தில் நான் வாதாடினேன். இந்த தீர்ப்பாயத்தில் மத்திய அரசு மூலம் தமிழக அரசு சார்பில் அரசிதழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் விடுதலைப்புலிகள் தமிழ் ஈழத்துடன் தமிழ்நாடும் ஒரு பகுதி என்று கூறியுள்ளனர். எனவே தமிழ் ஈழம் அமைந்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்கள். இது பச்சை துரோகம்.
விடுதலைப்புலிகள் எந்த ஒரு தீர்மானத்திலும் எந்த ஒரு பகுதியிலும் தமிழ் ஈழத்தின் ஒரு பகுதி தமிழ்நாடு என குறிப்பிடவில்லை.
இலங்கை தமிழர்கள் அனைவருமே விடுதலைப்புலிகள் என நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் எங்கும் செல்ல முடியவில்லை. இதனால் ஈழத்தமிழர்கள் உலக அனாதையாகி விட்டார்கள்.
விடுதலைப்புலி மீதான தடையை நீக்கினால், ஈழத் தமிழர்கள் இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து உலகுக்கு வெளிபடுத்துவார்கள் என்பதால் தடை நீடிக்கிறது. தனி ஈழம் அமைந்தே தீரும் ராஜபக்சேவை போர் குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம் என்றார்.
அண்ணாச்சி சும்மா வாய கொடுக்காதீங்க. கொலைவெறியனுக்கு உலக நாடுகள் குடுக்கிற மரியாதைய நீங்க பாக்கில்லிங்களா? ஐநா ஐயா பதவிக்காக கோவணத்தையே கழட்டிட்டு கட்டிப்புடிச்சிக்கிட்டிருக்கிறாரு. இனிமே என்ன கொலைக்கார அண்ணாச்சி திரும்பவந்து மிச்ச சொச்சதமிழனையும் அழிச்சிட்டு ஒங்க அரச ஆதரவோடஇமயமலக்கி தவமிருக்க போனாலும் போயிடுவாரு இத எல்லாம் கண்டுக்காதீங்க. "வெறும் வாய்ச் சொல்லில் வீரரடி". ஒங்க ஊர்கரங்க யாரோ சொன்னாப்பல நியாபகம்.
பதிலளிநீக்கு