
இதேவேளை, 18ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனநாயக விரோத விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசின் சார்பில் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் விளக்கமளித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்றில் செய்தி வந்துள்ளது.
மேலும், மேற்படி கண்டனத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளியிட்டபோது, மாநாட்டில் எட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும் பிரசன்னமாகியிருந்தார் என்றும் அறியப்படுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிப்பதற்காக பிரதி சொலிஸ்டர் ஜெனரல்கள் இருவர் ஜெனிவாவுக்கு தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக