23 செப்டம்பர் 2010

கனடா சிறைச்சாலை அதிர்ந்தது: குரல் எழுப்பி புதுவகைப் போராட்டம்!

கடந்த மாதம் சன் சீ கப்பம் மூலமாக சுமார் 490 தமிழர்கள் கனடா சென்றடைந்தனர். இலங்கை அரசின் தொடர்ச்சியான அழுத்தம், மற்றும் மாறிவரும் கனடா அரசின் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக இவர்களை இன்னும் அடைத்துவைத்து விசாரித்து வருகிறது கனேடிய அரசு. இவ்வாறு அடைத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளில் குழந்தைகளையும் சிறுவர்களையும் உடனடியாக விடுதலைசெய்யவேண்டும் என பல மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் தொடர்ச்சியாக கனேடிய அரசைக் கோரிவருகின்றனர்.
இன் நிலையில் கனடா வன்கூவரில் இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாமிற்கு வெளியே ஒரு புதுவகையான போராட்டம் இடம்பெற்றுள்ளது. கன்டிய மக்கள் சில ஒலிபெருக்கி மூலமாகவும், மற்றும் சத்தங்களை உருவாக்கும் ஊது குழல்களைக் கொண்டு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். எவ்வளவு பாரிய சத்தங்களை எழுப்ப முடியுமோ அவ்வளவு பெரிய சத்தங்களை அவர்கள் எழுப்பி, தமிழர்களை விடுதலைசெய்யக் கோரியுள்ளனர். இதனால் தடுப்பு முகாமே அதிர்ந்துள்ளதாக அறியப்படுகிறது.
அதிகாரிகளின் அன்றாட வேலைகள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும், அதேவேளை நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக என்று, அவர்கள் நடத்திய போராட்டத்தால் , எங்களுக்காக போராட சிலராவது உள்ளனர் என அகதிகள் நம்பிக்கை அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கனடாவில் தஞ்சம்கோரியுள்ள அகதிகளை திரும்ப நாடு கடத்தவேண்டும் என்ற அழுத்தங்கள் எழுந்துவரும் நிலையில், இவ்வாறான போராட்டங்கள் தமிழ் அகதிகளுக்கு நம்மிக்கை ஒளியை கொடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக