15 செப்டம்பர் 2010

சுப்பிரமணியசாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும்!

அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் மதிமுகவின் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மாநாட்டிற்கு தலைமையேற்றார். மாநாட்டில் 15ஆயிரம் தொண்டர்கள் குவிந்தனர். இம்மாநாட்டில் மதிமுக துணைபொதுச்செயலாளர் மல்லைசத்யா பேசினார். அவர், ‘’எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சிப்புயல், உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் சென்று உரையாற்றிவிட்டு வந்துள்ளார். ஐநா சபையிலும் உரையாற்றிய பெருமை எங்கள் தலைவனுக்கு உண்டு. இது ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாருக்கும் கிடைக்காத அறிய வரலாற்று நிகழ்வுகள். அவர் உரையாற்றாத ஒரே இடம் தமிழக சட்டமன்றம்தான். விரைவில் அங்கேயும் உரையாற்றுவார்’’என்று பேசினார். அவர் மேலும், ‘’இலங்கை மண்ணில் தனித்தமிழ் ஈழம் கேட்டுப்போராடும் மக்களுக்கும், போராளிகளின் உரிமைப்போராட்டத்திற்கு ஆதரவளித்ததால் இங்குள்ள சுப்பிரமணிய சாமி எங்கள் தலைவர் வைகோவை நாடுகடத்தவேண்டும் என கூறியுள்ளார். ஈழத்தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் சுப்பிரமணியசாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும்’’என்று ஆவேசமாக பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக