28 செப்டம்பர் 2010

கிழக்கில் முஸ்லீம்கள் தமிழர்களின் காணியை சுவீகரிக்க பிள்ளையான் உதவுவதாக மக்கள் விசனம்.

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்காக ஈரான் உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீடமைப்புத் திட்டமொன்றுக்கு அப்பிரதேசத்திலுள்ள பெரும்பாலான தமிழர்கள் தமது எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்களின் காணிகளில் முஸ்லிம்களுக்காக ஈரானின் உதவியுடன் 70 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என ஆரையம்பதி பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் செயலாளரான மகேந்திரலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்
ஏற்கனவே தமது பிரதேசத்தில் முஸ்லிம்களின் குடியேற்றம் காரணமாக தமிழ் கிராமங்களுக்கிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆரையம்பதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
இந்த குற்றச்சாட்டை மகளிர் மற்றும் சிறுவர் விவகார துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மறுக்கிறார்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான மற்றும் பள்ளிவாசலுக்குரிய காணிகளிலேயே இந்த வீடுகள் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இது தொடர்பாக கருத்துரைக்கையில் “வீடமைப்பு திட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஒரு சாரார் இதனை நிறுத்தக் கோருவது கவலைக்குரியது” என்றார்.
பிள்ளையான என்றால் இப்படிச் சொல்ல மாட்டார். முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனே இவ்வாறு அரசிற்கு சோரம் போவதாக மக்கள் கவலை வெளியிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக