உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்துவ அடையாளங்களை நாம் பேணிக் காப்பாற்ற வேண்டும் அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக்கூடாது உரிமையுடன் வாழ வலுவான போர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும் என அனைத்துலகத் தொடர்பகம் - தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
26/09/2010
தமிழீழம்
எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே!
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் வழியில் தொடர்ந்து போராடுவோம்
இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்பு தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராகக் காலி முகத் திடலில் நடந்த சத்தியாகத்துடன் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போர் ஆரம்பிக்கிறது. காடையர்களின் தாக்குதலில் அன்று தமிழன் சிந்திய குருதி இன்று கண்ணீராகப் பாய்கிறது.
திலீபன் என்பது காலம் காலமாக இடைவெளியின்றித் தொடரும் போர்முறை. இதனால் எமது விடுதலைப் போர் தடங்கலின்றித் தொடரும் ஈழத்தமிழர் வாழ்விலும் உணர்விலும் தடுமாற்றமும் தளம்பலும் நிலவுகின்றன. எதிர்காலம் பற்றிய திகைப்பும் அச்சமும் எம்மைப் பீடித்துள்ளன சொந்த மண்ணை இழந்து எதிலிகளாக நாடு கடந்து நாடு தாவி அலைகிறோம்.
உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்துவ அடையா ளங்களை நாம் பேணிக் காப்பாற்ற வேண்டும் அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக் கூடாது உரிமையுடன் வாழ வலுவான போர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும்.
போராடினால் எமது உரிமைகள் எம்மை வந்து சேரும் எமது விடுதலைத் தாகம் எமக்குத் துணை நிற்கும் சவால்கள் நிறைந்த காலகட்டம் என்பது உண்மை சாவல்களைச் சமாளிக்கும் வலுவாய்ந்த ஆற்றல் எமக்கு இருப்பது அதினிலும் உண்மை.
எமது குரல் வலுவடைய வேண்டும் எமது கவன ஈர்ப்புப் போராட்டங்கள், பிரசார உத்திகள், கருத்துப் போர்கள், எமது இனக் கோரிக்கையை வலுப்படுத்தும் வழித் தடங்கள் கூர்மை பெற வேண்டும் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் பெயரால் நாம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் நிட்சயம் வெற்றி ஈட்டித்தரும்.
திலீபன் ஈழத்தமிழர்களின் போர் முறை பொது மானுடத்திற்கும் பொருத்தமான விடுதலை வழிகாட்டியாக அது இடம்பெறுகிறது. திலீபன் ஒரு சொல் மாத்திரமல்ல அது நலிவுற்ற இனங்களின் ஒட்டுறவாலும் இன்ப துன்பங்களாலும் உருவாக்கப்பட்ட உறுதியான விடுதலை பாதை.
சத்திய விரதம் மேற்கொண்டு வீர வரலாறாகிய தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் எமது மாவீரர்களின் இலட்சியம் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக