27 செப்டம்பர் 2010

40 ஆயிரம் பேர் குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சம்பவம் எங்கேயும் நிகழ்ந்ததுண்டா?

லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா அரங்கில் மத்திய, மாநில அரசுக ளின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார்.
அவர், ’’ உலகில் தமிழன் நாதியற்றவனாகி விட்டான். இந்திய தேசிய இனங்களில் தமிழனை தவிர வேறு மொழிக்காரர்கள் இலங்கையில் அழிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவை இந்த உலகமே கண்டிருக்கும்.
வெள்ளை கொடி ஏந்திவந்த தமிழர்கள் ஈவு, இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்தது உண்டா?’’என்று பேசினார்.
அவர் மேலும், ‘’தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட முழுஅளவில் முன்வரவில்லை. மக்களி டமும் போராட்ட குணம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆண் கள் மதுப்பழகத்திற்கும், பெண்கள் டி.வி. சீரியல் களுக்கும் அடிமையாகி விட்டனர். இதன் மூலம் அவர்கள் கலாச்சார சீரழிவுக்கு இழுத்து செல்லப்படுகிறார்கள்.
லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியாக பதிவு பெற்றுள்ளது. கட்சி அங்கீகாரம் பெற்றவுடன் கூட்டணி வைப்போம். வரும் தேர்தலில் வாக்கு எந்திரத்தை பயன்படுத்த கூடாது. அதன் மூலம் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லாமல் போய்விடும். ஜனநாயகமும் கேள்வி குறியாகிவிடும்.
எனவே மீண்டும் தமிழகத்தில் வாக்குச்சீட்டு முறையினை அமல்படுத்த வேண்டும். அதற்கு எதிர்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்’’என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக