ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக நேற்று
இடம்பெற்ற கூட்டத்தில் சிறிலங்கா குழுவுக்கும் அனைத்துலக மன்னிப்புச்சபையின்
ஐ.நாவுக்கான பிரதிநிதி பீற்றர் ஸ்பிளினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம்
இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா தரப்பு பக்கநிகழ்வை வழங்கிய ஜாவிட் யூசுப், ராஜீவ விஜேசிங்க, ஜீவன் தியாகராஜா ஆகியோரை, “நாயும் குதிரைக்குட்டியும் விளையாட்டு“ விளையாடுவதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி ஸ்பிளினர் குறிப்பிட்டார்.
இதற்கு சிறிலங்கா தரப்பு கோபத்துடன் பதிலளித்தது.
ஸ்பிளினரின் கருத்தை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட ஜீவன் தியாகராஜா, பக்கநிகழ்வு யாரையும் இகழ்வதற்கானது அல்ல என்றும் ஸ்பிளினர் தவறான முகவருக்கு பணியாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இருதரப்புக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.
அதேவேளை, ஊடக சுதந்திரம், மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக சிறிலங்கா தரப்பு வெளியிட்ட கருத்துக்களை ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய, மற்றும் கொழும்பைச் சேர்ந்த அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளான பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்ணான்டோ, சுனிலா அபயசேகர போன்றோரும் வன்மையாக மறுத்ததால் பல சந்தர்ப்பங்களில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக