ஜே.வி.பியிலிருந்து விலகிச்சென்ற குழுவொன்றினால் ஆரம்பிக்கப்பட்ட முற்போக்கு சோசலிச கட்சிக்குள்ளும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுத்து பண்டார அபேயகோனின் தலைமையிலான ஒரு குழுவும், சேனாதீர குணதிலக்க எனப்படும் மீபான மஹாத்தயா என்பவரின் தலைமையிலும் இரு குழுக்கள் தோற்றியுள்ளதைத் தொடர்ந்து இவர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, முற்போக்கு சோசலிச கட்சியில் அங்கம் வகிக்கும் மக்கள் போராட்ட இயக்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் கெலும் அமரசிங்கவும் தமது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அவர் தற்போது, கட்சியுடன் உள்ளக ரீதியான விவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கட்சித் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக