29 ஏப்ரல் 2012

பிரித்தானியாவை விட்டு வெளியேறுகிறார் பிரசன்ன சில்வா!


சில்வா கொழும்பு திரும்புகிறார்பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் – போர்க்குற்றம் சாட்டப்படும் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இந்தவாரம் கொழும்பு திரும்பவுள்ளார்.
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இந்தவாரம் கொழும்பு திரும்புவார் என்றும் இனிமேல் அவர் பிரித்தானியாவில் பணியாற்றமாட்டார் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரத் திசநாயக்க, உறுதிப்படுத்தியுள்ளார்.
இவரது இடத்துக்கு யாரை நியமிப்பது என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வரும் காலத்தில் வேறு எங்காவது இராஜதந்திரப் பதவி ஏதும் வழங்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
இவரது பணிக்காலம் முடிவடைந்த நிலையிலேயே சிறிலங்காவுக்குத் திரும்புவதாகவும் சரத் திசநாயக்க கூறியுள்ளார்.
இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா இராணுவத்தின் 59வது டிவிசனுக்குத் தலைதாங்கிய மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா போர்க்குற்றவாளி என்றும் அவருக்கான இராஜதந்திர விலக்குரிமையை நீக்க வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரியிருந்தது.
அத்துடன் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தப்பிச் செல்ல இடமளிக்கக் கூடாது என்று குரல் எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக