08 ஏப்ரல் 2014

தமிழரசுக் கட்சிக்கு எதிராக சிங்களவர் வழக்கு!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி நாட்டின் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல் சாசனத்தின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநாடு ஒன்றை அமைக்கும் நோக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி என்ற அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியள்ளார்.
களனியின் பொல்ஹேன என்னும் இடத்தைச் சேர்ந்த எச்.கே.டொன் சந்திரசோம என்பவரே மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.இலங்கைக்குள் தனிநாடு ஒன்றை அமைப்பதனை இலக்காக கொண்டு தனிப்பட்ட நபர்களோ அல்லது அரசியல் கட்சிகளோ செயற்படக் கூடாது என அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்ட மா அதிபா பாலித பெர்னாண்டோ ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்;டுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்சி யாப்பில் தனிநாட்டு கோரிக்கை பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே இந்தக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனுதாரர் உச்ச நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக