15 ஏப்ரல் 2014

சிறீலங்கா தலைமை வகிப்பதால் நிதியை நிறுத்துகிறது கனடா!

இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக பொதுநலவாய அமைப்புக்கான நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையில் நடந்த பொதுநலவாய அமைப்பு மாநாட்டை கனேடிய பிரதமர் ஸ் ரீபன் ஹாப்பர் (stephen harper) புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்து. "இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றல் இன்னும் நிகழாமல் இருப்பது தொடர்பில் கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது." என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேர்ட் (john baird) தெரிவித்துள்ளார். "சிறுவர் திருமணம், சிறுவர் நிர்ப்பந்தத் திருமணம், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சமுதாய வேலைத் திட்டங்கள் என்பவற்றை நோக்கி ஒதுக்கப்பட்டிருக்கும் குறித்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக