06 ஏப்ரல் 2014

விசாரணைகள் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்!

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் 28 வது அமர்வில் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க கூடியவாறாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜெனிவா தகவல்கள் கூறுகின்றன.
2002 ம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரிய தீர்மானம் கடந்த மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கென விசேட நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இவ் விசேட குழு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு தனது விசாரணைகளை துரித கதியில் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 27வது அமர்வின்போது இந்த குழு வாய்மொழி மூலமான அறிக்கையை முன்வைக்கவுள்ளது. இதன் பின்னதாக 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28 வது கூட்டத்தொடரில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக