இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்ட இலங்கையைச் சேர்ந்த இராணுவ வீரர் அமிர்தலிங்கம்- குமாரசாமி நேற்று முன்தினம் 9ஆம் திகதி தனது 97ஆவது வயதில் அக்கராயனில் காலமானார்.1916 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி அன்று மயிலிட்டியில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
1936ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் இராணுவத்தில் இணைந்து இத்தாலியில் உலக மகா யுத்தத்தில் பங்குகொண்டு 1946ஆம் ஆண்டு நாடு திரும்பியே இராணுவத்திலிருந்து விலகினார்.
அப்போதைய காலத்தில் யாழ்.குடாநாட்டில் வசித்ததோடு இராணுவத்தில் இருந்து விலகி தபால் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதோடு முதுமைக் காலத்தில் அக்கராயன் பகுதியில் வசித்து வந்தார். இவரின் இறுதி நிகழ்வுகள் நேற்று 10ஆம் திகதி இடம்பெற்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக