ஈழ மக்களுக்கு படிப்படியாக நீதி கிடைக்கும் என்று, இறுதி யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளருக்காக விசாரணை நடத்திய நிபுணர்கள் குழுவின் தலைவர் மர்சூக்கி தருஸ்மன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் – நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தருஸ்மன் கலந்துக் கொண்டிருந்தார். இதன் போது தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு மேற்கொண்ட விசாரணைகளின் வெற்றித் தன்மை தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு நேரடியாக பதிலை வழங்காத தருஸ்மன், கம்போடிய மக்களுக்கு நீதி கிடைக்க தாமதமான போதும், கட்டம் கட்டமாக அது கிடைக்க செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதன் மூலம் அவர் ஈழ மக்களுக்கும் கட்டம் கட்டமாக நீதி கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக