13 ஜனவரி 2014

"பொங்கலை மக்கள் மறந்துவிட்டார்கள்"வர்த்தகர்கள் புலம்பல்!

தைப்பொங்கலை கூட மறந்து விட்டனர் யாழ் மக்கள் என்று யாழ் நகர் நவீன சந்தை தொகுதி
வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் .
தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கல் வியாபாரத்துக்கென பொருட்களை கடைகளில் வாங்கிக் குவித்துள்ள வர்த்தகர்கள் வியாபாரம் இல்லாது பெரும் நெருக்கடிக்காளாகியுள்ளனர் . இந்த நிலையில் நகர்க்கடைகள் யாவும் மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடி காணப்படுகின்றது .
மேலும் பண்டிகைக் காலங்களில் கிராமப்புறங்களில் கூடுதல் நடைபாதைக் கடைகள் அமைக்கப்படுவதால் நகர்ப்புறக் கடைகளை மக்கள் புறக்கணிப்பதாக வியாபாரிகள் விசனம் தெரிவித்தனர் .
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வியாபாரி ஒருவர் ,
நாங்கள் ஒரு வாரத்துக்கு முன் பொங்கலுக்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்கி குவித்துள்ளோம் . ஆயினும் மக்கள் வருகையும் கொள்வனவும் குறைவாக உள்ளது . இதனால் நாங்கள் பெரும் நஸ்டத்திற்கு ஆளாகியுள்ளதாக நகர்க்கடை வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக