19 ஜனவரி 2014

திருநெல்வேலியில் விரட்டப்பட்ட ஆவணப்படக் குழுவினர்!

எதிர்வரும் மார்ச் மாத ஜெனீவா காய்ச்சலில் அல்லாடிக் கொண்டிருக்கும் இலங்கை அரசு தமிழ் செயற்பாட்டாளர்களை முடக்க சகோதரப் படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்யும் யுக்தியொன்றினை கையில் எடுத்துக்கொண்டுள்ளது. அவ்வகையினில் தமிழ் போராட்ட அமைப்புக்கள் தமக்குள் மோதிக்கொண்டதாக கூறும் ஆவணப்படமொன்றை தயாரிக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டில் டெலோ அமைப்பினரது இந்திய அரச அடிவருடித்தனமான செயல்களையடுத்து விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளினை திரிபு படுத்தி பிரபல ஆவணப்படத் தயாரிப்பாளர் யூட் இரட்ணம் என்பவரது இயக்கத்தினில் இப்படம் தயாராகின்றது. இலங்கை அரசினது ஒட்டுக்குழுவான சிறீடெலோ அமைப்பின் அனுசரணையினில் தயாரித்து வழங்கப்படும் இவ் ஆவணப்படத்திற்கான காட்சிகள் திருநெல்வேலியினில் இன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியார் சிலரை அழைத்து வந்து தமது கிராமத்தினில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட படப்பிடிப்பு தொடர்பினில் கிராம மக்கள் குழப்பமுற்று அவர்களை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளனர். எனினும் பொதுமக்களை அச்சுறுத்தும் பாணியினில் குழுவினர் செயற்பட முற்பட முறுகல் நிலை முற்றியிருந்தது. அதனையடுத்து கிராம மக்கள் குழுவினரை சுற்றி வளைத்து படப்பிடிப்பினை தடுத்துள்ளனர்.
இதையடுத்து தகவல் வழங்கப்பட்டதையடுத்து வருகை தந்த பொலிஸார் படப்பிடிப்பு குழுவினை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர். சம்பவ வேளை சிறீடெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் உதயராசா மற்றும் அப்படுகொலை நடவடிக்கையில் உயிர் தப்பி வெளிநாடுகளினில் அடைக்கலம் புகுந்துள்ள தரப்புக்களைச் சேர்ந்த சிலர் மக்களிற்கு பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எங்களை யாரென தெரியாது விளையாடுகிறீர்கள் படையினர் வந்தால் நடப்பது தெரியுமென எச்சரித்துமுள்ளனர்.
இதனிடையே அப்பகுதி மக்களது கருத்துக்களை குழுவினர் ஒளிப்பதிவு செய்ய முற்பட்ட போதும் மக்கள் அதனை மறுதலித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக