20 ஜனவரி 2014

இலங்கையைப் புறக்கணிக்கும் போராட்டம்!

தமிழகம் அடையாரில் உள்ள நீலகிரி சிறப்பங்காடியை 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டு, இலங்கை பொருட்களை தமிழகத்தில் விற்காதே என்ற முழக்கத்தை எழுப்பி கோரிக்கை வைத்தனர்.
இலங்கையில் தயாராகும் பிஸ்கட், கேக் முதலிய திண்பண்டங்களை நீலகிரி அங்காடி பல ஆண்டுகளாக விற்று வருகிறது. ஏற்கனவே இலங்கை புறக்கணிப்பு குழு, நீலகிரி நிறுவனத்திடம் இப்பொருட்களை விற்கவேண்டாம், இவைகள் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் இருந்து வருகிறது,
அதனால் இப்பொருட்களை விற்று வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்து இருந்தது. இந்நிலையில் நீலகிரி நிறுவனத்தின் தமிழர் விரோத போக்கை கண்டிக்கும் வகையிலும் அந்நிறுவனத்திற்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் நேற்று நீலகிரி கடையின் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் அந் நிறுவனம் உடனடியாக இலங்கை பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தாவிட்டால் அனைத்து நீலகிரி கடைகளையும் தமிழர்கள் நாங்கள் புறக்கணிப்போம் என்ற செய்தி நிறுவன அதிகாரிகளிடம் சொல்லப்பட்டது.
நேற்று நீலகிரி நிறுவனம் தங்கள் வசம் உள்ள இலங்கை பொருட்களை சில நாட்களில் அகற்றுவோம் என உறுதி அளித்தனர். எனினும் தமிழகத்தில் இருந்து முற்றிலும் இலங்கை பொருட்கள் புறக்கணிக்கப்படும் வரை இந்த போராட்டம் ஓயாது என மாணவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக