சிறிலங்கா தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டுமென சிறீலங்காவின் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயலும் போது அமெரிக்கா இவ்வாறு நடந்து கொள்வது சரியல்ல என்றும் அவர் கூறுகிறார்.
சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவென்பது போர்க்குற்ற தூதுவர் ஸ்டீபன் ரொப் வெளியிட்டிருந்த கருத்துகள் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, சிறிலங்கா குறித்த சில தீர்மானங்களை முன்னேரே மேற்கொண்டுள்ளதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
போர்க்கால குற்றங்களையும் சாட்சியங்களையும் தேடுவதால் உள்ளுரில் மேலும் முரண்பாடுகளே தோன்றும். அது நல்லிணக்கத்துக்குத் தடையாகவே அமைந்து விடும்.
இந்த நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உண்மையை கண்டறியும் குழுவை போன்ற மாற்று முறைமையை சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காக ஆராய வேண்டுமென்றும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது, சிங்கள இனவாதிகள் பல நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். பல பள்ளிவாசல்கள், பெளத்த பிக்குமாரினால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மஹிந்த அரசாங்கத்தின் மீதான ஹக்கீமின் அக்கறை முஸ்லிம் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக