09 ஜனவரி 2014

சர்வதேச சமூகத்தின் உதவி தேவை-இராயப்பு ஜோசப்

அமெரிக்க போர்க்குற்ற விசாரணை குழுவினர் யாழ் மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் மற்றும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோரை நேற்று பி.ப 3மணியளவில் ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் அமெரிக்க போர்க்குற்ற விசாரணையின் விசேட தூதுவர் ஸ்ரிபன் ராப் கருத்து தெரிவிக்கையில்
தாங்கள் வந்ததன் முக்கிய நோக்கம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையில் 2009ம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் சில தீர்மானங்கள் எடுப்பதற்காகவும் அது பற்றிய விபரங்களை திரட்டுவதற்காகவே வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் யாழ் ஆயர் தோமஸ் கருத்து தெரிவிக்கையில் போர் முடிவுற்று 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும் வழமையான நிலைக்கு மக்கள் திரும்பவில்லையென்றும் மாகாண சபையின் மூலம் மக்களின் எதிர்பார்ப்பு திருப்தியாகாமல் ஒரு முறுகல் நிலையே தற்போதும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த யுத்த காலப்பகுதியில் குண்டுத் தாக்குதல் மூலம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மனிதக் கேடயமாகவே மக்கள் பயன்படுத்தப்பட்டனர்.மேற்படி போர்க்குற்ற வலயங்களிலே மக்கள் அதிகமாக கொல்லப்பட்டுமுள்ளனர். அத்தோடு மக்களின் இன அழிப்பையும் காணி அபகரிப்பையும் அரசு செய்து வருகிறது.மற்றும் காணாமல் போனோர் பற்றிய விசாரணை கொண்டு வரப்பட வேண்டும்.; தமிழ் அரசியலை தளம்பல் நிலைக்கு கொண்டு வரவே குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.அவை முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இங்கு இராணுவத்தினரே அதிகம் உள்ளனர் சிவில் நிர்வாகம் தேவை.
போரின் இறுதிக் கட்டத்தில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், இரசாயன ஆயுதம் என்பவற்றை படைகள் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் சண்டையில் எப்போது எங்கே பாவித்தார்கள் என்பதையும் மக்கள் எமக்கு விபரித்துள்ளனர். அதனை அமெரிக்க தூதுவரிடம் கையளித்துள்ளோம் னெவும் தெரிவித்தார்.
மேலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்ய கூட முடியவில்லை எனவேதான் நாட்டிற்கு உண்மையும் நல்லிணக்கமும் உருவாக வேண்டுமானால் சர்வதேச சமூகம் எமக்கு ஒத்துழைப்பும் உறுதியும் அளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக