கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியான பிரான்ஸ் - தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதியின் படுகொலைத் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பிரென்சு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறிலங்காவினை அடையாளமாக் கொண்ட இருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரென்சு குற்றத்தடுப்புக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என குற்றத்தடுப்பு நீதித்துறையினரை மேற்கொள்காட்டி பிரென்சு ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பகல் முதலாம் நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் நபர் இரவு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் 33 வயதினைக் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சந்தேக நபர்களை மையமாக கொண்டு படுகொலையின் பின்னணி குறித்த விசாரணைகளை குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அடிப்படை மனிதவுரிமைகள்,அரசியல் சனநாயக உரிமைகளைப் பேணும் ஜரோப்பிய நாடொன்றில் தனிமனிதப் பாதுகாப்பிற்கு உத்தரவாதமின்மை, பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வினை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கின்ற நிலையில் உரிய விசாரணையொன்றினை நடத்தி குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-பிரதிநிதிகள் பிரென்சு அரசுத்தலைவர் -தலைமை அமைச்சர் - உள்துறை அமைச்சர் வெளிவிவாரத்துறை அமைச்சர் உட்பட பிரென்சு உயர்நீதித்துறையினை நோக்கி அவசர கோரிக்கையொன்றினை கடிதமூலம் அனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக