காலா காலமாக நடைபெற்று வருகின்ற பெருந்தோட்ட இந்திய வம்சாவளி இன அழிப்பு நடவடிக்கையில் தற்போதைய அரசாங்கத்திற்கு முக்கிய பங்கு உள்ளதென ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளி இன அழிப்பபு மலையக சமூகத்தின் பாரிய சமூக, அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே இதனை உணர்ந்து மலையக அரசியல் தலைமைகள் இன அழிப்பிற்கு எதிராக சிந்தித்து சமூக வாழ்வாதாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் விடை காண முன்வரவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து மலையக தோட்ட பகுதிகளில் இயங்கும் அரச வைத்தியசாலைகளில் கர்ப்பத்தடை சம்பந்தமாக விஷேட பிரிவுகள் இயங்குவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், வேறு எந்த நோய்க்கும் இவ்வாறு விஷேட பிரிவுகள் பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் இயங்குவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலம் குறித்து பலமுறை மத்திய மாகாண சபை அமர்வில் தனி நபர் பிரேரணை சமர்ப்பித்து மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரதி பலன் மிகவும் மோசமான அடிமைத்தனத்திற்கு பெருந்தோட்ட இந்திய சமூகத்தை கொண்டு செல்லும் எனவும் மாறாக சமூக, அரசியல் மாற்றத்தின் மூலம் இந்த அவலம் மாற்றப்பட வேண்டுமெனவும் முரளி ரகுநாதன் கோரியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக