25 மே 2012

சிறிலங்கா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்த அமெரிக்காவின் 2011ம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.200பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 44 பக்கங்களில் விபரிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் மைக்கல் போஸ்னரும் இணைந்து நேற்று வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் அதிபரும், பாராளுமன்றமும் மக்களால் தெரிவு செய்யப்பட்டாலும் அதிபரின் குடும்பமே ஆட்சியில் முழு ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இரண்டு சகோதரர்கள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொருளாதார அமைச்சு என இரு நிறைவேற்று அதிகாரமுள்ள பதவிகளை வைத்துள்ளனர்.
மூன்றாவது ககோதரர் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக உள்ளார். அதிபரின் மகன் உட்பட அவரது உறவினர்கள் முக்கியமான அரசியல் மற்றும் இராஜதந்திர பதவிகளில் உள்ளனர். அதிபர் மற்றும் நாடாளுமன்றத தேர்தல் இரண்டுமே தேர்தல் சட்டங்களை மீறிய மோசடியாகவே இடம்பெற்றன. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளினதும் அரச ஆதரவுக் குழுக்களும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளையும், கடத்தல், கப்பம் கோரும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளதால் அங்கு மனித உரிமை மீறல் பிரச்சினைகள் பெருமளவில் காணப்படுவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற குழுகள் பொதுமக்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் ஆகியோரை துன்புறுத்தி வருகின்றனர். ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தல்களுக்குள்ளேயே செயற்படுகின்றனர். இலங்கையில் காணாமல் போனோல் பிரச்சினை முன்னைய ஆண்டுகளை போலவே காணப்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அதற்கு எவ்வித பொறுப்புக்களும் கூறப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்திருப்போரை சித்திரவதை செய்கின்றனர். பொதுமக்கள் பலர் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்படுபவர்களில் சிலர் விசாரணையின் போது மரணமாகியுள்ளனர்.நீதி விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுகின்றனர். கருத்து வெளியிடுதல், ஊடக சுதந்திரம், ஒன்றிணையும் சுதந்திரம், ஒன்று கூடும் உரிமை நடமாடும் சுதந்திரம் என்பவற்றுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிரான பாகுபாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.
மனித உரிமை மீறல்களால் எண்ணிலடங்காத தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள், படையினரின் சித்திரவதைகள், ஊழல் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அதிகாரபூர்வமாக தண்டிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஏனெனில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பிருப்பதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மே 2012

மனித உரிமை விவகாரங்களில் நேர்மையில்லாத உலக நாடுகள்!

உலகின் பெரும்பாலான நாடுகள் மனித உரிமை விவகாரங்களில் நேர்மையாகச் செயற்படவில்லை என
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பில், உலக நடுகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ள அவ்வமைப்பு, 91 நாடுகளில் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதெனவும், 101 நாடுகளில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதெனவும், சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்காவிலும் இடம்பெற்ற மனித உரிமைக்கான ஜனநாயகப் போராட்டங்களை, பல நாடுகள் சந்தர்ப்பவாத அடிப்படையில் பயன்படுத்திக் கொண்டதாகவும், சிறிலங்கா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலீல் செட்டி, பக்கச்சார்பான முறையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்களை உலக நாடுகள் வெளியிடுவது பொருத்தமற்றது எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை நான் பார்த்தேன்!

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரும் அறிந்த ஒரு விடையம். இது இராணுவத்துக்கும் தெரிந்த தகவல்
தான். தலைவரின் பாதுகாப்பை இப்படையணியூடாகப் பாதுகாத்து வந்தவர்களுள் மிக முக்கிய நபராக சொர்ணம் கருதப்படுகிறார். ஆனால் பலர் அறிந்திருக்காத விடையம் ஒன்று உள்ளது, ஏன் ..விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் கூட இதனை அறிந்திருக்கவில்லை எனலாம். அது என்னவென்றால் 2002ம் ஆண்டு இம்ரான் பாண்டியன் படையணி பிரிக்கப்பட்டு, அதில் உள்ள சிலரைக் கொண்டு ராதா வான்காப்பு படையணி பலப்படுத்தப்பட்டது. பின்னர் அப்படையணியே தலைவரின் பாதுகாப்பை கவனித்துவந்தது.
இவர்களுக்கே சைவர் (0 0) இலக்கத்தில் ஆரம்பிக்கும் தகடுகள் வழங்கப்பட்டது. (விடுதலைப் புலிகள் தங்கள் கழுத்தில் நச்சுக் குப்பியோடு சேர்த்து இத் தகடுகளை அணிந்திருப்பது வழக்கம்) இவ்வாறு சைவர் தகடுகள் வழங்கப்பட்ட போராளிகளே முள்ளிவாய்க்கால்வரை தேசிய தலைமையை பாதுகாத்து வந்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை தான் கண்டு அவரோடு பேசியதாக, சைவர் இலக்க தகட்டுடன் போராடி பின்னர் மீண்டு வந்துள்ள போராளி ஒருவர் அதிர்வுக்குத் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இருந்து, நந்திக்கடல் பக்கமாகச் செல்ல ஒரு பாதை இருப்பதாகவும், அப்பாதையில் உண்டியல் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோவில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கறுப்பு நிறம் கொண்ட, சேறு சகதிகளில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளில் வந்த பொட்டு அம்மான், கடல் மூடப்பட்டுவிட்டதா என்று தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனூடாக, ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், பொட்டம்மானை தாம் காணவில்லை என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியில் பொட்டம்மான் இருக்கவில்லை என்ற கூற்றுக்களில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. ராதா வான்காப்பு படைப்பிரிவில் இருந்து சிலர் மற்றும் தலைவரின் மகனின் பாதுகாப்பு பிரிவில் இருந்து சிலரும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, இராணுவ முற்றுகையை உடைத்து வெளியேற முற்பட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களை இராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. (இதில் தலைவரின் மகன் சாள்ஸும் அடங்குவார்) இக் குழுவில் இருந்த எழில் வண்ணன் என்பவர், தனது சட்டலைட் தொலைபேசியூடாக டென்மார்க்கில் உள்ள உற்ற நண்பரைத் தொடர்புகொண்டு, தாம் சுற்றிவளைக்கப்பட்டதை விபரித்துள்ளார். அச் சுற்றிவளைப்பில் இருந்து தாம் தப்பிக்க முடியாது எனவும், எல்லாம் முடிந்துவிட்டது... ஆனால் போராட்டத்தை புலம்பெயர் மக்களே இனிக் கொண்டு நடத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இருந்து, தன்னுடன் பேசிவிட்டு புறப்பட்ட பொட்டம்மானைப் பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள் என நான் கேட்டேன். போராடுவோம் இறுதிவரை போராடுவோம். கடல் மூடப்பட்டால், பிறிதொரு பகுதியை உடைக்க முடியும் என்று சற்றும் மனம் தளராதவராய் அவர் கூறிவிட்டு, நந்திக்கடல் பக்கமாகச் சென்றார் என்று சைவர் இலக்க தகடு கொண்ட போராளி ஒருவர் மேலும் தெரிவித்தார். தேசிய தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுமார் 600க்கும் மேற்பட்ட போராளிகள் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் இலக்கை அடைந்தார்களா என்பது தான் தனக்குத் தெரியவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் பொட்டம்மான் குறித்து முன்னர் வெளியான பல தகவல்கள் பிழையானவை என்பது மட்டும் தற்போது நிரூபனம் ஆகியுள்ளது எனலாம். அவர் தேசிய தலைவரோடு முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி:அதிர்வு

23 மே 2012

ஜெனிவா தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம்!


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதைக் கூறியிருந்தாலும், தாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று நண்பகல் வொசிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்டிடம், ஹிலாரி கிளின்ரன் – ஜி.எல்.பிரிஸ் சந்திப்பின் இறுதியான விபரங்கள் உள்ளதா என்று கேள்வி எழுப்பட்டது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வூட்ரோ வில்சன் நிலையத்தில் உரையாற்றியபோது அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா நிராகரிப்பதாகக் கூறியதை செய்தியாளர்கள் அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்,
 “சிறிலங்கா சந்திப்புத் தொடர்பாக அழகாகவும் விரிவாகவும் கடந்த வெள்ளிக்கிழமை பேசியதாக நினைக்கிறேன். அப்போது முழுமையான விபரங்களை வெளிப்படுத்தினேன்.
நாங்கள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னால் நிற்கிறோம். அதன்படியே செயற்படுகிறோம். அதையே தொடர்வோம்“ என்று கூறியுள்ளார்.
அதேவேளை நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

22 மே 2012

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபட முடியாது!


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, மாகாணசபை உறுப்பினராகவோ பதவியேற்க முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு அளித்துள்ளார்.
ஆனாலும்,இலங்கையின் அரசியலமைப்பின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவோ அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடவோ முடியாது. பொதுமன்னிப்பு சரத் பொன்சேகாவின் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை மட்டுமே குறைத்துள்ளது.
அவரது சிறைத்தண்டனை குறைக்கப்படவில்லை. அவரது சிறைத்தண்டனைக்காலம் குறைக்கப்பட்டால் தான் அரசியலில் ஈடுபட முடியும். என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சரத் பொன்சேகாவின் குடியியல் உரிமைகளை முழுமையாக மீளப்பெறுவதற்கு அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப் போவதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்று குடியியல் உரிமைகளை இழந்தாலும் கூட, அவற்றை மீளவழங்கும் வகையில் ஒருவருக்கு முழுமையான பொதுமன்னிப்பு அளிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த தற்போதைய அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்தகைய பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.
ஆனால் அத்தகைய முழுமையான பொதுமன்னிப்பு சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

21 மே 2012

கிலாரியிடம் பொய் கூறினார் பீரிஸ்!

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்தித்தபோது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உண்மையான தகவல்களை கூறவில்லை என்றும் அவர் புள்ளிவிபரங்களைத் திரித்துக் கூறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஹிலாரி கிளின்டனுடன் நடத்திய பேச்சுக்களுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த போது, நாட்டின் ஏனைய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதமாககு இருக்கும் போது, போருக்கு பின்னரான காலகட்டத்தில் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 22.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொருளியல் ஆய்வாளரான முத்துக்கிருஸ்ண சர்வானந்தா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கருத்து புள்ளிவிபர தகவல்களை திரிபுபடுத்தி, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரோபாய வழிமுறையாகவே கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
“ஹிலாரி கிளின்டனுடனான சந்திப்பின் போது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு சில புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான தகவல்களையும், வடமாகாணத்தை பொறுத்தவரையில் வேறு சில புள்ளிவிபரங்கள் அடிப்படையிலான தகவல்களையும் அவர் வழங்கியுள்ளார்.
சிறிலங்காவின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 2010ம் ஆண்டு கூடுதலான வளர்ச்சியை கண்டுள்ளது உண்மைதான்.
என்றாலும், இது புது விடயம் அல்ல. போர்நிறுத்த காலத்தில் கூட இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டது.
ஆனால் போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்ட அந்த பொருளாதார வளர்ச்சி நிலைத்து நிற்கவில்லை.
அதேபோல் வடமாகாணத்திலும் பொருளாதார வளர்ச்சி தொடருமா என்பதும் கேள்விக்குறியே.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியதில் சற்றுக் கள்ளத்தனம் இருப்பதாக தான் கருதுகிறேன்.
அரசியல் விவகாரங்கள் மற்றும் மனிதஉரிமை விபரங்களை திரிபுபடுத்திக் கூறும் தற்போதைய ஆட்சியாளர்களின் பரப்புரை உத்தியாகவே பீரிசின் கருத்துக்கள் உள்ளன.
சிறிலங்கா அரசு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி தான் முக்கியம் என்று பரப்புரை செய்து வருகிறது.
அதற்காக வெளிநாடுகளிடமிருந்தும் உதவிகளை வெளிப்படையாக கேட்டு வருகிறது.
அதனை ஆதரிக்கும் வகையில் இப்படியாக திரிபுபடுத்தப்பட்ட புள்ளிவிபரங்களை வெளியிட்டு அவர்களை தவறான வழியில் நம்ப வைக்கும் நடைமுறையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதே கருத்தையே ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 மே 2012

இனவழிப்பு குற்றவாளிகளில் ஒருவரான சரத்பொன்சேகா விடுதலையாகிறார்!

இனவழிப்பு குற்றவாளிகளில் ஒருவரான சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றிரவு கையெழுதிட்டுள்ளதாக ‘சிலோன் ருடே‘ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு கட்டாருக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் சிறிலங்கா அதிபர் இந்த ஆவணங்களில் கையெழுத்திட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் நாளை நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும் என்றும் அதன்பின்னர் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

19 மே 2012

அஞ்சலிக்கே தடைபோடும் நீங்கள் எவ்வாறு பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள்?


அமரத்துவம் எய்திய எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடத் தடைபோடும் நீங்கள் எப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறீர்கள்? என வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியாவில் நேற்று நடைபெற்ற முள்ளிவாய்க்காவில் மரணமடைந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கேள்வி எழுப்பினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா கிளை இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கினார். நிகழ்வில் வீ.ஆனந்தசங்கரி, வினோநோகராதலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்குத் தலைமைதாங்கி உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
"முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் எய்திய எமது மக்களுக்கு மூன்றாவது ஆண்டாகவும் நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை இதே மண்டபத்தில் நடத்துகின்றோம். சிவப்பு வர்ணத்தில் துண்டுப்பிரசுரம் மூலமாகவும், வவுனியாவின் பலபாகங்களில் திடீர் வீதிச்சோதனைகளை ஏற்படுத்தியும் இன்னபிற யுக்திகளைக் கையாண்டும் எமது மக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலத்துவதைத் தடுப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் எமது மக்கள் அத்தனைத் தடைகளையும் தகர்த்தெறிந்து தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற இங்கு கூடியுள்ளனர்.
இங்கு ஏராளமான உளவுத்துறையினர் கூடியுள்ளீர்கள். நிழற்படம் மற்றும் காணொளிகளை எடுக்கின்றீர்கள். அஞ்சலி செலுத்திய தாய்மார்களும் சகோதரிகளும் கண்ணீர்விட்டு அழுவதையும் ஊடகத்துறையினரின் ஒளிப்பதிவுக் கருவிகள் அவர்களை நோக்கித் திரும்பியதை நீங்கள் பார்த்ததுடன் பதிவும் செய்திருக்கிறீர்கள். இதனை ஜனாதிபதியிடம் காண்பியுங்கள். இவ்வளவு சோகத்தைத் தேக்கி வைத்து அவர்கள் மனத்துக்குள் குமுறுவது அவர்களின் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். இனியாவது எமது மக்கள் அஞ்சலி செலத்துவதைத் தடுக்க வேண்டாம் என்று அவருக்கு விபரித்துச் சொல்லுங்கள்.
நாங்கள் எமது மக்கள் மீண்டும் ஆயுதப்போராட்டத்திற்குப் போவதற்காக இந்நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை. இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த மக்களின் ஆத்ம சாந்திக்காகவே இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். அவர்கள் தமது கவலை மற்றும் துக்கங்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களது மனப்பாரத்தை இறக்கிவைத்து, ஒரு புதிய ஜனநாயக அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் இந்நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளோம்.
இந்நிகழ்வைத் தடுப்பதினூடாக நீங்கள் எங்களை மீண்டும் மீண்டும் துன்பத்தில் ஆழ்த்துகின்றீர்கள். எங்களது அஞ்சலியைக்கூடச் செலுத்தவிடாமல் தடுக்கும் நீங்கள் எப்படி எங்களது பிரச்சினையைத் தீர்க்கப்போகிறீர்கள்?
இன்று ஒரு முக்கியமான நாள். எமது நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்க வெளியுறவு அமைசச்ர் கிலாரி கிளிண்டனை இன்றுதான் சந்திக்கின்றார். இந்தச் சந்திப்பையும் இந்தநாளையும் ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால் இதன் உட்பொருள் நன்கு விளங்கும்.
முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் சிந்திய கண்ணீரும், செந்நீரும் இன்று சர்வதேச சமூகம் எம்மைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. எமது பிரச்சினை அவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக இந்த அரசாங்கம் முன்பைவிட மோசமான அடக்குமுறைகளைக் கட்டவிழித்துவிட்டுள்ளதுடன், எம்மை அடிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
இந்த அரசு காணிஸ்வீகரிப்பு, மீன்பிடிப்பதற்குத் தடைவிதித்தல், எமது பகுதிகளில் வலுக்கட்டாயமாக புத்தகோயில்களை நிறுவுதல், திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துதல், போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு எம்மை எமது பாரம்பரிய நிலப்பரப்பிலேயே சிறுபான்மையினராக்கும் நிகழ்ச்சிநிரலை மேற்கொண்டுள்ளது. இதற்கு வசதியாக சிங்கள அதிகாரிகளை நியமிக்கின்றது.
இவற்றிற்கெதிராக நாம் ஜனநாயகரீதியில் குரல்கொடுப்பதற்கு எமது அமைப்பு வலுவானதாக இருக்க வேண்டும். ஆனந்தசங்கரி கூறியதுபோல் தமிழ் மக்களின் அரசியல் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான அமைப்பாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் திடசங்கற்பம் ஏற்க வேண்டும். அதுவே நாம் முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் எய்திய எமது உறவுகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு சிவசக்தி ஆனந்தன் உரையாற்றினார்.
முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் அடைந்தவர்களுக்கான மூன்றாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று வவுனியாவிலும் நடைபெற்றது. அதன்போது ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களது ஆன்மா சாந்தியடைய தீபமேற்றி வழிபட்டனர் மெழுகுவர்த்தி தீபமேற்றிய பெண்கள் சோகம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுத காட்சி அனைவரையும் நெகிழச்செய்தது. ஆண்கள் தங்களது துக்கத்தையும் சோகத்தையும் நெஞ்சில் சுமந்தபடி தீபமேற்றினர்.
இதன்போது உரையாற்றிய சிவாஜிலிங்கம், சர்வதேச போர்க்குற்ற விசாரணையே முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களுக்கான நியாயமான தீர்வாக அமையும். அரசியல் தீர்வு என்பது எமது அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக மட்டுமே அமையும். சர்வதேச போர்க்குற்ற விசாரணையே மரணித்த மக்களுக்கான உண்மையான நீதியை வழங்க முடியும் என்று கூறினார்.  

18 மே 2012

படைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் யாழ்,பல்கலையில் அஞ்சலி நிகழ்வுகள்!


ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3ம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.
போரில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கும் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கும் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவர்கள் சார்பாக மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கலந்து கொண்டன இவ்வஞ்சலி நிகழ்வில், மாணவ மாணவிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு பேராசிரியர் ஒருவரும் உரையாற்றினார்.
இதேவேளை, இவ்வஞ்சலி நிகழ்வினை ஒழுங்கு செய்த மாணவர் ஒன்றியச் செயலாளர் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் எவையும் தடையின்றி நடைபெற்றன.

லண்டன் விவாதத்தை எட்டரை இலட்சம் பேர் பார்த்தனர்!

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசபடைகள் நடத்திய போர் முடிவுக்கு வந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், சிறிலங்கா விவகாரம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், அதற்கான பொறுப்புக்கூறல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியன குறித்தும், போருக்குப் பிந்திய நல்லிக்க சூழல் குறித்தும் அனைத்துலக அளவில் விவாதங்கள் எழுந்துள்ளன.
முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் போர் குறித்து அனைத்துலக அளவில் விவாதங்கள், கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன், அனைத்துலக ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
“சிறிலங்கா - நல்லிணக்கமும் நீதியும்“ என்ற தலைப்பில் நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் விவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
பிபிசியில் ‘ஹாட்ரோக்‘ நிகழ்ச்சியை வழங்கும் ஸ்டீபன் சக்குர் இந்த விவாதத்துக்குத் தலைமை தாங்கினார்.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கல்லும் மக்ரே, தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளர் ஜான் ஜனநாயகம், அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ராஜீவ விஜேசிங்க, சிறிலங்கா அதிபரின் இணைப்பாளர் அருண் தம்பிமுத்து ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
இந்த விவாதம் அனைத்துலக அளவிலான பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விவாத அரங்கம் முன்பதிவுகளால் ஏற்கனவே நிறைந்து விட்டதால், விவாதத்தை இணையத்தில் நேரலையாகப் பார்க்குமாறு புரொன்ட்லைன் கிளப் அறிவித்திருந்தது.
நேற்று முன்தினம் இரவு பிரித்தானிய நேரப்படி இரவு 7மணிக்கு ஆரம்பமாகி சுமார் 2 மணிநேரம் இடம்பெற்ற இந்த விவாதத்தை 844,042 பேர் இணையம் மூலம் நேரலையாகப் பார்வையிட்டுள்ளனர்.
இதுவே இந்த விவகாரம் அனைத்துலக அளவில் எந்தளவுக்கு கவனத்தைப் பெற்றுள்ளது என்பதற்காக ஆதாரமாக அமைந்துள்ளது.
அதுவேளை போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியுள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையிலும், பொறுப்புகூற வலியுத்தியும், அனைத்துலக ஊடகங்கள் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
புரொன்ட்லைன் கிளப்பில் இடம்பெற்ற விவாதத்தை பார்வையிட இங்கே சொடுங்குங்கள்- http://www.youtube.com/watch?v=VBcVbFeuVtg

17 மே 2012

மே 18 மாலை 6.10மணிக்கு சுடரேற்றுங்கள்!-யாழில் “மே 18 இயக்கம்”!


May copyபோரில் ஆகுதியாகிப்போன எம் தமிழ் உறவுகளை நினைந்து மே 18ஆம் நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி அதனை கடைப்பிடிக்க உறுதி பூண்டுள்ளோம் அதன் முதல் படியாக இந்த ஆண்டு அனைத்து மக்களையும் தமது வீடுகளில் மாலை 6.10 மணிக்கு விளக்குகளை ஏந்தி நினைவேந்தல் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இருந்து மே 18 என்ற இயக்கம் என்ற பெயரிலான அமைப்பு அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கின்றது.
அந்த அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைக்கான அறிமுக மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டம் மே-18ஆம் நாள் முள்ளிவாய்க்காலில், அதற்கு முன்னதான பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களின் காவெடுப்புகளுடன் முடிவுக்கு வந்தது. ஆனால், அதற்கான ஆற்றுப்படுத்தல்களையோ ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளையோ முன்னெடுக்க முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் கடந்த மூன்றாண்டுகளாகத் தவித்து வருகிறார்கள்.
அரசியல்வாதிகளால் கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்க முயற்சிக்கப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இராணுவத்தின் அடக்குமுறைகளால் நசுக்கப்பட்டன. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து ’18 மே இயக்கம்’ ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.
போரில் ஆகுதியாகிப்போன எம் தமிழ் உறவுகளை நினைந்து மே 18ஆம் நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி அதனை கடைப்பிடிக்க உறுதி பூண்டுள்ளோம் அதன் முதல் படியாக இந்த ஆண்டு அனைத்து மக்களையும் தமது வீடுகளில் மாலை 6.10 மணிக்கு விளக்குகளை ஏந்தி நினைவேந்தல் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
என்று தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு,
18 மே – கரிநாள்
தமிழர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட  வன்துயரங்கள் ஊடாகப்  பயணித்த காலம்  மூன்றாண்டுகளைக் கடக்கின்றது. முள்ளிவாய்க்காலில் மூர்ச்சையாகிப் போனவைகளுக்கு  எந்தப் பெறுமதியையும் தராத உலகம் நம்மை  வெறுங்கையோடு பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கின்றது.
இந்த அலைந்துழல்வு வாழ்க்கைப் பாகத்தில் நம்மிடம்  எஞ்சியிருப்பதெல்லாம் எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான்.   முள்ளிவாய்க்கால் பறித்துக் கொண்டவைகளிலிருந்து மிச்சமாய்   இருக்கும் அந்த நினைவுகளையாவது நாம்  இறுகப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம்.  இழந்தவைகளும் அதன் துயரவலிகளும் அந்த நினைவுகளால்  ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம்.
ஆறாத வடுவாகி நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 40000 தமிழ் உயிர்களைத் தின்றது. இந்தக் கணிப்பு ஐ.நாவினுடையது. களத்தில் நின்ற தமிழர்களுக்குத் தெரியும் இன்னும் எத்தனை ஆயிரம் கொலைகள் சமநேரத்தில் நிகழ்ந்தனவென்று. தாயின் கருவில் இருந்த  சிசு தொடக்கம், நாளை கட்டையேறத் தயாராயிருந்த மூத்தோர் வரைக்கும் கண்மூடித்தனமாகக்  கொன்றொழித்தவர்கள் வெற்றியைக் கொண்டாடுகையில், நாம் ஒன்றுகூடி ஒரு துளிக் கண்ணீரைக் காணிக்கையாக்கும் வழி வகையின்றி நிற்கிறோம். இந்தக் காயங்களை    சொற்களுக்குள்அடக்கி விடமுடியாது.  நம் அவலத்திற்கு மொழியில்லை. அதனால்தான் அது இன்னமும் மௌனித்தே கிடக்கின்றது.
இந்த  நாள்களில், நம்மிடம்  இருக்கும் துயர்  வலிமைபெறவேண்டும்.  முள்ளிவாய்க்கால் தந்த  துயர நினைவுகளை  நினந்துருகுதல்  அந்த வலிமையைத் தரும் கணங்களாக இருக்கும். மே 18 இல் முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைத்து மக்களின் மரணப் பெறுமதியையும் கனதியாக்கி, அன்றைய தினத்தை கரிநாளாகக் கடைப்பிடிப்போம். அதற்காக உங்கள் வீடுகளில்  மே 18 ஆம் திகதி மாலை 6.10 மணிக்கு சுடரேற்றுங்கள்.  அந்தக் குறுகிய  வன்முறை வெளியில் தம்மை  ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்காக ஒரு நிமிட   மௌன வணக்கத்தைச்   செலுத்துங்கள். இந்த நாள்களில்  மௌனித்த  ஆன்மாக்கள் மேன்மை பெறட்டும். நமக்கு வலிமை தரட்டும்.
நன்றி

அனோமா பொன்சேகாவை தேடிச்சென்று சந்தித்தார் மகிந்த!


சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
நேற்றுமாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, அவசரமாக லண்டனில் இருந்து திரும்பிய ரிரான் அலஸ் நேற்றுக்காலை அலரிமாளிகையில் சிறிலங்கா அதிபரை சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.
இதையடுத்தே ரிரான் அலசின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்திய பின்னர் ரிரான் அலஸ், நவலோகா மருத்துவமனைக்குச் சென்று சரத் பொன்சேகாவை சந்தித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் பொன்சேகா விரைவில் விடுவிக்கப்படுவார்“ என்று கூறியிருந்தார்.
“சில சிறிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இன்றுகாலை நான் சிறிலங்கா அதிபரைச் சந்தித்தேன். இந்த விடுதலை தொடர்பாக எந்தவொரு தரப்பும் நிபந்தனை விதிக்கவில்லை“ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ரிரான் அலசின் வீடு தேடிச்சென்று அனோமா பொன்சேகாவைச் சந்தித்திருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது விடுதலை தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் தானோ தனது குடும்பத்தினரோ மண்டியிடப் போவதில்லை என்று சரத் பொன்சேகா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அனோமா பொன்சேகாவை அலரி மாளிகைக்கு அழைத்துப் பேசும் முயற்சிகள் தோல்வி கண்ட நிலையிலேயே, அவரைத் தேடிச்சென்று மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் இவ்வாறு படியிறங்கிப் போனது ஏன் என்ற கேள்வி கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

16 மே 2012

தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டும்-மனோ கணேசன்.


ஆண்டாண்டுகாலமாக சிறைவாழ்க்கை வாழும் தமிழர்களதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களதும் கண்ணீரை துடைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
சரத் பொன்சேகா சிறைக்கு போக முன், சிறை வாழ்க்கை அனுபவிக்க தொடங்கிய தமிழ் அரசியல் கைதிகள், இனி சரத் பொன்சேகா விடுதலை ஆன பின்னரும் தொடர்ந்து சிறையில் இருக்கப்போவது, ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயம் அல்ல.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பான போராட்டங்களில் நாம் தொடர்ந்து பங்களித்துள்ளோம். இன்று அவர் விடுதலை செய்யப்படுவதற்கான சூழல் உருவாகி இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் எமது மகிழ்ச்சி முழுமையானது அல்ல.
நீண்ட காலமாக கொழும்பு, கண்டி, நீர்கொழும்பு, அனுராதபுரம், யாழ்ப்பாணம், பூசா ஆகிய சிறை கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறை கைதிகள் பிரச்சினை முற்று பெறுவதன் மூலமே அரசியல் கைதிகள் பிரச்சினை இந்நாட்டில் முழுமையாக முடிவுக்கு வர முடியும்.
சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு அமெரிக்க, இந்திய அரசுகளின் அழுத்தங்கள் காரணம் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் கைதிகளின் மிக நீண்ட நாள் பிரச்சினைகளுக்கும் அமெரிக்க, இந்திய அரசுகள் உரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தை இந்நாடு புரிந்து கொள்ள வேண்டும். மலையகம், வட-கிழக்கு, கொழும்பு ஆகிய அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த தமிழர்கள் பலர் பயங்கரவாதத்திற்கு ஒத்தாசை புரிந்தார்கள் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள்.
இவர்களில் ஒரு சிலர் மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலர் தொடர்பான விசாரணைகள் முடிவடையவில்லை. இன்னும் சிலரின் வழக்குகள் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்படுகின்றன. இதில் பெண்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இந்து-கிறிஸ்தவ மத துறவிகளும் இருக்கின்றார்கள்.
திருமணம் செய்த நிலையில் சடுதியாக கைது செய்யப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். பலரது இளமைகாலம் முழுக்க சிறையில் முடிந்து போயுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுபவர்களும் இருக்கின்றார்கள்.
இவர்கள் அனைவரையும் ஒரேயடியாக ஒரே தினத்தில் விடுதலை செய்யுங்கள் என நாம் கோரவில்லை. இவர்கள் தொடர்பில், விசேட நீதி மன்றம் அமைக்கப்பட்டு, துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீண்ட நாட்கள் சிறையில் இருந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். ஏனையோர் புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட வேண்டும். இதுவே மக்கள் கண்காணிப்பு குழுவின் கோரிக்கை.
இந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அக்கறைகொள்ளும்படி எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கோரியுள்ளேன். கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் இது தொடர்பில் அக்கறை காட்ட வேண்டும்.
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசாங்கத்திற்கு இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டு வரும்படி கூட்டமைப்பு சொல்ல வேண்டும். இது தொடர்பில் உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும்படி நான் இன்று இலங்கையின் அமெரிக்க, இந்திய தூதுவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் நீடிப்பு?

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி தருமாறு, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா பொதுச்சபையிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அவர் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பணியாற்ற இணங்கியுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனின் பணியகம் அறிவித்துள்ளது.
தென்னாபிரிக்க நீதியாளரான நவநீதம்பிள்ளை, 2008ம் ஆண்டில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளராகப் பதவியேற்றிருந்தார்.
இவர் இந்தப் பதவியை ஏற்க முன்னர், நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அமர்வின் நீதியாளராக பணியாற்றியிருந்தார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டு வரும் நவநீதம்பிள்ளை, பாரபட்சமாக நடந்து கொள்வதாக சிறிலங்கா அரசினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருபவராவார்.
நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைவதையிட்டு சிறிலங்கா நிம்மதியடைந்திருந்த நிலையில், அவருக்குப் பதவிநீடிப்பை வழங்க பான் கீ மூன் அனுமதி கோரியிருப்பது சிறிலங்காவை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

15 மே 2012

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கும் தீர்வு வேண்டும்-அமெரிக்கா!

சர்வதேச உதவிகள் மூலம் பொருளாதார அபிவிருத்தி குறித்து அக்கறை காட்டி வரும் இலங்கை, அதேஅக்கறையோடு போர் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த அரசியல் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.. 
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் ஜெனிவா தீர்மானம் தொடர்பான செயல்திட்டங்கள் பற்றி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கேள்வி எழுப்பவுள்ளார்.. 
இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ள அமைச்சர் பீரிஸ் இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய கருத்தரங்கில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் கலாநிதி போல் காட்டர் இதனை தெரிவித்தார்.. 
அவர் மேலும் கருத்து தெரிவிக்ககையில்: தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசி இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அது பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. 
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த போதிய கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டது. எனினும் கால அவகாசம் போதாது என இலங்கை அரசு கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் தேவைகள் நிவர்த்தி செய்யத் தவறியமையே இனப்பிரச்சினை ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது... 
ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நல்லிணக்கம் ஏற்படுவதாக அமையும். எனினும் இந்த அறிக்கையில் பொறுப்புக் கூறல், சர்வதேச மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை தொடர்பாக போதியளவாக இல்லை என்பது எமது கருத்தாக உள்ளது. 
ஆணைக்குழுவின் சிபார்சுகளை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த தவறியதன் காரணமாகத் தான் அமெரிக்கா உள்ளிட்ட 39 நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தீர்மானத்தை நிறைவேற்றின. இந்த விடயம் தொடர்பாக சில ஊடகங்களும் சிலரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வந்தனர்.  
இந்தப் பிரேரணையில் மூன்று முக்கிய விடயங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆணைக்குழுவின் சிபார்சுக்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தல், இரண்டாவது, விசாரணைகள் மேற்கொள்ளும் செயல்திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும், 
மூன்றாவது, ஐக்கிய நாடுகள் நவநீதம்பிள்ளை இலங்கை அரசுடன் கலந்துரையாடி தொழில் நுட்ப உதவிகளை வழங்குதல் என்பனவாகும். 
இந்த விடயங்கள் தொடர்பாக 2013 இல் இடம்பெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை தடைப்பட்டதற்கு நாம் வருந்துகின்றோம். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளுடன் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்குபற்ற முடியும் என்று கூறியுள்ளது, இதனை நாம் வரவேற்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசித் தான் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும். அரசியல் தீர்வைப் பெற எமது உதவிகளை வழங்குவோம். என்றும் அவர் குறிப்பிட்டார்..

14 மே 2012

சிறீலங்கா தொடர்பான விவாதம் ஒன்று லண்டனில் நடைபெறவுள்ளது!

சிறிலங்காவின் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்‘ என்ற தலைப்பிலான விவாதம் ஒன்று பிரித்தானியாவில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
லண்டனில் உள்ள ஒரே ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன் கிளப்‘ இந்த விவாத நிகழ்வை வரும் 16ம் நாள் மாலை 7 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் சிறிலங்காவில் மரணமாக காரணமாக அமைந்த - 26 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர், முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகியுள்ள நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளும், அதற்கு எவ்வாறு பதிலளிக்கவுள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக ‘புரொன்ட்லைன் கிளப்‘ தெரிவித்துள்ளது.
‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படங்கள் இரண்டும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளின் முக்கியமான ஆதாரங்கள் என்றும், பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களையும் ஏனைய கொடூரங்களையும் இது வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும் ‘புரொன்ட்லைன் கிளப்‘ குறிப்பிட்டுள்ளது.
பிபிசியில் ‘ஹாட்ரோக்‘ நிகழ்ச்சியை வழங்கும் ஸ்டீபன் சக்குர் இந்த விவாதத்துக்குத் தலைமை தாங்குவார்.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கல்லும் மக்ரே, தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளர் ஜனநாயகம், அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ராஜீவ விஜேசிங்க ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிசும் ஒரு பேச்சாளராக் பங்கேற்பார் என்று ‘புரொன்ட்லைன் கிளப்‘பின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்குப் பதிலாக, விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்து பங்கேற்பார் என்று தெரியவருகிறது.
இந்த நிகழ்வுக்கான ஆசனப்பதிவுகள் முடிவடைந்து விட்டதாகவும், இதனைப் பார்க்க விரும்புவோர் http://www.ustream.tv/frontlineclub என்ற இணையத்தளம் மூலம்  நேரலையாகப் பார்க்கலாம் என்றும் ‘புரொன்ட்லைன் கிளப்‘ அறிவித்துள்ளது.

13 மே 2012

வன்னியில் பலியானோருக்கு வவுனியாவில் வணக்க நிகழ்வுகள்!


வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியாக் கிளையினர் மேற்கொண்டுள்ளனர். வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. உயிர் நீத்த அனைவரதும் ஆத்மா சாந்தியடையவும் அவர்களின் குடும்பத்தினரின் துயரங்கள் நீங்கி சுபீட்சமாக வாழவும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன “எமது இறைமையை, வாழ்வுரிமையை அழித்தொழிக்கும் நோக்கில் மானிடமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு எமது உறவுகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால் இன்னமும் அவர்களது இரத்த உறவுகள் அவர்களுக்கான இறுதிக்கிரியைகளை செய்யமுடியாமல் தவிக்கின்றனர். உயிர் நீத்தவர்கள் அனைவரது ஆத்மாக்களும் சாந்தியடையவும், மரணித்தவர்களின் குடும்பங்களின் துயரங்கள் நீங்கி சுபீட்சமான வாழ்வு வாழவும் நாம் அனைவரும் கூட்டாக அஞ்சலி செலுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி வாழ் மக்கள் அனைவரையும் அழைக்கிறது என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்டக்கிளை.

12 மே 2012

சம்பந்தரின் தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கு ஆப்பு!


தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் இரா.சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மட்டக்களப்பில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு எதிர்வரும் 25, 26, 27ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற உள்ளது. 25ஆம் திகதி மாலை மத்திய செயற்குழுவின் கூட்டம் நடைபெறும்.
26ஆம் திகதி காலை மகாநாடு ஆரம்பமாக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் தலைவர், பொதுச்செயலாளர், மூத்ததுணைத்தலைவர், இணைச்செயலாளர்கள், இணைப்பொருளாளர்கள், மற்றும் மத்தியகுழுவும் தெரிவு செய்யப்படும்.
தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர்கள், மூத்ததுணைத்தலைவர்கள், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்பமானவர்கள் மாவட்ட கிளைகள் ஊடாக தங்கள் விண்ணப்பங்களை 15ஆம் திகதி செவ்வாய்கிழமைக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.
27ஆம் திகதி பிரதிநிதிகள் மகாநாடு, தலைமைபேருரை, பிரகடனம் என்பன இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிருக்காது என்றும் மாவை சேனாதிராசாவே ஏகமனதாக தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தலைவர் பதவிக்கு போட்டி இருக்கும் என தெரியவருகிறது.
தற்போது தலைவராக இருக்கும் சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மட்டக்களப்பில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

11 மே 2012

கிளிநொச்சி கொலை குறித்து விசாரணை கோருகிறது கனடா!

 
கிளிநொச்சி கொலை குறித்து கனடா முழுமையான விசாரணை கோருகிறது
 இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் ஒரு கனடிய பிரஜை கொலை செய்யப்பட்டமை குறித்து இலங்கை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக கனடா கூறியுள்ளது.
போர் காலத்தில் தாம் இழந்துபோன தமது குடும்ப சொத்துக்களை மீளப் பெறும் நோக்கத்துடன் கனடாவின் பிரஜையான அந்த இலங்கை தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் அங்கு வந்திருந்தபோது கொல்லப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
கிளிநொச்சி நகருக்கு சற்று வெளியே அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்னும் அந்த நபர் ஒரு குழுவினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இலங்கைக்கான கனடாவின் தூதுவர் புரூஸ் லெவி பிபிசியிடம் கூறியுள்ளார்.
பல வருடங்களாக விடுதலைப்புலிகளின் தலைமையகமாக திகழ்ந்த இந்தப் பகுதி தற்போது இலங்கை இராணுவத்தின் கடுமையான பாதுகாப்பின் கீழ் உள்ளது.
கடந்த வாரம் நடந்த இந்தக் கொலை குறித்து ஒரு முழுமையான புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், அதனை கனடா தொடர்ச்சியாக அவதானித்துவரும் என்றும் தான் முறைப்படியான ஒரு குறிப்பை அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ளதாக லெவி அவர்கள் கூறியுள்ளார்.
முகமூடி அணிந்த நபர்கள் மகேந்திரராஜாவை தாக்கியதை கிராமத்தவர்கள் பார்த்ததாகக் கூறப்படுவதாக ஊடகச் செய்திகளும், வடக்கில் உள்ள செய்தி ஆதாரங்களும் கூறுகின்றன.
அவர் தனது கொலையாளிகளிடம் இருந்து தப்புவதற்காக போராடியுள்ளார். அவரது ஆணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் கடைகளை வைத்திருந்த செல்வந்தரான அவரது குடும்பம் போர் காலத்தில் கனடாவுக்கு சென்று குடியேறியுள்ளது.
ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட இவரது சொத்துக்கள், தற்போது இலங்கையின் பிரபல அங்காடி கடைகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் மற்றும் ஏனைய சிலரின் கைகளில் இருக்கின்றன.
தனது காணியை மீளப்பெறுவதற்காக இலங்கை வந்த அவர், அதில் ஒரு கட்டடத்தைக் கட்டிக்கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இவர் இராணுவத்துடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக சில செய்திகள் கூறுகின்றன. ஊடகமான தமிழ்நெட், இவரது நடமாட்டத்தை இராணுவ புலனாய்வுத்துறையினர் கண்காணித்து வந்ததாகத் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து அதிகமான கருத்துக்களைக் கூற மறுத்த பொலிஸ் தரப்புப் பேச்சாளர், இந்த விடயம் குறித்த புலனாய்வுகளில் 4 புலனாய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரையும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று பிபிசியிடம் கூறினார்.
நாடு திரும்பவிரும்பும் அகதிகளை வரவேற்று அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் இந்த வாரத்தில் கூறியிருந்தது. ஆனால், இப்படியான சம்பவங்கள் அகதிகள் திரும்ப வருவதை தவிர்க்கச் செய்யும்.
நன்றி BBC

மன்னார் ஆயர் மீது சி.ஐ.டி.அதிகாரிகள் விசாரணை!?


மன்னார் ஆயர் இராயப்பு ஜேசெப் மீது இலங்கை அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடுமையான விசாரணைகளை நடத்தியுள்ளார்கள். போரின் இறுதிக்காலப் பகுதியில் 1,46,679 பேர் காணாமல் போயிருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக அவர் சாட்சியமித்தமை தொடர்பாகவே இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல்போன 146,679 பேர் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என தன்னுடைய சாட்சியத்தின் போது மன்னார் ஆயர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய குற்றப் புலனாய்வுத் திணைக்க அதிகாரிகளிடம், நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக தான் சமர்ப்பித்த எந்த அறிக்கையை வேண்டுமானாலும் சமர்ப்பிப்பதற்கு தயாராக இருப்பதாக ஆயர் தெரிவித்தார்.
காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆயர் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கின்றாரா என அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த ஆயர், மதகுரு ஒருவர் கூட காணாமல் போயிருப்பதாகவும், ஆனால், காணாமல்போன அவருடய நிலை தொடர்பாகவுமே தான் அக்கறைப்படுவதாக ஆயர் பதிலளித்தார்.
போர்க் காலத்திலும், அதன் பின்னருமான வன்னிப் பகுதியின் சனத் தொகை விபரங்களைத் தருமாறு சி.ஐ.டி. அதிகாரிகள் கேட்டபோது அதற்குப் பதிலளித்த ஆயர், இந்த விபரங்களை ஒவ்வொரு மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிராந்தியச் செயலகங்கள் மற்றும் கிராமசேவகர்களிடம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்தார். 146,679 பேர் காணாமல் போயுள்ளார்கள் என்ற தகவலைக்கூட அரசாங்க ஆவணங்களில் காணப்படும் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக்கொண்டே தான் வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயருடைய வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவு செய்துகொண்ட அதிகாரிகள், இறுதியில் அதனை அவருக்கு வாசித்துக் காட்டி அவரது கையொப்பத்தையும் அதில் பெற்றுச் சென்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வுத் திணைக்க அதிகாரிகள் ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்திருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விசாரணை இடம்பெற்ற போது ஆயருடன் மேலும் பல கத்தோலிக்க மதகுருக்களும் காணப்பட்டனர். ஆயருடன் காணப்பட்ட ஏனைய மதகுருக்களின் பெயர் விபரங்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பெறப்பட்டது. ஆயரை இரண்டு அதிகாரிகளே விசாரணைக்கு உள்ளாக்கியதாகவும் அவர்கள் இருவரும் முஸ்லிம்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தமது விசாரணைகளை தமிழ் மொழியிலேயே மேற்கொண்டார்கள்.
மன்னார் ஆயர் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக அளித்த சாட்சியம் குறிப்பாக 1,46,679 பேர் காணமல் போயிருப்பதாக அவர் தெரிவித்திருந்தமை சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்ததுடன், ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடரிலும் முக்கியமாகப் பேசப்பட்டது. தற்போதும் சர்வதேச சமூகம் இது தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்கின்றது.
இவ்வாறு சர்வதேச ரீதியாக நெருக்கடி நிலை ஒன்று உருவாகியிருக்கும் பின்னணியிலேயே ஆயர் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவரது சாட்சியமும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

10 மே 2012

தூதுவர் பதவியை நிராகரித்தார் தாமரா குணநாயகம்!


தூதுவர் பதவியை நிராகரித்தார் தாமரா குணநாயகம்
கியூபாவுக்கான தூதுவர் பதவியை, தாமரா குணநாயகம் நிராகரித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜெனிவாவுக்கான தூதுவராகப் பணயாற்றும் தாமரா குணநாயகம் நேற்றுமுன்தினம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் கியூபாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
இந்தப் பதவியையே அவர் ஏற்க மறுத்துள்ளார்.
விரைவில் வெனிசுவேலாவில் திறக்கப்படவுள்ள சிறிலங்காவின் புதிய தூதரகத்துக்கு தன்னை நியமிக்குமாறு தாமரா குணநாயகம் கோரியுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

09 மே 2012

மாவீரர் துயிலும் இல்லத்தை படையினருக்கு எழுதிக்கொடுத்த பிரதேசசெயலர்!


வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியினை 611 ஆவது படைப்பிரிவினைச் சேர்ந்த இராணுவத்தினரின் பெயருக்கு எழுதி வழங்கிய வவுனியா பிரதேச செயலர் சிவபாலசுந்தரன், காணி உத்தியோகத்தர் வசந்தன் ஆகியோருக்கு படைப்பிரிவின் அதிகாரி மனம் நிறைந்த நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்திருக்கின்றார்.ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லக்காணியில் உள்ள மாவீர்களின் நினைவுத்தூபிகள், கல்லறைகள் என்பன இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு இடிபாடுகள் காணியின் எல்லைப்பகுதிகளின் அரண்களாக குவிக்கப்பட்டுள்ளன.
துயிலும் இல்லக்காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்துவருவதற்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் காணியினை தமக்கு உரித்தானதாக்க இராணுவத்தினர் முடிவுசெய்திருந்த நிலையில் வவுனியா பிரதேச செயலர் அ.சிவபாலசுந்தரனும், காணி உத்தியோகத்தர் வசந்தனும் தாமாகவே முன்வந்து குறித்த காணியினை இராணுவத்தினருக்குச் சொந்தமானது என்று காணி உரிமைப்பத்திரம் வழங்கியிருக்கின்றனர்.
இந்தக் காணி தனியாருக்குச் சொந்தமான காணியாக இருந்தும், உரியவருக்கு இந்தக் காணியை வழங்காமல் பிரதேச செயலாளரும், காணி உத்தியோகத்தரும் படைத்தரப்பினருக்கு உரிய நடைமுறைகளுக்கு மாறாக, அத்தகைய நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் எதேச்சதிகாரமாக வழங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரச அதிகாரியாகிய இந்த பிரதேச செயலர் தான் ஓர் அரசாங்க சார்பு அரசியல்வாதியைப் போலவே நடந்து  கொள்கின்றார் என்றும், பொது மக்கள் மற்றும் தனக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களிடமும் அவ்வாறே நடந்து கொள்கின்றார் என்றும் பொது மக்கள் இவர் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். இவரது முறையற்ற நடவடிக்கைகள், செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களை அடையாளப்படுத்தி வைத்து, அமைச்சர் ஒருவரின் அரசியல் பலத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு, பல்வேறு செயற்பாடுகளின் மூலம் இவர் பழிவாங்கி வருவதனால், தங்களால் இவருக்கு எதிரான முறைப்பாடுகளை நேரடியாகச் செய்ய முடியாதிருக்கின்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏதேனும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விபரம் கேட்பவர்களிடம் மீடியாவில் செய்தி போடவா கேள்வி கேட்கின்றாய், மீடியா இல்லை எந்த வெங்காயத்திலும் எழுது. எனக்குப் பயமில்லை. ஆனால் நீ கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது நான் சொல்வதைக் கேட்டு அதன்படி செய்தால் உனக்கு நல்லது. தேவையற்ற கேள்விகளைக் கேட்காதே என்று அச்சுறுத்துவதும் இவரது வழக்கமாக இருக்கின்றது என்று பலரும் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த காணியில் 611 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதன் திறப்பு நிகழ்வின் போது உரையாற்றிய படைத்துறையின் அதிகாரி குறித்த நபர்களின் பணியினை மனந்திறந்து பாராட்டியதாக தெரியவருகின்றது.
வவுனியாவில் நடைபெறும் சட்டவிரோத மண் அகழ்வு, கருங்கல் உடைத்தல், மரக்கடத்தல், காணி அபகரிப்பு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பிரதேச செயலரும் காணி அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை அவர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் பல அந்நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக வவுனியாவில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

08 மே 2012

போராட்டம்தான் தீர்வைதரும் என்றால் அதற்கும் தயார்!


தமிழர் தாயக பூமியில் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு உடன் தடுத்து நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களை வெடிக்கச் செய்யும் நிர்ப்பந்தத்துக்குள் தாம் தள்ளப்படுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டப் பேச்சுகளில் நம்பிக்கையானதொரு சூழலை உருவாக்குவதற்கு இலங்கை அரசு தவறியுள்ளதால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்தைக் கையாளவேண்டிய அணுகுமுறை குறித்து அவசரமாகக் கூடி ஆராயவேண்டிய தேவைப்பாடு தமக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி தமிழர்களுக்குத் தீர்வை வழங்கவேண்டிய இத்தறுவாயில், இலங்கை அரசு தமிழர்களைக் கொடுமைப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் மற்றும் வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றங்கள் ஆகியவை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியவை வருமாறு:
"இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சுகளை நம்பிக்கையுடன் தொடங்குவதற்கான சாதகமானதொரு சூழலை அது இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. கூட்டமைப்பு இதுவரையில் அரசுடன் முன்னெடுத்து வந்த பேச்சுகளில் அரசு நம்பிக்கையாக நடந்துகொள்ளவில்லை. எமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரினோம். காணாமல் போனோர் குறித்தான விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என அரச தரப்பிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதுமட்டுமன்றி, இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துமாறும் வலியுறுத்தினோம். ஆனால், இவை எதனையும் இலங்கை அரசு செய்து முடிக்கவில்லை. தொடர்ந்தும் அசட்டைப் போக்கிலேயே செயற்படுகின்றது. நம்பிக்கைத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு இலங்கை அரசு இன்னும் முன்வரவில்லை." எனக் கூறிய அவா் தொடர்ந்து,
"நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரினோம். ஆனால், அந்த விடயத்தில் இலங்கை அரசு இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. தமிழ் மக்களின் குறைந்தபட்ச தேவைகளையாவது நிறைவேற்றவேண்டிய தறுவாயில் தமிழர்களை அந்நியர்களாகக் கருதி இலங்கை அரசு கொடுமைப்படுத்துகின்றது. நில ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் எனத் தமிழர் விரோதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் உண்மையான எண்ணம் அரசிடம் இல்லை என்பதை அதன் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. இவ்வாறானதொரு நிலையில், நாம் எப்படித் தெரிவுக்குழு குறித்து சிந்திப்பது? பேச்சுகளில் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தத் தவறிய மஹிந்த அரசை எந்த அடிப்படையில் நாம் நம்புவது?"
"நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் குறித்து என்னால் தனித்து பகிரங்கமாகக் கருத்து வெளியிட முடியாது. சக உறுப்பினர்களுடன் கூடி ஆராய்ந்த பின்னரே இது விடயம் தொடர்பில் உறுதியானதொரு நிலைப்பாட்டைத் தெரிவிக்கமுடியும். எது எப்படியிருப்பினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில் கையாள வேண்டிய அணுகுமுறை குறித்து கூடி ஆராயவேண்டிய தேவைப்பாடு எமக்குள்ளது. ஆனாலும் தெரிவுக்குழு விடயத்தில் எமது நிலைப்பாடு இன்னும் உறுதியாகவே உள்ளது. வடக்கு மாகாணத்தில் மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்திலும் திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்படுகின்றன. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் குடிசன பரம்பல் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே இலங்கை அரசு திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்களைத் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றது என்பது தற்போது தெளிவாகப் புரிகின்றது.குடியேற்றத்துக்கும், குடிப்பரம்பல் விகிதாசாரத்தைத் திட்டமிட்ட அடிப்படையில் சூழ்ச்சிகளை மேற்கொண்டு மாற்றியமைப்பதற்குமிடையில் வித்தியாசம் உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்."
தொழில் நிமித்தம் வடக்குக்கு வரும் சிங்கள மக்கள் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குடியமர்த்தப்படுகின்றனர். தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. இவை எந்த அடிப்படையில் நியாயம்? நில அபகரிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் உட்பட முக்கிய சில காரணங்களுக்குத் தீர்வை வலியுறுத்தி இதற்கு முன்னர் நாம் வவுனியாவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தோம். ஆனால், எமது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. இன்னும் மந்தப் போக்கிலேயே செயற்படுகின்றது. தமிழர் தாயகப் பூமியில் அரங்கேற்றப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு உடன் நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் நாம் தள்ளப்படுவோம்.
போராட்டங்கள்தான் பிரச்சினைக்குத் தீர்வைத் தேடித்தரும் என மஹிந்த அரசு நிர்ப்பந்திக்குமானால் அதனைச் செய்வதற்கும் நாம் தயாராகவே உள்ளோம். அரசின் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து பலமுறை நாம் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். இந்தியாவுடனும் பேசியுள்ளோம். எனவே, இந்தப் பிரச்சினை குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். 

07 மே 2012

போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்!-ஐரோப்பிய ஒன்றியம்


சிறிலங்காவில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது நேர்மையான நீதி விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியாவுக்கான குழுவின் தலைவியான ஜீன் லம்பேர்ட், சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் நிலைப்பாடு.
பல நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களும் ஏனைய அரசியல் கைதிகளும் சிறிலங்காவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியுள்ள போதும் நீதியின் முன் நிறுத்தப்படவோ குற்றச்சாட்டு முன்வைக்கப்படவோ இல்லை என்று தமிழ் அரசியல் கட்சிகள் கூறுகின்றன.
சரத் பொன்சேகா விவகாரத்தில் கூட, அவருக்கு உண்மையான நீதி வழங்கப்பட வேண்டும் என்றே ஐரோப்பிய நாடாளுமன்றம் கருதுகிறது.
போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களிலும் குடியிருப்புகளிலும் வசிப்பது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் கவலை கொண்டுள்ளது“ எனறும் அவர் மேலும் கூறியுள்ளார்.

06 மே 2012

முஸ்லிம்கள் தமிழ், சிங்களப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தனர்!


தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிவாசல் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கல தேரர் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
இலங்கையில் பௌத்தம் 2 300 வருட வரலாற்றைக்கொண்டது. இஸ்லாமியர்கள், இலங்கைக்கு வணிகத்துக்காகவே வந்தனர். ஆண்கள் மாத்திரமே இங்கு வந்தனர். பின்னர் இங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
இதுவே அவர்களின் வரலாறு எனவே அவர்கள் இங்கு வந்து தமது வரலாற்றை காட்டமுடியாது. தம்புள்ளை விஹாரை உலகத்தின் முக்கிய இடங்களில் ஒன்றாக பதிவு செய்யப்படடுள்ளது
இதனை முஸ்லிம்கள் (தம்பிகள்) குழப்பியடிக்க பார்க்கின்றனர்.
அதற்கு இடம்தரமுடியாது. உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவிவருகிறது. ஆனால் பௌத்த அடிப்படைவாதம் எங்கும் இல்லை.
இலங்கையில் 14 மில்லியன் பௌத்தர்கள் உள்ளனர். முஸ்லிம்கள் எத்தனை பேர் உள்ளனர்.தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளில் பௌத்தர்கள் அதிகமாக உள்ளனர். வத்திக்கானில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளமையால் அது கிறிஸ்தவ நாடு என்று கொள்ளப்படுகிறது.
மத்திய கிழக்கில் சில நாடுகள் முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ளமையால் அவை முஸ்லிம் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
எனவே இலங்கையில் வந்து பௌத்த கலாசாரத்துக்கு மத்தியில் தம்முடைய வரலாற்றை முஸ்லிம்கள் நிலைநாட்ட நினைப்பது கொள்ளையாகவே இருக்கும் என்று இனாமலுவே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், குறித்த பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என்று கூறுகிறார். ஆனால் இலங்கையில் இரண்டாவது பிரஜையாக உள்ள பிரதமர் டி எம் ஜயரட்ன, பள்ளிவாசலுக்கு வேறு இடம் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தேரரிடம் கேட்டபோதும், ஜனக பண்டார தென்னக்கோன் ஒரு பொலிஸ்காரராக இருந்தவர். எனவே அவர் தமது பாணியில் பேசுகிறார். அவர் நாடாளுமன்றத்துக்கு அவருடைய தந்தையின் வாக்குகளின் மூலமே தெரிவானார் எனவே அவரின் பேச்சை பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.

05 மே 2012

மூத்த பெண் போராளி தற்கொலை!


வடமராட்சியின் பொலிகண்டிப் பாலாவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால மூத்த பெண்போராளியாக இருந்த இவர் 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான இவர் இடுப்பின் கீழ் செயலிழந்த  நிலையில் காணப்பட்டார். எனினும் 2009 ஆம் ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட இவர் மே 17ன் பின் படையினரால் கைது செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் பொலிகண்டி பாலாவிப் பகுதியில் உள்ள  மீள் குடியேற்ற மக்களுக்கான முகாம் ஒன்றில் தனது பெற்றோருடன் இவர் வாழ்ந்து வந்தார். நேற்றைய தினம் வீட்டின் அறையை பூட்டிக் கொண்ட இவர் தனக்குத் தானே மண் எண்ணையை ஊற்றிக் கொண்டு தீமூட்டி இறந்துள்ளார். இவரது சடலம் மந்திகைப் பொலிசாரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் போராளிகள் பலர் அண்மைக்காலமாக மன உளைச்;சல்கள் காரணமாக சாவைத் தழுவிக் கொள்ளும் பரிதாபகரான நிலை தொடர்வதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டத்தை நான் காட்டிக் கொடுத்ததென்பது அப்பட்டமான பொய்!


தமிழர் விடுதலைப் போராட்டத்தை நான் ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை. அப்படிச் சொல்வது அப்பட்டமான பொய் என விடுதலைப் புலிகளின் ஆயுத முகவராகச் செயற்பட்டுவந்தவரும் தற்போது இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.
யாழ் உதயனின் சகோதரப் பத்திரிகையான "சுடர்ஒளிக்கு' வழங்கிய செவ்வியிலேயே அவர் இப்படிக் கூறினார். அந்தக் கேள்விக்கு அவர் வழங்கிய பதில் இங்கே
கே: தமிழ் மக்கள் மனங்களில் உள்ள முக்கியமான கேள்வியொன்றை நான் கேட்க விரும்புகிறேன். அதை பகிரங்கமாக கேட்டு உங்கள் பதிலையும் பகிரங்கப்படுத்த வேண்டியது எனது ஒரு பொறுப்பு என்றும் கருதுகின்றேன்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் இறுதி நேரத்தில் காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்? நீங்கள் துரோகி என்பது தான் தமிழர்களின் மனநிலை. உங்களின் பதில் என்ன? நீங்கள் குற்றவாளியா, இல்லையா?
ப: பிரபாகரன் என்னும் எனது உயிர் நண்பனுடன் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். நானே அந்த இயக்கத்தை ஆரம்பித்து எனது வாழ்நாளில் 30 வருடத்திற்கும் மேலான காலத்தை அதற்காகச் செலவிட்டிருக்கிறேன்.
நான் ஒரு மரக்கொப்பில் இருந்துகொண்டு அந்தக் கொப்பை நானே வெட்டுவேனா?
முதலாவதாக, ஒரு ஆத்மரீதியான உறவு அந்தப் போராளிகளுக்கும், எனக்குமிடையில் இருந்தது. இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டைப் பார்த்தால் நான் எனது தாயைக் காட்டிக்கொடுத்தது போல் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரேயொரு உயிர் நண்பன் பிரபாகரன். அவரைக் காட்டிக் கொடுத்ததாக சொல்வது அப்பட்டமான பொய். தமிழர்களைப் பொறுத்தவரை போர் ஏன் தோற்றது என்பது புரியாத புதிராக இருக்கிறது. பிரபாகரனை அவர்கள் கடவுளாகப் பார்த்தார்கள். அரசனாகப் பார்த்தார்கள். அவர் தோற்க மாட்டார் என்று அவர்கள் மனதில் வைத்துவிட்டார்கள். திடீரென்று தோற்றுவிட்டார். இதற்கு என்ன காரணம். யாரோ பின்னணியில் இருந்து காட்டிக்கொடுத்துவிட்டார்களோ என்று சந்தேகம். இதில் புலம்பெயர் சமூகத்தில் இருக்கும் ஒருசில குழப்பவாதிகள் கே.பி. தான் இதற்கு காரணமென இலகுவாகக் கூறிவிட்டனர். அதனை அப்பாவி மக்களின் ஒருசிலரும் நம்பி கே.பி. தான் காட்டிக்கொடுத்டதுவிட்டாரோ என்று நம்புகின்றனர்.
நான் மலேசியாவில் ஒரு அறைக்குள் தனியே இருந்தேன். பிரபாகரன் இங்கு எத்தனை தளபதிகள், எத்தனை ஆயுதங்கள் எத்தனை தாங்கிகளுடன் நின்றிருந்தார். நான் மலேசியாவிலிருந்து காட்டிகொடுத்து அவர் போரில் தோற்றார் என்பது நிஜம் அல்லவே! யதார்த்தமாக நீங்கள் சிந்தியுங்கள். கருணா வெளியேறினார். கருணா வெளியேறியவுடன் பிரபாகரன் தோற்றாரா? கருணாவுக்குத் தெரியாத விடயங்கள் எனக்குத் தெரிந்ததா? இல்லையே... கருணா தலைவரின் பக்கத்தில் இருந்தவர். அவர் விலகும்போது அவரால் பிரபாகரனை அழிக்க முடிந்ததா? இல்லையே. இதே குற்றச்சாட்டை முன்வைக்கும் அரசியல்வாதிகள் தான், பிரபாகரன் மீண்டும் வருவார் என்கின்றனர்.
ஒரு பக்கத்தில் கே.பி. காட்டிக்கொடுத்துதான் பிரபாகரன் அழிந்துவிட்டார் என்றும் கூறும் அதே ஆட்கள்தான் மறுபுறம் பிரபாகரன் மீண்டும் வருவார், மீண்டும் போர் வெடிக்கும் என்று கூறுகின்றனர்.
இவர்கள் உண்மையைப் பேசுவதில்லை. அதுதான் முக்கியமான காரணமேயொழிய வேறொன்றுமில்லை. இதை நினைக்கும் போதே மனதுக்கு கவலையாக இருக்கிறது. நான் நேரத்துக்கு நேரம் ஒரு கதை பேசி இருப்பவன் அல்ல. எனது மக்களுக்காக 35 வருடகாலமாக வேலை செய்துகொண்டிருப்பவன்.
இவர்கள் போல் நேரத்துக்கு நேரம் பேசும் மனிதன் அல்ல. அப்படியான சூழலில் நான் வளரவும் இல்லை. அரசியல்வாதிகள் போல் பொய்கூறி நான் மக்களிடம் செல்லவும் இல்லை. இது ஒரு அப்பட்டமான பொய்..
கே: போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தீர்களா என்று நான் கேட்டபோது நீங்கள் பதிலளிக்கையில் உங்களது கண்கள் கலங்குவதைக் கண்டேன். அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது ஏன் அந்த உணர்ச்சிபூர்வம்?
ப: (மீண்டும் கண்கலங்குகிறார்) மனித வாழ்க்கை அற்புதமானது. எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஆனால், இவர்கள் கூறும் அப்பட்டமான குற்றச்சாட்டு. எனது நட்பையே வியாபாரமாக பார்க்கிறது. அது வியாபாரம் அல்ல.... அது அரசியல் அல்ல... அவற்றிற்கும் அப்பாற்பட்டது. ஆத்மரீதியான நட்பு. அதனை இவர்கள் கொச்சைப் படுத்துகின்றனர். (நா தழுதழுக்கிறது) இதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கே: பிரபாகரன் உங்கள் நல்ல நண்பன் என்கிறீர்கள். திரும்பி வரமாட்டார் என்கிறீர்கள். அவரின் மறைவு தமிழர்களின் அரசியல் அல்லது அரசியல் போராட்டத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதா?
ப: அந்த பிரபாகரனின் தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது உண்மை. காரணம் இது அரசியல் போராட்டம் மட்டுமல்ல. அவர் உருவாக்கிய சமூக கட்டமைப்பு பல சீர்குலைந்துவிட்டன. இன்று பார்த்தீர்களானால் யாழ்ப்பாணத்தில் அல்லது வன்னியில் எத்தனையோ சமூக விரோத செயல்கள் மலிந்து போயுள்ளன. ஆனால், அவர் இருக்கும்போது அவை நடக்கவில்லை. தமிழ் மக்களுக்குரிய சரியான தலைமைத்துவம் இல்லாமல் போயிருக்கிறது. அது கவலைக்குரிய விடயம். இதனை நிவர்த்தி செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல.
கே: மக்கள் சேவைக்காக உங்களை அர்ப்பணித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அந்தச் சேவையை ஒருபடி மேலே சென்று செய்வதற்காக அரசியலுக்கு வரும் நோக்கம் எதுவும் இருக்கிறதா?
ப: என்னைப் பொறுத்தவரை நான் இப்போது செய்வது மனிதாபிமான சேவை. அரசியலில் நான் இறங்கும்போது இவை பாதிக்கப்படும். இது வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும். என்னைப் பொறுத்தவரை அரசியலில் நான் நாட்டமில்லாதவன். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதே எனது இலட்சியம். ஆனால், இந்த மக்களைத் தொடர்ந்து தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களும் ஏமாற்றி, வாட்டி வதைப்பார்களானால் நான் சிலதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவேன்.
கே: நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வரப் போகின்றீர்கள் என நான் எடுத்துக்கொள்ளலாமா?
ப: அது நேரடியாகவா, மறைமுகமாகவா என்பதை முடிவாக என்னால் சொல்ல முடியாது. ஆனால், இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஒரு கடப்பாடு எனக்குள்ளது. அது அரசியலில் இறங்கித்தான் செய்ய வேண்டுமென்றால் வேறு வழியில்லை. இறங்கித்தான் ஆக வேண்டும். மக்களைத் தொடர்ச்சியாக இப்படியான அவலத்தில் வைத்திருக்க முடியாது.
கே: தேவைப்பட்டால் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்கிறீர்கள். அது வட மாகாணசபைத் தேர்தலாக இருக்குமா?
ப: ( சத்தமாகச் சிரிக்கிறார்) நீங்கள் பெரிய குண்டையே தூக்கிப் போடுகின்றீர்கள். அப்படி எதனையும் இதுவரை என் மனதில் யோசிக்கவில்லை. இன்றுவரை இல்லை. ஆனால், எனது மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை வந்தால், தொடர்ந்தும் எமது மக்களைத் தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றினால், அதுதான் ஒரே வழியென்றால் நான் மறு பரிசீலனை செய்துதான் ஆகவேண்டும் என்றார். 

04 மே 2012

இளம் நடிகை வேண்டுமாம்?

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் உத்தரவிற்கமைய அமைச்சர் மேர்வின் சில்வாவின் நெருங்கிய சகாவான அமல் ரொட்ரிகோ என்ற நபர் கடத்திச் செல்லப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தைப் பார்த்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆத்திரமடைந்துள்ளார்.
இந்த ஒளிப்பதிவு வாக்குமூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை அவமானப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். அமல் என்ற நபரின் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர்களில் ஒருவரான அமல் ரொட்ரிகோ, வெள்ளை வேனில் கடத்தப்பட்டதை அடுத்து ஜனாதிபதியிடம் ஓடிச் சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா தமது சகாவை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, அமல் என்ற நபரைக் கைதுசெய்திருந்தால் உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
எனினும், மறுமுனையில் பேசிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய,
”இவனிடமிருந்து விசித்திர தகவல்கள் சில கிடைத்துள்ளன. ஒளிப்பதிவும் இருக்கிறது. வேண்டுமாயின் நான் அதனை எடுத்து வருகிறேன். அதனைப் பார்த்துவிட்டு என்ன செய்ய வேண்டுமெனக் கூறுங்கள்.” என தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் சுமார் 6 மணி நேரத்திற்குள் ஒளிப்பதிவு சி.டியுடன் கோதாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.
சில நபர்களுடன் மீடியா அறைக்குச் சென்று  இந்த ஒளிப்பதிவை ஜனாதிபதி பார்வையிட ஆரம்பித்துள்ளார்.
கைகளும், கண்களும் கட்டப்பட்டிருந்த நபர் தூரத்தில் காண்பிக்கப்பட்டார். பின்னர் அவரது முகத்தை திரை முழுவதும் கொண்டுவர அவர் பேச ஆரம்பித்தார்.
”நான் அமல் ரொட்ரிகோ. அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளர். களனி பிரதேசத்திலேயே நான் வசித்து வருகிறேன். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே நான் அதிகம் வேலைசெய்திருக்கிறேன். மகிந்த சாரின் வெற்றிக்கும் பாரிய பங்களிப்பு செய்துள்ளேன்.” என நீண்ட வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து ஒளிப்பாகிய வாக்குமூலத்தின் சிறிது நேரத்தில்
”ஏன் எனக்கு இவ்வாறு செய்கிறீர்கள். அமைச்சர் சொல்வதை எல்லாம் நான் செய்தேன். ‘ஜனாதிபதிக்கு அந்த…… இளம் நடிகை வேண்டுமாம்’ என எனக்கு அமைச்சர் கூறினார். 50 ஆயிரம் ரூபா செலவில் நான் அந்த நடிகை அழைத்துவந்து ஜனாதிபதிக்கு கொடுத்தேன். இவ்வாறு எல்லாம் செய்த எனக்கு ஏன் இப்படி செய்கிறீர்கள்” என அமல் ரொட்ரிகோவின் வாக்குமூலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது, ”இதனை நிறுத்து” எனக் கத்திக் கொண்டு, ஆத்திரமடைந்த மகிந்த ராஜபக்‌ஷ அந்த அறையிலிருந்து வெளியேறினார்.
இதனையடுத்து கோதாபய ராஜபக்‌ஷ அந்த ஒளிப்பதிவு சி.டியுடன் அங்கிருந்து வெளியேறியதாக அலரிமாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

03 மே 2012

3 லட்சம் வாக்குகளோடு திண்டாடும் கொலைக்களங்கள்! தமிழர்கள் என்ன செய்வார்கள் ?


தமிழர்கள் மீதான இலங்கையின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது.
இந்த விருதுக்கு 4 ஆவணப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளபோதும், கொலைக்களங்களுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளை விட அல்ஜசீரா தொலைக்காட்சி ஒன்றின் ஆவணப்படத்துக்கான வாக்குகள் அதிகரித்திச் சென்றுள்ளது. இதனால், இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படும் 2ம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே தமிழர்கள் அனைவரும் உடனடியாகச் செயல்பட்டு தமது வாக்குகளை, இலங்கையின் கொலைக்களங்களுக்கு செலுத்தி அதனை உடனடியாக முன்னிலைப் படுத்தவேண்டும். இதுவே நாம் அதன் தயாரிப்பாளர்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாக அமையும். கீள் காணும் இணைப்பின் ஊடாகச் சென்று உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்யுங்கள்.
http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811  

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு நல்ல படிப்பினை- சிறிதரன்!


Sritharanமேதினக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி துரோகம் செய்து விட்டதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இது நல்ல படிப்பினை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கனடா வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
பேரினவாத கட்சியுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு யாழ்ப்பாணத்தில் நடந்த மேதினக் கூட்டம் நல்ல பாடங்களைக் கற்று தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய மேதின கூட்டம் வரலாற்றில் மிகப்பெரிய தவறு என்றும் தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு தானும் அந்த மேதின கூட்டத்தில் ஒரு பார்வையாளராக கலந்து கொண்டேன் என்றும் சிறிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் மாவை சேனாதிராசாவும், இரா.சம்பந்தனும் உரையாற்றியிருந்தனர். அதேசமயம் இந்தக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு மிகவும் முயற்சிகள் எடுத்திருந்த மனோ கணேசன் இந்தக் கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும், விஜயகலா மகேஸ்வரன், யோகராஜன் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் சிறிதரன் எம்.பி கூறினார்.
இது ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்று ரீதியான துரோகத்தின் ஒரு கட்டமாகவே பார்க்க முடிகிறது என்றும் – நாங்கள் நல்ல பாடங்களை மேதினத்தில் கற்றிருக்கிறோம் என்றும் சிறிதரன் கூறினார். இந்த மேதினக் கூட்டத்தை விஜயகலாவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச பொறுப்பாளர்களுமே ஒழுங்கு செய்ததாக ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு குறிப்பிட்டதாகவும் அவர் கூட்டிக்காட்டினார்.

02 மே 2012

இரு தேசங்கள் ஒருநாடு- த.தே.ம.மு வின் மேதினப்பிரகடனம்!


தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம்  பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.00 மணிவரை கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவா் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
சாமியன் அரசடி சந்தியில் கூடிய மக்கள் அங்கிருந்து ஞானவைரவா் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் ஞானவைரவா் ஆலய முன்றலில் சென்றடைந்தது. அங்கு ஓய்வுபெற்ற காணிப்பதிவாளா் செல்வரட்ணம் தலைமையில் மேதினக்கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனா்.
அங்கு நெல்லியடி விவசாய அமைப்புக்களின் தலைவா் தம்பையா கனகராஐா, இளம் சட்டத்தரணியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவா் இ.எ.ஆனந்தராஐா, பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தலைவா் வின்சன்ற் டீ போல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவருமான திருமதி பத்மினி சிதம்பரநாதன், இளம் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஐா கஜேந்திரன், ஆகியோர் உரையாற்றினா்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்கள் வெளிநாட்டில் இருந்த காரணத்தினால் தொலைபேசியுடாக பெறப்பட்ட அவரது உரை ஒலிபரப்புச் செய்யப்பட்டது.
நிகழ்வு ஆராம்பமாவதற்கு முன்னா், கூட்டம் நடைபெறவிருந்த இடத்திற்கு பெரும் எண்ணிக்கையில் சிவில் உடையில் சென்ற புலனாய்வுத்துறையினரது செயற்பாடுகளால் அங்கு பெரும் பதற்றமும் அச்சமான சூழலும் பரவிக்கொண்டது. அதனால் அங்கு ஏற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தவா்கள் பலா்  அச்சம் காரணமாக விலகிச் சென்றுவிட்டனா். நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது புலனாய்வுப் பிரிவினா் வீடியோ மூலம் அதனைப் பதிவு செய்துகொண்டிருந்தனா். அத்துடன் ஒலி அமைப்பாளரிடம் , கூட்டத்தில் உரையாற்றுபவா்களது உரைகள் அனைத்தையும் பதிவு செய்து தரவேண்டுமென வற்யுறுத்தி பதிவு செய்திருந்தனா்.
பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீா்வானது இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையில் அமைய வேண்டுமென்ற பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

01 மே 2012

ஹிலாரி கிளிண்டனுக்கு தொலைநகல் அனுப்பும் போராட்டம்!


முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இனப்படுகொலையாக அங்கீகரித்தும், வன்னி மக்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று கோரி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன்னுக்கு தொலைநகல் அனுப்பும் போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மே 18 நினைவு நாள் அமெரிக்க ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்த தொலைநகல் அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் இணைப்பாளர் சுபா சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
ருவாண்டா படுகொலைகளின் 19வது நினைவு நாளை முன்னிட்டு அண்மையில் ஹிலாரி கிளின்ரன், அங்குள்ள மக்களுக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொலைநகலை ஹிலாரி கிளின்ரனின் தொலைபேசி இலக்கங்களுக்கும் அதன் பிரதியை வெள்ளை மாளிகைக்கும், சாத்தியமிருந்தால், புலம்பெயர் தமிழர்கள் தாம் வதியும் நாட்டின் அரச தலைமைக்கும் அனுப்புமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கீழ் உள்ள கடிதத்தை தொலைநகலில் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.
ஹிலாரி கிளின்ரனின் தொலைநகல் இலக்கங்கள் 1-202-647-1579 begin_of_the_skype_highlighting            1-202-647-1579      end_of_the_skype_highlighting அல்லது 1-202-647-2283 begin_of_the_skype_highlighting            1-202-647-2283      end_of_the_skype_highlighting, வெள்ளை மாளிகைக்கான பிரதி அனுப்ப வேண்டிய தொலைநகல் இலக்கம் 1-202-456-2461 begin_of_the_skype_highlighting            1-202-456-2461      end_of_the_skype_highlighting.
தொலைநகல் கடிதத்தின் மாதிரிப் பிரதி
 Commemoration of 3rd Anniversary of the May 2009 Mass Murders and Human Rights Excesses Committed by Sri Lankan Government
U.S. Secretary of State Honorable Hillary Rodham Clinton
Department of State, Washington, DC.
Madam Secretary,
On May 18, 2012 the Tamils of Sri Lanka and of the Diaspora will once again solemnly observe the anniversary of the atrocities perpetrated by the Sri Lankan armed forces directed by the Sri Lankan Government.
While three long years have already elapsed since those unspeakable crimes occurred, no meaningful relief is yet in sight for the remaining Vanni Tamils or their dear departed. More than ever, it is now clear that the Government of Sri Lanka possesses neither the will nor the urgency to undertake an inquiry of the necessary magnitude. It is also clear that in the absence of any willingness on the part of the international community to move forward on this issue, there cannot be any credible investigation to find out the truth or to hold the perpetrators to account. There is no reason to hope that the cause of justice or international peace will be served well under such circumstances.
In view of the likelihood that there never will be another credible attempt to ascertain the number of casualties during the Mullivaikkaal atrocities of May 2009, the Tamils of Diaspora hold the figure of 146,679 people disappearing without a trace in the final eight months of war, as extracted by the Bishop of Mannar Dr. Rayappu Joseph from the official records of the Government and those of the UN, as an agreeable estimate of the number of deaths in Vanni in those days. For the confirmation that this number of casualties occurred due to a war directed against the Tamil Population of Vanni on racial and political grounds, we have referenced the Report of the United Nations Secretary General’s Panel of Experts Para. 251, Page 69. Therefore Tamils of the Diaspora conclude and declare that what occurred during the period leading up to and directly following May18, 2009 is an act of genocide, and a crime against humanity.
Madam, Secretary of State, even in this unenviable situation, the Tamils of Sri Lanka and of the Diaspora sincerely recognize your personal efforts to obtain justice for us and are grateful for that effort culminating in the UNHRC resolution A/HRC/19/L.2. The Tamils of Sri Lanka and of the Diaspora also note with appreciation your recently issued message of solidarity with the Rwandan people on the eve of their 19thanniversary of the Rwandan genocide.
Under these circumstances, Madam Secretary, it is my earnest personal request that you please consider issuing a message to mark the sacrifices of the Tamils in Sri Lanka on May 18, 2009 and expressing your hope, as you have always insisted upon, for a genuine reconciliation through executing the obligations of accountability that such grave crimes entail.
Thanking you sincerely in advance for a positive response, Madam.