தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.00 மணிவரை கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவா் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
சாமியன் அரசடி சந்தியில் கூடிய மக்கள் அங்கிருந்து ஞானவைரவா் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் ஞானவைரவா் ஆலய முன்றலில் சென்றடைந்தது. அங்கு ஓய்வுபெற்ற காணிப்பதிவாளா் செல்வரட்ணம் தலைமையில் மேதினக்கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனா்.
அங்கு நெல்லியடி விவசாய அமைப்புக்களின் தலைவா் தம்பையா கனகராஐா, இளம் சட்டத்தரணியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவா் இ.எ.ஆனந்தராஐா, பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தலைவா் வின்சன்ற் டீ போல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவருமான திருமதி பத்மினி சிதம்பரநாதன், இளம் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஐா கஜேந்திரன், ஆகியோர் உரையாற்றினா்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்கள் வெளிநாட்டில் இருந்த காரணத்தினால் தொலைபேசியுடாக பெறப்பட்ட அவரது உரை ஒலிபரப்புச் செய்யப்பட்டது.
நிகழ்வு ஆராம்பமாவதற்கு முன்னா், கூட்டம் நடைபெறவிருந்த இடத்திற்கு பெரும் எண்ணிக்கையில் சிவில் உடையில் சென்ற புலனாய்வுத்துறையினரது செயற்பாடுகளால் அங்கு பெரும் பதற்றமும் அச்சமான சூழலும் பரவிக்கொண்டது. அதனால் அங்கு ஏற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தவா்கள் பலா் அச்சம் காரணமாக விலகிச் சென்றுவிட்டனா். நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது புலனாய்வுப் பிரிவினா் வீடியோ மூலம் அதனைப் பதிவு செய்துகொண்டிருந்தனா். அத்துடன் ஒலி அமைப்பாளரிடம் , கூட்டத்தில் உரையாற்றுபவா்களது உரைகள் அனைத்தையும் பதிவு செய்து தரவேண்டுமென வற்யுறுத்தி பதிவு செய்திருந்தனா்.
பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீா்வானது இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையில் அமைய வேண்டுமென்ற பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக