பாகிஸ்தானில் சக கைதிகளால் தாக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்த சரப்ஜித் சிங் உடலில் பல உறுப்புகள் இல்லை என்ற அதிர்ச்சி தரும் உண்மையை இந்திய மருத்துவக்குழு தலைவர் குர்ஜித்மான் கூறியுள்ளார். லாகூர் மருத்துவமனையில் நள்ளிரவு 1 மணிக்கு மரணமடைந்த சரப்ஜித்சிங் உடல் நேற்றிரவு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அமிர்தசரஸ் மருத்துவமனையில் இரண்டாவது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவை மருத்துவர் குர்ஜித்மான் வெளியிட்டார். அப்போது அவர் கொல்லப்பட்ட சரப்ஜித் உடலில் இதயம், சிறுநீரகம், வயிற்று உள்உறுப்புகள் அகற்றப்பட்டு இருந்ததாக கூறினார். கபால எலும்பு முறிவு சரப்ஜித் தலையில் தாக்கப்பட்டதால் கபால எலும்பு முறிந்துள்ளது மருத்துவ குழுவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவரின் தாடை எலும்பும், இடுப்பு எலும்புகளும் முறிக்கப்பட்டுள்ளதாகவும், காதுகள் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர் கூறியுள்ளார். பொய் அம்பலம் இதனையடுத்து சிறையில் நடந்த கைகலப்பில் சரப்ஜித் காயம் என்ற பாகிஸ்தானின் பேச்சு பொய் என்பது உறுதியாகியுள்ளது. சரப்ஜித்தை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே தாக்குதல் நடைபெற்றுள்ளது ஆய்வில் அம்பலமாகியுள்ளது. லாகூர் சிறையில் சரப்ஜித்தை பலர் சேர்ந்து தாக்கியுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக