30 நவம்பர் 2013

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பாரிய தீ விபத்து!(காணொளி)

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டடம் ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
எனினும் திடீரென ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதென கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அத்துடன், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிகள் வழமைபோன்று இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

29 நவம்பர் 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு!

தஞ்சையில் அமையப்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் மாவீரர்களுக்கான பொதுச்சுடரினை பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிறப்புற மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது காலை அரங்க நிகழ்வுகளில் முனைவர் நடராஜன்,சீமான்,பழ.நெடுமாறன் உள்ளிட்ட முதன்மையானவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்கள். அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது மாவீரர் தின நிகழ்வில் பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் ஐயா தெரிவித்தார்.
நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் ஐயா தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர். விழாவில் நெடுமாறன் ஐயா கருத்து தெரிவிக்கும் போது முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.
அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

28 நவம்பர் 2013

முல்லையில் பூசகர் கைது!

முல்லைத்தீவு குமுளமுனை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றின் பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (27) மாலை 6 மணியளவில் இராஜரட்ணம் என்ற பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டனர்.
நவம்பர் 27 மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கோவிலில் விளக்கு ஏற்றச் சென்றதாக குறிப்பிட்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் செயற்படுவது சட்டவிரோத செயல் என பொலிஸார் அறிவித்தல் விடுத்தனர்.
பொலிஸாரின் அறிவித்தலை மீறி செயற்பட்டமையின் காரணமாக இராஜரட்ணம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 நவம்பர் 2013

வடக்கின் மாவீரர் தின நிகழ்வுகள் ஒரே பார்வையில்!

வடமராட்சி கிழக்கின் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்:
வடமராட்சி கிழக்கின் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த மாவீரர் துயிலுமில்ல நுழைவாயிலில் படையினரது மினிமுகாம் ஒன்று அமைந்துள்ள நிலையில் அதனை தாண்டி சென்ற இளைஞர்கள் சிலரே சுடரேற்றியதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தையடுத்து அங்கு குவிக்கப்பட்ட படையினர் வீதியால் பயணித்த பொதுமக்கள் மீது சகட்டு மேனிக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இரு இளைஞர்கள் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

கட்டைக்காடு பொது விளையாட்டரங்கு:
இதனிடையே கட்டைக்காடு பொது விளையாட்டரங்கிலும் மாலை மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் குவிந்த படையினர் வீடுகள் தோறும் பொருத்தப்பட்ட மின்குமிழ்களை அடித்து நொருக்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம்:
இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாணசபை அங்கத்தவர் துரைராசா ரவிகரன் மாவீரர் குடும்பங்கள் சகிதம் மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். தனிப்பட்ட இடமொன்றில் இந்நிகழ்வை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகம்:
இதேவேளை கடுமையான கெடுபிடிகள் அமுல்படுத்தப்பட்டிருந்த போதும் அதனையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள மாவீரர் தூபிப்பகுதியில் இன்றிரவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளவினுள் அத்துமீறி அருகாகவுள்ள மதில் தாண்டி சென்றிருந்த மாணவர்கள் குழுவொன்றே சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தை சூழவும் நுளைவாயில்கள் தோறும் படையினர் காத்திருக்க சத்தமின்றி மதில் தாண்டி சென்றே சுடரேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

வைத்தியசாலையின் உயர்ந்த கட்டடத்தில் சுடரேற்றப்பட்டது:
யாழ்.குடாநாட்டில் மாவீரர் தின சுடரேற்றும் நிகழ்விற்காக படைத்தரப்பு யாழ்.பல்கலைக்கழக சூழலில் காத்திருக்க நகரின் மத்திய பகுதியான யாழ்.போதனாவைத்தியசாலையின் மிகவுயரமான கட்டிடத்தில் இன்று மாலை ஆறு மணியளவில் ஈகைச் சுடரேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொது வைத்தியசாலையின் மேல் மாடியில் தீபம் சுடர்விட்டு பிரகாசமாக ஒளிவீசியதை அறிந்து அங்கு சென்றிருந்த படையினர் செய்வதறியாது திணறியதைக் காண முடிந்தது என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக பாதுகாப்பு உச்சம் பெற்றிருப்பதாக நம்பப்படும் யாழ்.நகரின் மையத்தில் சுடரேற்றப்பட்டமை பாதுகாப்பு தரப்பை கடுமையான கோபாவேசத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பகுதிகளையும் படைத்தரப்பு தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்த போதிலும் யாழ். போதனா வைத்தியசாலையின் மேல் மாடியில் சுடர் ஏற்றியுள்ளமை படைத்தரப்பிற்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்தப் பகுதியை படைப் புலனாய்வாளர்கள் சல்லடையிட்டிருப்பதாகவும் வைத்திய சாலை தரப்புக்கள் தெரிவித்தன.

இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் மணிகள் ஒலித்தன:
இதனிடையே படையினரது தடைகளை தாண்டி இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் மணிகள் தொடர்ச்சியாக ஒலிக்க வைக்கப்பட மறுபுறத்தே மக்கள் வீடுகள் தோறும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வன்னியில் கடும் கண்காணிப்பிலும் எரிந்தன விளக்குகள்:
வன்னியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் இராணுவத்தினர் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
வீதிகளில் இராணுவத்தினர் அதிகளவுகளில் காணப்பட்டதுடன் அதிரடியாக சில வீடுகளையும் சோதனைக்கு உட்படுத்தினர்.
பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முற்றுகைகளையும் மீறி மாவீரர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
வீடுகள் தோறும் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றப்பட்டதுடன் மரங்களும் நாட்டப்பட்டன.
உரிமை மீட்கச் சென்ற பிள்ளைகளை நினைவுகூறும் உரிமைகூட மறுக்கப்பட்டிருப்பதாக தாய்மார்கள் கண்ணீர் விட்டனர்.
ஆலயங்களின் மணிகள் எழுப்பட்டதுடன் சில அறிவிக்கப்படாத பொது இடங்களிலும் மாவீரர் நினைவாக தீபம் ஏற்றப்பட்டது.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் இன்று முழுவதும் ஒரு வித மௌன நிலை காணப்பட்டது.

நன்றி:குளோபல் தமிழ் செய்திகள்.

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் சிறீஸ்கந்தராசா ஸ்ரீரஞ்சனின் மீசாலையிலுள்ள இல்லத்தின் மீது இன்று (27) அதிகாலை 1.30 அளவில் ஆயுதந்தாங்கிய இனந்தெரியாத குழு ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆறு மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 க்கும் மேற்பட்ட நபர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீரஞ்சன் தெரிவித்தார்.
´நள்ளிரவளவில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்கள் எனது வீட்டை நோட்டமிடுவதை அறிந்து கொண்டேன். பின்னர் 1.30 அளவில் 12 பேருக்கு மேற்பட்டவர்கள் வீதியிலுள்ள படலையை உடைத்துத் தள்ளிக்கொண்டு உள்ளே நுளைந்தார்கள். நானும் மனைவியும் பிள்ளைகளும் பின்னால் தப்பினோம்.
வீட்டினுள் நுளைந்தவர்கள் பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல்களை மேற்கொண்டதோடு, ரி.வி. உட்பட அனைத்துப் பொருட்களையும் அடித்து நொருக்கினர். வீட்டின் கூரையையும் சேதப்படித்தினர். இறுதியாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர்´ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சம்பவத்தை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாவீரர் துயிலும் இல்லங்களை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கும் பிரேரணை சாவகச்சேரி பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது பிரதேச சபையின் உறுப்பினரான ஸ்ரீஞ்சன் அதனை முன் மொழிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 நவம்பர் 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு!

நவம்பர் 27 மாவீரர் தினம். இந்த நாளை உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் தமிழின உணர்வாளர்கள் அனுசரித்து வருவது வழக்கம்.
ஈழத்தில் மாவீரர்கள் துயிலகங்களில் அனுசரிக்கப்பட்டு மாவீரர் உரை நிகழ்த்துவார் பிரபாகரன். 2009 முள்ளிவாய்க்கால் கொடூர சம்பவத்திற்கு பிறகு துயிலகங்கள் தகர்க்கப்பட்டது. அதன் பிறகு ஏதாவது ஒரு இடத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகள் இருந்த போதிலும் கடந்த ஆண்டில் சென்னை கடற்கரை போன்ற இடங்களில் குழந்தைகள், மாணவர்கள் ஏராளம் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இந்த ஆண்டு துயிலகம் போல தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து உணர்வாளர்கள் கலந்த கொள்கிறார்கள். மேலும் வெளிநாடு களில் இருந்தும் உணர்வாளர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
27 ந் தேதி புதன் கிழமை நாள் முழுவதும் மாவீரர் தின நிகழ்வுகள் நடக்கிறது.

25 நவம்பர் 2013

"பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்தினேன்"தியாகராஜனின் பரபரப்பு பேட்டி!

News Serviceராஜிவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன்தான் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவர் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:‘9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கி, சிவராசனிடம் கொடுத்தேன். அவற்றை வெடிகுண்டுகளில் சிவராசன் பயன்படுத்தினார்’ என்று பேரறிவாளன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தான் வாங்கிய பேட்டரி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியும் என்று பேரறிவாளன் கூறவே இல்லை. அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது, ‘நான் பேட்டரியை வாங்கி கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதை கேட்டார் என்று தெரியவில்லை என்றுதான் பேரறிவாளன் கூறினார்.ஒரு விசாரணை அதிகாரி என்ற முறையில், பேரறிவாளனின் வாக்குமூலம் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது தகுதியான வாக்குமூலம் அல்ல. அதாவது அவரது ஒப்புதல் இல்லாமல், சதி திட்டம் அரங்கேறியதாகதான் இதில் அர்த்தம் கொள்ளப்படும். இதனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், அதை நிச்சயம் மாற்றி இருந்திருப்பேன்.கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காலை 11.30 மணி அளவில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பேரறிவாளன் வாக்குமூலம் கொடுத்த பின்னர், எனக்கு 2 வாய்ப்புகள்தான் இருந்தன. அவரது வாக்குமூலத்தை அப்படியே ஏற்பது அல்லது பிற ஆதாரங்கள் அடிப்படையில் என்னுடைய அனுமானத்தை அதில் பதிவு செய்வது. அதனால் வேறு வழியின்றி 2வது வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன்.வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பேரறிவாளன் வாக்குமூலம் தகுதியானதாக இல்லாவிட்டால் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். 22 ஆண்டுகளுக்கு பின்னர் என் செயலுக்காக வருந்துவதற்கு காரணம், இப்போது இல்லாவிட்டால் எப்போதும் முடியாது என்பதால்தான். ராஜிவ் கொலை வழக்கு விசாரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டேன். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.துரதிருஷ்டவசமாக ராஜிவ் கொலை வழக்கில் வெடிகுண்டு யாரால், எங்கு தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சிபிஐயால் கண்டுபிடிக்க முடியவில்லை.இவ்வாறு தியாகராஜன் கூறியுள்ளார்.பேரறிவாளனின் குழந்தை பருவம் முதல் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவர் சிக்கியது வரையிலான குறும்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், தியாகராஜன் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24 நவம்பர் 2013

ரொமேனிய மாணவர்களை அழவைத்த ஈழத்தின் இனக்கொலை!

சிறிலங்காவின் சமகால ராஜதந்திர நடவடிக்கையில் சவால்மிக்க நபராக, சனல்4 தொலைக்காட்சியின் ஆவணப்படத் தயாரிப்பாளர் கெலும் மெக்ரே மாறியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை தொடர்ந்தும் அம்பலப்படுத்தும் முயற்சியில் மெக்ரே தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், லண்டனில் இருந்து ரொமேனியா நாட்டுக்குச் சென்ற மெக்ரே, அங்கும் 'நோ பயஃர் சூன்" என்ற சிறிலங்காவின் போர்க்குற்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஐ.நாவின் அனுசரனையோடு நேற்று முன்தினம் சுமார் 200 பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன் நிலையில் 'நோ பயஃர் சூன்" ஆவணப்படத்தை திரையிட்டுள்ளார்.
ரொமேனியா நாட்டின் தலைநகரிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், அரசியல் விஞ்ஞானம் பயிலும் மாணவர்களுக்கு மத்தியிலேயே இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.
ஆவணப்படத்தைப் பார்த்த பல மாணவர்கள் அழுதுள்ளதாகவும், அவர்கள் சிறிலங்காவில் நடப்பதை முதல் முறையாக உணர்ந்துள்ளதாகவும் அங்கு பேசிய கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு ஆவணப்படத்தை இங்கு காண்பிக்க மிகவும் உதவியதாக தெரிவித்துள்ள கெலும் மெக்ரே, ரொமேனிய நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தான் இந்த ஆவணப்படத்தை போட்டு காட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரொமேனியா நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே, சிறிலங்கா பற்றிய விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தவே அவர் தற்போது அந்த நாட்டிற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

23 நவம்பர் 2013

பா.ஜ.க அணியில் தே.மு.தி.க-பா.ம.க!

Click Hereலோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அணியில் பரமவைரிகளான தேமுதிகவும் பாமகவும் இடம்பெறுவதற்கு ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்கும் முயற்சிகள் பல தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலில் பாஜக, தேமுதிக, மதிமுக ஆகியவற்றை இணைத்து ஒரு அணியை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏற்கெனவே பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கியிருக்கும் சமூக ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பாஜகவுடன் நெருக்கமானவர். அவரது முன்முயற்சியில் பாட்டாளி மக்கள் கட்சியையும் பாஜக அணியில் இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் தேமுதிக இடம்பெற்றுள்ள அணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து பாமகவின் அன்புமணி ராமதாஸ், தேமுதிகவின் சுதீஷ் ஆகியோரை சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன.
இந்த சந்திப்பின் முடிவில் இருதரப்பும் மனஸ்தாபங்களை விட்டுக் கொடுத்து பாஜக அணியில் இணைய ஒப்புதல் தெரிவித்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து பாஜக தலைமையில் தேமுதிக, மதிமுக, பாமக என ஒரு கூட்டணி உருவாகத் தொடங்கியிருக்கிறது.
தற்போது இந்த கட்சிகள் தங்களுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைப் பட்டியலிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேர்தலின் போது இந்த கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

22 நவம்பர் 2013

லைகா மொபைலுக்கும் ராஜபக்சவுக்கும் என்ன தொடர்பு?பிரிட்டன் பிரதமர் அதிரடி

லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு? என்பதை விசாரித்து அறிக்கை தருமாறு டேவிட் கேமரூன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இலங்கை அரசு மற்றும் அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக அடுத்தடுத்து சவுக்கைச் சுழற்றி வருகிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.யாழ்ப்பாண விஜயம், தமிழர்கள்பால் பரிவு, போர்க்குற்ற விசாரணை கோரல், ராஜபக்சேயை இம்மியளவுக்கும் நம்ப முடியாது என பகிரங்கமாக அறிவித்தது என கேமரூனின் ஒவ்வொரு நடவடிக்கையும், காயம்பட்ட தமிழர் மனதுக்கு ரொம்பவே ஆறுதலைத் தந்து வருகிறது.
தமிழர்கள் தங்கள் பிரதமர் என இப்போது கொண்டாடி வருவது டேவிட் கேமரூனைத்தான்!அவர்களின் நம்பிக்கையை உயர்த்தும் விதமாக நேற்று இரு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் டேவிட் கேமரூன். ஒன்று, ராஜபக்சே அரசின் போர்க்குற்ற விசாரணைகளை ஏற்க முடியாது என்பது.
அடுத்து ராஜபக்சேயை அலற வைத்திருக்கும் அதி முக்கியமான உத்தரவு. ராஜபக்சே குடும்பத்தினருக்கும், லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நிறுவனமான லைக்கா மொபைல்ஸ் உடனான தொடர்புகளை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.கேமரூனின் கட்சிக்கு 420000 பவுண்டுகள் இந்த லைக்கா மொபைல் நிறுவனம் மூலம் வந்துள்ளது. லைக்கா மொபைலை நடத்தும் சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கைத் தமிழர். ராஜபக்சேவுக்கு நெருக்கானவர் என்றும், அதனால்தான் அந்த நிறுவனம் கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக நியமிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து எப்படி அவ்வளவு பணத்தை ஆளுங்கட்சி பெறலாம் என ஆளுங்கட்சி எம்பி டாம் பென்கின்சோப் கேமரூனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதைத் தொடர்ந்து, லைக்கா மொபைல் நிறுவனம் எதற்காக இந்தத் தொகையை வழங்கியது, அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு? இரு தரப்புக்கும் நடந்த சட்டவிரோத பணப்பரி மாற்றங்கள் குறித்து விசாரித்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கேமரூன் தெரிவித்துள்ளார்.
மேலும் லைக்காமொபைல் நிறுவனம் பிரிட்டனில் பெரும் அளவில் வரிமோசடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இது குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் கேமரூன்.

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு,மாணவர்கள் போராட்டம்!

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: ஜெமினி மேம்பாலத்தை பூட்டிய மாணவர்கள்! போக்குவரத்து ஸ்தம்பிப்பு!!இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவரை தமிழக அரசு கட்டித்தரக் கோரி சென்னை ஜெமினி மேம்பாலத்தை மறித்து மாணவர்கள் பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டது. இந்த நினைவு முற்ற திறப்புவிழா கடந்த சிலவாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் விழாக்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி முற்றத்தின் சுற்றுச் சுவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக கூறி இடிக்கப்பட்டது. இது தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பகுதியை தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகவும், திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
செம்மொழிப் பூங்காவுக்கு அருகில் காலை 8 மணி முதலே திரண்டிருந்த மாணவர்கள் திடீரென ஜெமினி மேம்பாலத்தை மறித்து பூட்டுப் போடும் போராட்டத்தினை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை தேனாம்பேட்டையில் உள்ள மங்களம் மஹால் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

21 நவம்பர் 2013

கிளிநொச்சியில் கடத்தப்பட்டவர் சித்திரவதை!

கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சி நகரப்பகுதிக்குள் வைத்துப் பொதுமக்கள் பலர் பார்த்திருக்க பகலில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக அழுது கொண்டு தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆயினும் அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடம் எதுவென்றோ அல்லது அவரைக் கடத்தியவர்கள் யார் என்றோ இதுவரை அறிந்து கொள்ளமுடியவில்லை என குடும்பத்தவர்கள் கூறுகின்றனர்.
வெள்ளை வான் குழுவால் கடத்தப்பட்ட இவர் பிரதான வீதி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும் கூழாவடி உருத்திரபுரம், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட 35 வயதுடைய சிவகுமார் பாஸ்கரன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பஸ்த்தர் இராணுவத்தினரின் தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுதலையாகிய நிலையில் கடத்தப்பட்டிருப்பது பல முன்னாள் போராளிகளின் மனதில் அச்சத்தினை விளைவித்துள்ளது.
அத்துடன் இவர் கடந்த வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தீவிர பரப்புரையினை கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடத்தல் விடயம் குறித்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பினும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

20 நவம்பர் 2013

யாழில் மகிந்தவிற்கு தீ வைப்பு!

யாழ்.நகரின் புனித பத்திரிசிரியார் பாடசாலைக்கருகாக நிறுவப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது.
வடக்கின் வசந்தம் திட்டத்தை பிரபல்யப்படுத்துவதற்காக ஆளும் தரப்பினர் பரவலாக ஜனாதிபதி மஹிந்தவின் தனியான உருவப் படங்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திரசிறி இணைந்திருக்கும் உருவப்படங்களை நிறுவி வைத்திருந்தது.
வடக்கின் அபிவிருத்தி வெறுமனே விளம்பரப் பலகைகளில் இருப்பதாக வெளிநாட்டு ராஜதந்திரிகள் பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்மைக் காலமாக இத்தகைய விளம்பரப்
பலகைகள் தாக்கி சேதப்படுத்தப்பட்டும் கிழிக்கப்பட்டும் வருகின்றது. குறிப்பாக வடக்கு மாகாணசபை தேர்தலின் பின்னதாக இத்தகைய போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறானதொரு சூழலில் தற்போது யாழ். ஆயர் இல்லம் மற்றும் புனித பத்திரிசிரியார் பாடசாலை என்பவை அமைந்துள்ள சூழலில் நிறுவப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் படைத்தரப்பிடையே கோபத்தை தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே வலிகாமத்தின் ஆனைக்கோட்டைப் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சூத்திரதாரிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் இத்தீவைப்பு இடம்பெற்றுள்ளது.

19 நவம்பர் 2013

இசைப்பிரியாவின் மரணம் குறித்து போர்க்குற்ற விசாரணை கோருகிறார் கனடாவில் உள்ள அத்தை!

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு போரின் இறுதி நாளன்று பெண் ஒருவர் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டுள்ளார். வீடியோ ஒன்றின் வெளிப்பாட்டில் இருந்து இவர் படையினரால் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெளிவுபடுத்தப்பட்டு  இருப்பதால் போர்க்குற்ற புலன்விசாரனை நடாத்தும்படி ரொறொன்ரோவில் வசிக்கும் அவரது உறவினர்கள் கேட்டுள்ளனர்.
காட்சி ஒன்றில் கொல்லப்பட்டவரான சோபனா சோபா உயிருடன் மே மாதம் 18ந் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், அதே நாள் சிறிது நேரத்தின் பின்னர் எடுக்கப் பட்ட படத்தில் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக நிலத்தில் கிடத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் சனல் 4 மூலம் ஒளிபரப்பப்பட்ட காணொளியை பார்த்த சோபனாவின் அத்தையான ரொறொன்ரோவைச் சேர்ந்த தாதி றஞ்சனி ரவி, சோபனா கொலைசெய்யப்பட்டுள்ளார் என்பது 100 சதவிகிதம் உண்மை என கூறியுள்ளார். அத்துடன் இது சம்பந்தமாக சர்வதேச புலன் விசாரனை தேவை எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதம மந்திரி Stephan Harper பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை புறக்கணித்தமைக்கு இத்தகைய நீதிக்குப் புறம்பான கொலை குற்றச்சாட்டுக்களும் ஒரு காரணமென கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விவகார மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் திரு. ஓப்ராய் இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் செய்தபோது மக்களிடம் போர் நிறுத்தத்தின் பின்னர் சமரசப்படுத்துதல் இடம்பெற்றதா என கேட்டபோது இல்லை என்பதே ஒரே பதிலாக கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
சோபனா சோபா [இசைப்பிரியா] போரில் மரணமடைந்ததாக இலங்கை இராணுவம் கூறுகின்ற போதிலும் காணொளி ஆதாரத்தின் மூலம் சோபனா சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இலங்கை பாதுகாப்பு படையினரின் காவலில் இருந்த போதுதான் சோபனா கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது வீடியோ காட்சி மூலம் தெரிகின்றதென சர்வதேச பொதுமன்னிப்பு உத்தியோகத்தர் யொலான்டா வோஸ்ரர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மட்டும் ஒரு தனி சம்பவம் இல்லை என்றும் இவர் தெரிவித்துள்ளார்.
போர் இறுதிக்கால கட்டங்களில் நீதிக்குப் புறம்பான கொலை, கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களினால் பலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் போராளிகளால் பலர் துன்புறுத்தப் பட்டிருப்பதற்கான சான்றுகளும் இருப்பதாக யோலான்டா கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
ஆனால் பொதுவான சர்வதேச புலன்விசாரனை இல்லாமல் எதையும் உறுதிசெய்ய முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.
திருமதி.சோபா இறந்த அடுத்த நாள் போர் முடிவடைந்தது. தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். திருமதி சோபாவின் கைது பற்றிய வீடியோ அரசாங்கத்தை அவமானப் படுத்துவதற்காக போலியாக தயாரிக்கப் பட்டதென இலங்கை படைகளின் பேச்சாளர் ஒருவர் பிபிசி ற்கு கூறியுள்ளார். இது நடிப்பல்ல என திருமதி ரவி எதிர்த்துள்ளார்.திருமதி சோபாவின் பேத்தியார், இரண்டு அன்ரிமார்கள், கனடாவில் வசிக்கின்றார்கள் என திருமதி ரவி கூறியுள்ளார்.
சோபாவிற்கு 5 சகோதரிகள் உள்ளனர்.

18 நவம்பர் 2013

தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்கிறார்கள்-கனடா

தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கையில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கனடா அறிவித்துள்ளது.
நாட்டின் தலைமைத்துவம் தொடர்பில் தமிழ் சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ்;ந்து வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சின் மனித உரிமை விவகாரச் செயலாளர் தீபக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உறுப்பு நாடுகளில் பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகள் அமுல்படுத்தப்படாவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மக்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியதாகவும் இந்த விஜயத்தின் போது கனடாவின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை மேலும் உறுதி செய்து கொள்ள வாய்ப்பு கிட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இலங்கையின் யதார்த்தமான முயற்சிகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

17 நவம்பர் 2013

புதிய ஆதாரங்களுடன் போர்க்குற்ற காணொளி!(வீடியோ இணைப்பு)

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு இருட்டடிப்புக்களை தாண்டி வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனை பெரும்பாலும் சனல் 4 போன்ற ஊடகங்கள் முன்னணியிலிருந்த வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன.
தற்போது இந்தியாவின் நியுஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி ஆவணப்படமாக வெளியிட்டுள்ளது. இதில் மே 18ம் திகதி விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னால் அரசியல் துறை பொறுப்பாளர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது தொடக்கம், கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மகளிர் போராளிகளுக்கு என்ன நடந்தது போன்ற இதுவரை வெளியே வராத வீடியோக்களும் உள்ளது.
கொமன்வெல்த் மாநாடு சிறீலங்காவில் தொடங்கிய அன்று இந்த கானொணி இந்தியாவில் வெளியிடப்பட்டதால், தமிழ்நாடு உணர்ச்சிக் கொந்தளிப்பில் உள்ளதோடு ஆளும் கொங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

16 நவம்பர் 2013

ஸ்ரீலங்கா மீது கெலும் மக்ரே சீற்றம்!

சிறிலங்காவில் முழுமையாக ஊடக சுதந்திரம் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் நான் இங்கு வந்த நாள் முதல் என் பின்னால் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வருகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதி சனல்4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் இருக்கின்றதா என கலும் மெக்ரே கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரால் செய்தியாளர் மாநாடு நேற்று, பொதுநலவாய ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இந்நடவடிக்கையால் மக்ரே கடும் ஆவேசம் அடைந்தார்.
இதனால் பொதுநலவாய ஊடக மத்திய நிலையத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை பரபரப்பு நிலை காணப்பட்டது.
ஊடக மத்திய நிலையத்திற்கு வருகைதந்திருந்த மெக்ரே அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப்பட்டியலை பார்வையிட்டதன் பின்னர் ஊடக முகாமையாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து அங்கு கூடிநின்ற ஊடகவியலாளர்கள் மெக்ரேயை சுற்றி வளைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்ததுடன் கேள்விக்கணைகளையும் தொடுத்தனர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"புலிகள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பான தகவல்கள் எனக்கு கிடைத்திருந்தால் அது குறித்து ஆவணப்படத்தை தயாரிக்கவும் நான் தயங்க மாட்டேன். சனல்-4 என்பது எப்போதும் உண்மைகளையே வெளியிடும். ஜனாதிபதி மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஆகியோர் நடத்தும் செய்தியாளர் மாநாட்டுக்கு சனல் -4 குழுவில் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
ஊடக சுதந்திரம் இருப்பதாக கூறப்படும் நாட்டில் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு அனுமதிவழங்கப்படவில்லை. ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் போக்கு காணப்படுகின்றது. என்னைப் புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இதற்கு நான் அஞ்சப் போவதில்லை. அதேநேரம் உண்மையை வெளிக்கொணர்வதற்கும் தயங்கப்போவதில்லை என்றார்.

15 நவம்பர் 2013

யாழில் பெண்கள்,சிறுமிகள் மீது சிங்கள பொலிஸ் காடையர்கள் அடாவடி!

யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டு உள்ளனர்.தனது கழுத்தை நெரித்ததாக ஒரு பெண் அழுதவாறு தெரிவித்துள்ளார்.ஒரு சிறுமி கூறுகையில்"பொலிசார் தன்னை கன்னம் கன்னமாக அறைந்ததாகவும்,நாம் எம் உரிமையைதானே கேட்டோம் அதற்கு இப்படி அடிக்கிறாங்களே,எங்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் மாமா"என குளோபல் தமிழ் வானொலியிடம் அழுதழுது தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அனந்தி சசிதரன்(திருமதி எழிலன்)தெரிவிக்கையில் தாங்கள் முனியப்பர் கோவிலடியில் அமைதியான முறையில் நின்றிருந்ததாகவும் பிரித்தானியப்பிரதமர்  வந்ததும் தாம் பொது நூலகத்திற்கு முன் வந்தபோது அங்கு வந்த இலக்கமற்ற பொலிஸ் அதிகாரிகள் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர்கள் வெறியில் இருந்ததுபோல் காணப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.தன்னை மாகாணசபை உறுப்பினர் எனத் தெரிந்தும் தன்மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதல்களின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் தள்ளி விழுத்தப்பட்டு உள்ளனர் எனவும் தெரியவருகிறது.

14 நவம்பர் 2013

சிங்கள பேரினவாதிக்காக பத்திரிகையாளரை இடைநிறுத்தம் செய்த தினக்குரல்!

வடமாகாண ஆளுநரும் தமிழ் மக்களை படுகொலை செய்த போர்க்குற்றவாளியுமான சந்திரிசிறியின் உரையை பிரசுரிக்கவில்லை என்ற குற்றம் சாட்டி யாழ். தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியர் பொன்ராசா கொழும்பில் உள்ள அதன் நிர்வாகத்தால் உடனடியாக வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா பேரினவாத அரசுக்கு விசுவாசத்தை காட்டுவதற்காகவும், வடமாகாண ஆளுநரிடம் நக்கி பிழைப்பதற்காகவும் தினக்குரல் நிர்வாகம் இதனை செய்திருப்பதாக தமிழ் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வட மாகாணசபையின் இரண்டாவது அமர்வில் ஆளுநர் சந்திரசிறி நிகழ்த்திய உரையை பிரசுரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டி தினக்குரலின் கொழும்பு நிர்வாகம் அந்த ஊடகவியலாளரை இடைநிறுத்தி உள்ளது.
அரசாங்க பத்திரிகையான லேக்கவுஸ் பத்திரிகைகள் கூட செய்யாத சிங்கள பேரினவாத அரச விசுவாசத்தை தினக்குரல் நிர்வாகம் செய்திருக்கிறது. வழமையாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால் அது தொடர்பாக நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் இந்த விடயத்தில் தினக்குரல் நிர்வாகம் சிறிய விசாரணைகளை கூட நடத்தவில்லை.
ஆளுனரின் உரை நீண்டதாக இருந்ததால் அதனை எடிட் பண்ணி வெளியிடுவதில் அல்லது மொழிபெயர்ப்பில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஒரு செய்தியை வெளியிடாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது தொடர்பாக விசாரணை நடத்தாமல் எப்படி ஒரு ஊடகவியலாளரை வேலை நீக்கம் செய்ய முடியும்?
ஆளுனர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் இந்த ஊடகவியலாளர் இடைநிறுத்தப்பட்டு இருக்கின்றார்.
இரவுப் பணியை முடித்து அதிகாலை வீட்டுக்குச் சென்ற ஊடகவியலாளர் அடுத்தநாள் வழமை போன்று இரவுப் பணிக்காக அலுவலகத்திற்கு சென்ற போது அவரை உள்ளே செல்லவிடாமல் காவலாளி மறித்தார். ஏன் மறிக்கிறீர்கள் என காவலாளியிடம் கேட்டபோது ‘தெரியாது உங்களை

இடைநிறுத்திவிட்டனர்’ என்றுகாவலாளி கூறியுள்ளார். அப்போதும் காரணம் புரியமால் அந்த ஊடகவியலாளர் தனது ஆசிரியரான அற்புதானந்தனிடம் தெலைபேசியில் கேட்டபோது நடந்த விடயத்தை அவர் சொன்னார்.
அந்த ஊடகவியலாளர் தவறு செய்திருந்தால் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அவரிடம் கால அவகாசம் கொடுத்து விளக்கம் கேட்டிக்க வேண்டும். இது எதுவும் இல்லாமல் ஆளுநரின் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் நாய்போல வாலை ஆட்டிக்கொண்டு சிங்கள பேரினவாதிகளுக்கு விசுவாசம் செய்யும் நிலைக்கு தினக்குரல் நிர்வாகம் மாறியுள்ளது.
சாமியின் நிர்வாகத்தின் கீழ் இருந்த தினக்குரல் பத்திரிகையை இந்திய வியாபாரிகளான ஞானம் சந்ததியின் நாடார்களின் நிர்வாகம் வாங்கிய பின் சிங்கள பேரினவாதிகளின் விசுவாசிகளாக தினக்குரல் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாறு இணையம் ஒன்று தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கண்டிக்கிறார்!(காணொளி)

இலங்கையின் வடபகுதிக்குச் சென்ற சனல் 4 செய்தியாளர் கலம் மெக்ரே அநுராதபுரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்டமை ஸ்ரீலங்கா மீது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஹேக் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.அது குறித்த காணொளியை இங்கே காணலாம்.

13 நவம்பர் 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அழிப்பு!ஜெயலலிதாவுக்கு மன்னிப்பே கிடையாது!

131106120743_mullivaikal_111_976x549_bbc_nocredit(2)முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதாவின் செயலுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. அவரைப் பார்த்து உலகத் தமிழர்கள் காரித் துப்புவார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் என்ன அவரது போயஸ் தோட்ட வீடு என்று நினைத்துக் கொண்டாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார். இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினரால் பொக்லைன் இய்ந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக்கண்டித்து தர்ணா போராட்டம் செய்த பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு வந்த வைகோவை போலீசார் தடுத்தனர். ஆனால் ஆவேசமாக தடையை மீறி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் உள்ளே சென்று அங்குள்ள மாவீரர் மண்டபத்தில் அமர்ந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசினார் வைகோ. முதல்வர் ஜெயலலிதாவை அவர் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பது தொடர்பாக பழ.நெடுமாறன், முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து தொடர்பு கொண்டார். ஆனால் பதிலேதுமில்லை. அடுத்த அவர் தா. பாண்டியன் மூலமாக பேசி வந்தார். அப்போதும் சரியான பதிலில்லை. இதையடுத்து கடந்த 8ம் தேதி நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த முற்றத்தை இடித்து தள்ள ஆணையிட்டுள்ளார் ஜெயலலிதா. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது. கண் துடைப்பு தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு பிரபாகரன் படத்தை வைக்கக்கூடாது என்று வழக்குகள் போடுகிறார். ஆனால், லட்சோப லட்சம் மக்களின் நெஞ்சத்தில் இருக்கும் பிரபாகரனை நீக்க முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! இது போயஸ் கார்டன் சொத்தோ, ஜெயலலிதாவின் சொத்தோ கிடையாது. கேள்வி கேட்க ஆள் இல்லை என்று இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். இதைப் பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள். ஈழ ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தாலும் அவை எல்லாம் எங்கள் கால் தூசுக்குச் சமம். முள்ளிவாய்க்கால் முற்றம் எங்கள் சொத்து. நாங்கள் உள்ளே போவோம். அதை தடுக்க முடியாது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களூக்கு பாவமன்னிப்பே கிடையாது என்றார் ஆவேசத்துடன். சமீபகாலத்தில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வைகோ பேசுவது இதுவே முதல் முறை.

12 நவம்பர் 2013

வலி,வடக்கில் ஆக்கிரமிப்பு நிலங்களை ஒப்படைக்கக்கோரி போராட்டம்!

சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரியும் வீடுகள் இடிப்பினை நிறுத்தக் கோரியும் வலி.வடக்கு மக்களின் தொடர் உணவு விடுப்புப் போராட்டம் மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பினையடுத்து கடந்த 23 வருடங்களாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறிய வலி.வடக்கு மக்கள் தம்மை மீள்குடியமர்த்த வேண்டி 5தினங்களுக்கு இந்தத் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.
அதன்படி வலி.வடக்கின் 24 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 6382 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் விழுங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்தின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தின் ஆரம்பத்தில் சுமார் 300 பேர் வருகை தந்தனர்.
தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வசிக்கும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்தவண்ணமுள்ளனர். வடக்கு கிழக்;கிற்கு வெளியில் மாத்திரமின்றி சிலர் புரம்பெயர் நாடுகளிலிருந்தும் போரட்டத்திற்காக வருகை தந்துள்ளனர்.
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறுகின்ற சந்தர்பத்தில் உலகத் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் போராட்டங்களில் வலி வடக்குப் போராட்டமும் ஒன்று.
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நில அபகரிப்புக்கு எதிராகவும் இயல்புநிலை வேண்டியும் வலிகாமம் வடக்கு மக்களின் நிலமீட்புப் போராட்டம் நடைபெறுகின்றது.
இந்த போராட்டத்தில் இடம்பெயர்ந்த நிலையில் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் முகாம்களிலும் அவல வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், சரவணபவன் ஆகியோருடன், வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் குருகுலராஜா மற்றும் ஜங்கரநேசன், உறுப்பினர்கள் சித்தார்த்தன், அனந்தி,சிவாஜிலிங்கம், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே வடக்கிற்கு சென்றிருக்கும்; ஊடகவியலாளர்கள் பலரும் செய்தியினை அறிக்கையிட அங்கு திரண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கில் படைப்புலனாய்வாளர்களும் திரண்டிருந்தனர்.

10 நவம்பர் 2013

நாடுகடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள கையேடு!

பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடும் , நிலைப்பாடும் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள
பொதுநலவாய மாநாட்டினால் கேள்விக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ள நிலையில் , சிறிலங்காவினை பொதுநலவாயத்தில் இருந்து நீக்குவதற்கான அடிப்படை முன்னுதாரணங்களோடு கையேடு ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது .
மின்னிதழ் வடிவில் அனைத்துலக பரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கையேடானது கீழவரும் விடயங்களை முன்வைக்கின்றது :

1 ) . பொதுநலவாயத்தின் அடிப்படை கோட்பாடுகளை எப்படி சிறிலங்கா அரசு பலவழிகளில் தட்டிக்கழித்தும் , ஏற்க மறுத்து முரணியும் , மீறியும் நடந்து கொள்கிறது .

2 ) . பொதுநலவாய மந்திரிகளது செயற்குழுவின் நடைமுறைகளை நைஜீரியா , சிம்பாவே , பாகிஸ்தான் , பிஜி என்பவை தொடர்பாக மீளாராய்வதால் , சிறிலங்காவை பொதுநலவாயத்திலிருந்து நீக்கிவைக்க தேவையான தெளிவான முன்னுதாரணம் இங்கே ஏற்படுத்தப்பட்டிருப்பதை இந்தக் கையேடு அடையாளம் காண்கிறது .

3 ) . மனிதஉரிமைகள் , சனநாயகம் , நீதி , ஊடகத்துறை போன்றவற்றின் உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டிய பொதுநலவாய மந்திரிகள் செயற்குழு அமைப்பே தனது தலைமையை எடுத்து நடத்த சிறிலங்காவுக்கு இடமளிப்பதால் போர்க்குற்றம் , இனவழிப்பு , மானுடத்துக்கெதிரான குற்றங்கள் புரிந்த சிறிலங்காவின் செயல்களை அது நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்கொண்டதாகிறது .

4 ) . சிறிலங்காவின் அரசியல் அமைப்பின் 6 ம் திருத்தத்தில் தெட்டத்தெளிவாக காணப்படுவது போலவே வலிந்த தனமாக பேச்சு சுதந்திரத்தை முடக்கும் சிறிலங்கா அரசின் நிலைப்பாடானது பொதுநலவாயத்தின் அடிப்படை தகமைகளை தகர்ப்பதாகிறது .
http://www.joomag.com/magazine/chogm-2013-booklet-by-tgte/0752755001383842662
எனும் இணைய முகவரியூடாக இக்கையேட்டினை மின்னிதழில் வடிவில் காணவும் , பதிவிறக்கம் செய்யவும் முடியும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் , புத்தக வடிவில் இக்கையேடு பல் நாடுகளில் வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

09 நவம்பர் 2013

மறைந்தும் மறையாத மாமனிதர் ரவிராஜ்!

பிரபல சட்டத்தரணியாகவும்,தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராகவும் திகழ்ந்தவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் அவர்கள்.தமிழ் தேசியத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்ததால் மாமனிதர் ரவிராஜை கொழும்பில் வைத்து படுகொலை செய்தது சிங்களப் பேரினவாதம்.09.11.2006ல் தமிழர் மனமெங்கும் பேரிடியாய் அமைந்தது இந்த செய்தி!இன்றுடன் ஏழு ஆண்டுகள் ஆகின்றபோதும் இன்றுபோல் இருக்கின்றது அந்த நினைவுகள்.ரவிராஜ் அவர்களின் அர்ப்பணிப்பை கருத்திற் கொண்டு தமிழீழ தேசியத்தலைவர் அவரை மாமனிதராக கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

08 நவம்பர் 2013

புத்தூரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் காதலனாலேயே கொலையுண்டார்!

யாழ். புத்தூர் கிழக்கில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அவரின் காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. யாழ். புத்தூர் கிழக்கு பருத்தித்துறை வீதியில் கடந்த 29ஆம் திகதி 27வயதுடைய அமிர்தலிங்கம் மைதிலி என்ற பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவிக்கையில்,
மகள் கடந்த 28ஆம் திகதி இரவு 7 மணிவரை வீட்டில் தொலைகாட்சி பார்த்து கொண்டு இருந்தார். அவ்வேளை அவரது கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது அவர் அதில் உரையாடிக்கொண்டே வெளியில் சென்றார். அதன் பின்னர் நீண்ட நேரமாக அவரை காணாததால் நாம் அன்று இரவு முழுக்க தேடினோம். அவரை காணவில்லை. அதன் பிறகு காலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம்.
பின்னர் மதியம் ஒரு மணியளவில் எங்கள் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணற்றில் மகள் சடலமாக கிடப்பதாக அயலவர்கள் கூறினார்கள் என தெரிவித்தார். அப்பெண்ணின் கைத்தொலைபேசிக்கு இறுதியாக வந்த அழைப்பு அவரின் காதலனிடமிருந்தே வந்துள்ளது என பொலிஸார் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரின் காதலனான அமிர்தலிங்கம் கிருஷ்ணதீபன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணைகளில் அன்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் காதலியை அழைத்ததாகவும் இரவு வாசிகசாலைக்கு அருகில் இருந்து பேசிக்கொண்டிருந்தாகவும் அவரிடம் உடலுறவு கொண்டதாகவும் இதன் பின்னர் தன்னை திருமணம் முடிக்குமாறு அப்பெண் கேட்டதால் அவரை கிணற்றில் தள்ளிவிழுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நபர் இன்று மல்லாகம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது இவரை 14நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

07 நவம்பர் 2013

பொதுநலவாய மாநாட்டுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவதனால் போர்க்குற்ற விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு தடை ஏற்படும் எனவும் வலிறுத்தி கொழும்பில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இடதுசாரி கட்சிகள் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் சில பொது அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
ஒரு மணி நேரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு அனேகமான மக்கள் எதிர்ப்பு என்றும் மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்புக்கு வரும் சர்வதேச தலைவர்கள் இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எதிர்த்து கொழும்பில் இடம்பெற்ற முதலாவது ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

06 நவம்பர் 2013

சிறிலங்கா இதே நிலைப்பாட்டை தொடர முடியாது – கனடா

மனிதஉரிமைகள் விவகாரத்தில் தற்போதைய நிலைப்பாட்டில் தொடர்ந்திருக்க முடியாது என்ற மிகத் தெளிவான செய்தி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார மற்றும், அனைத்துலக மனிதஉரிமை விவகாரங்களுக்கான நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய்,
“சிறிலங்காவில் மனிதஉரிமைகளுக்கான கனடா தொடர்ந்து போராடும்.
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான கவலைகளை வெளிப்படுத்தும் விதத்தில், கொமன்வெல்த் மாநாட்டுக்கு உயர்மட்டக் குழுவை அனுப்பாத ஒரே நாடு கனடா தான்.
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் போது சிறிலங்காவின் வடக்குப் பகுதிக்குச் செல்வேன் என்று நம்புகிறேன்.
அங்கு போருக்குப் பிந்திய நிலைமைகளை பார்வையிடுவதுடன், அரச்சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுவேன்.
கனடா திரும்பியதும் சிறிலங்காவில் உள்ள நிலைமைகள் குறித்து எனது உணர்வுகளை கனேடிய அரசாங்கத்துக்கு வெளிப்படுத்துவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

05 நவம்பர் 2013

ஆதாரங்களை வெளியிடுவதால் மக்ரேயை வெறுக்கிறது இந்தியா!

இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை வீடியோ காட்சிகள் மூலம் வெளி உலகுக்குக் கொண்டு வந்த சனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லம் மேக்ரே இந்தியா செல்ல விசா மறுக்கப்பட்டுள்ளது. புது டில்லியில் நவம்பர் 7ம் திகதி லாபநோக்கற்ற அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 6ம் திகதி இந்தியா செல்ல கல்லம் மேக்ரே திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், கல்லம் மேக்ரேவின் விசாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டது முதல் இறுதியாக விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பு பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா, இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டது வரை அனைத்தையும் வீடியோக்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநருக்கு விசா மறுக்கப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியா உயிருடன் மீட்டு இலங்கை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்படும் வீடியோ காட்சியை சனல் 4 தொலைக்காட்சி இறுதியாக வெளியிட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு இக்காணொளி சர்வதேச அளவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற ஆரம்பித்துள்ளது.

04 நவம்பர் 2013

இசைப்பிரியாவின் காணொளி பற்றி வாய் திறக்காத கூட்டமைப்பு!

பிரித்தானியாவின் சனல் நான்கு தொலைக்காட்சி வெளியிட்ட இசைப்பரியா தொடர்பான காணொளி குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கருத்து எதனையும் வெளியிடாமல் மௌனமாக இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் உயர்பீடத்தினர், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் இசைப்பிரியா குறித்து சனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து இதுவரை ஒருவார்தையேனும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் இசைப்பிரியா குறித்த காணொளியை பிரித்தானிய தொலைக்காட்சி வெளியிட்டதை தெரியாதவர்கள் போன்று இருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாகாணசபைத் தேர்தல் பிரசாரங்களின் போது நந்திக் கடல் வரை சென்று வாக்களிக்குமாறு மக்களிடம் பிரசாரம் செய்தனர்.
இறுதிபோரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அரசாங்கத்துக்கும் படையினருக்கும் எதிராக கருத்துக் கூறி அவர்களுக்கு எதிராகவாக்களிக்க வேண்டும் என்று ஆவேசமாகவும் உண்ர்ச்சிபூர்மாகவும் மக்கள் முன்னிலையில் உரையாற்றினர்.
மக்களும் நம்பிக்கையுடன் வாக்களித்தனர். இவர்களும் 30 ஆசனங்களை பெற்றனர். ஆனால் வாக்களித்த மக்களின் கைகளில் பூசப்பட்டமை காய்வதற்குள் இசைப்பிரியா தொடர்பாக மற்றுமொரு காணொளியை சனல் நான்கு தொலைக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
ஆனால் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் குறிப்பாக முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் இதுவரையும் கருத்துக் கூறாமல் மெனமாக இருப்பது வேதனையளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பில் அரசியல் நடத்தும் மனோகணேசன் கண்டித்துள்ளார். தமிழ்த் தேசய மக்கள் முன்னணி இடைக்கால நிர்வாகத்தின்கீழ் சுயபதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி உள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவுவழங்கும் ஈ.பி.டி.பி இசைப்பிரியாவின் படுகொலை குறித்துசுயாதீன விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தமிழக முக்கியஸ்த்தர்கள் கூட இசைப்பிரியாவின் படு கொலையை கண்டித்து உள்ளனர்.
ஆனால் நந்திக்கடல் வரை சென்று தமிழ்த்தேசியம் பேசி பிரசாரம் செய்த, பிரபாகரனை மாவீரன் எனப் புகழ்ந்த, மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்கப்போகிறோம் என்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெரியவர்கள் அதேகடலில் மிருகத்தனமாக அவமானப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவுக்காக தங்கள் உறுப்புரிமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி இதுவரையும் குரல் கொடுக்க மறுத்தமை ஏன்? என்ற கேள்விகளை மக்கள் கேட்கின்றனர்.
தேர்தல் வெற்றிக்காகமட்டும் தமிழ்த் தேசியம் பேசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் 30 வருடகால போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் சொத்து அழிவுகள் அனைத்தைதயும் மறந்துவிட்டு மென்போக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை வடமாகாணசபையில் வெற்றி பெற்றதமிழத்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் கொழும்பில் தமக்கு பாராட்டு விழாஒன்றை நடத்துமாறு நெருக்கமான நண்பர்களிடம் கேட்டதாகவும் மற்று மொருதகவல் தெரிவிக்கின்றது.

03 நவம்பர் 2013

புதிதாக நியமிக்கப்பட்ட காணி சுவீகரிப்பு அதிகாரியும் பதவி விலகல்!

காணி சுவீகரிப்பு அலுவலராக புதிதாக நியமிக்கப்பட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஆ.சு. கருணாநிதி கடமையைப் பொறுப்பெடுக்காமலேயே அந்தப் பதவியிலிருந்து விலகுவதாகக் காணி அமைச்சின் செயலருக்கு அறிவித்துள்ளார். இராணுவத்தினருக்கு தேவையான காணிகளை சுவீகரித்துக் கொடுப்பதற்காக, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட இந்த அலுவலகங்கள் ஊடாக இராணுவத்தினருக்குத் தேவையான காணிகள் சுவீகரிக்கும் அறிவுறுத்தல்கள் ஓட்டப்பட்டன. இந்த நிலையில் யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர் ஆ. சிவசுவாமி கடந்த ஏப்பரல் மாதம் 20 ஆம் திகதி தனது பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் குறித்த பதவிக்கு யாரும் விண்ணப்பிக்காத நிலையில், காணி சுவீகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்த பின்னர், காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்கும் பொருட்டு யாழ். மாவட்டக் காணி சுவீகரிப்பு அலுவலராக முன்னாள் உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ. சு. கருணாநிதி நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பதவியை இன்னமும் ஏற்காத அவர் மேற்படி பதவி பிரச்சினைக்குரிய தொன்று என்பதால் தான் அதிலிருந்து விலகுவாதாக அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

02 நவம்பர் 2013

பெண் கொலை தொடர்பில் சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

newsநாச்சிமார் கோவில் தேர் முட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உடலில் அடிகாயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மானிப்பாயைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். டி.என்.ஏ பரிசோதனைக்காக அவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் உள்ள கன்னியர் மடத்தில் தங்கியிருந்துள்ளார். கடந்த 3ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் அவரது உறவினர்களால் 4ஆம் திகதி யாழப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மாதம் 17ஆம் திகதி நாச்சிமார் கோயிலில் உள்ள தேர்முட்டியில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 35 வயதுடைய யோகராணி என்பவராவார். எனினும் குறித்த பெண் பாலியல் வல்லுறவிற்கு பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.பெண்ணின் கொலை தொடர்பில் 6 பேரின் வாய்மொழி முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பெண் தங்கியிருந்த விடுதியில் இருந்து அவர் பயன்படுத்திய கைத்தொலைபேசியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டுவருகின்றனர் என கூறப்படுகின்றது.

01 நவம்பர் 2013

சடலமாக மீட்கப்பட்ட பெண் பாலியல் வல்லுறவின் பின் கொலை!

யாழ்ப்பாணம் புத்தூர்ப் பகுதியிலிருந்து கடந்த 27ஆம் திகதி காணாமல் போய் பின்னர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த பெண் பாலியல் வல்லுறவின் பின்னரே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.
புத்தூர் கிழக்கைச் சேர்ந்த மைதிலி அமிர்தலிங்கம் (வயது-26) என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு வேளை திடீரெனக் காணாமல் போயிருந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் அப் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த பெண்ணின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சிவசொரூபனால் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் களத்தில் கஜேந்திரகுமார் !

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உரத்துக் கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பின் பெயரில் அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அமெரிக்க தமிழ்ச் சங்க மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதுடன் வாசிங்டனில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். தேர்தல் அரசியலை தூக்கிவீசி விட்டு இலட்சியத்துக்காக தேசிய அரசியலை மையப்படுத்தி செயற்படுத்திவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அமெரிக்காவின் அதிகார பீடத்தை சந்திக்கவுள்ளமை இனஅழிப்பாளர்களையும் போலி வேசம் போடும் தமிழ் அரசியல்வாதிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சந்திப்பின்போது தமிழர் தேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கட்டமைப்பு சார் இன அழிப்பு நடவடிக்கைகள் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும், தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாகவும் விளக்குவார் என தெரியவருகிறது.
கடந்த காலத்தில் சர்வதேச விவகாரங்களை கையா
ள்வதற்காக தமிழீழ தேசியத் தலைவரால் கஜேந்திரகுமார் நியமிக்கப்பட்டிருந்தார். ஆயினும் கூட்டமைப்பிலிருந்த சில உயர்மட்டத்தினர் வஞ்சகத் தனத்தினால் கஜேந்திரகுமாரின் நகர்வுகளை குழப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.