03 நவம்பர் 2013

புதிதாக நியமிக்கப்பட்ட காணி சுவீகரிப்பு அதிகாரியும் பதவி விலகல்!

காணி சுவீகரிப்பு அலுவலராக புதிதாக நியமிக்கப்பட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஆ.சு. கருணாநிதி கடமையைப் பொறுப்பெடுக்காமலேயே அந்தப் பதவியிலிருந்து விலகுவதாகக் காணி அமைச்சின் செயலருக்கு அறிவித்துள்ளார். இராணுவத்தினருக்கு தேவையான காணிகளை சுவீகரித்துக் கொடுப்பதற்காக, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட இந்த அலுவலகங்கள் ஊடாக இராணுவத்தினருக்குத் தேவையான காணிகள் சுவீகரிக்கும் அறிவுறுத்தல்கள் ஓட்டப்பட்டன. இந்த நிலையில் யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர் ஆ. சிவசுவாமி கடந்த ஏப்பரல் மாதம் 20 ஆம் திகதி தனது பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் குறித்த பதவிக்கு யாரும் விண்ணப்பிக்காத நிலையில், காணி சுவீகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்த பின்னர், காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்கும் பொருட்டு யாழ். மாவட்டக் காணி சுவீகரிப்பு அலுவலராக முன்னாள் உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ. சு. கருணாநிதி நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பதவியை இன்னமும் ஏற்காத அவர் மேற்படி பதவி பிரச்சினைக்குரிய தொன்று என்பதால் தான் அதிலிருந்து விலகுவாதாக அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக