18 நவம்பர் 2013

தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்கிறார்கள்-கனடா

தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கையில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கனடா அறிவித்துள்ளது.
நாட்டின் தலைமைத்துவம் தொடர்பில் தமிழ் சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ்;ந்து வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சின் மனித உரிமை விவகாரச் செயலாளர் தீபக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உறுப்பு நாடுகளில் பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகள் அமுல்படுத்தப்படாவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மக்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியதாகவும் இந்த விஜயத்தின் போது கனடாவின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை மேலும் உறுதி செய்து கொள்ள வாய்ப்பு கிட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இலங்கையின் யதார்த்தமான முயற்சிகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக