06 நவம்பர் 2013

சிறிலங்கா இதே நிலைப்பாட்டை தொடர முடியாது – கனடா

மனிதஉரிமைகள் விவகாரத்தில் தற்போதைய நிலைப்பாட்டில் தொடர்ந்திருக்க முடியாது என்ற மிகத் தெளிவான செய்தி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார மற்றும், அனைத்துலக மனிதஉரிமை விவகாரங்களுக்கான நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய்,
“சிறிலங்காவில் மனிதஉரிமைகளுக்கான கனடா தொடர்ந்து போராடும்.
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான கவலைகளை வெளிப்படுத்தும் விதத்தில், கொமன்வெல்த் மாநாட்டுக்கு உயர்மட்டக் குழுவை அனுப்பாத ஒரே நாடு கனடா தான்.
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் போது சிறிலங்காவின் வடக்குப் பகுதிக்குச் செல்வேன் என்று நம்புகிறேன்.
அங்கு போருக்குப் பிந்திய நிலைமைகளை பார்வையிடுவதுடன், அரச்சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுவேன்.
கனடா திரும்பியதும் சிறிலங்காவில் உள்ள நிலைமைகள் குறித்து எனது உணர்வுகளை கனேடிய அரசாங்கத்துக்கு வெளிப்படுத்துவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக