01 நவம்பர் 2013

மீண்டும் களத்தில் கஜேந்திரகுமார் !

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உரத்துக் கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பின் பெயரில் அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அமெரிக்க தமிழ்ச் சங்க மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதுடன் வாசிங்டனில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். தேர்தல் அரசியலை தூக்கிவீசி விட்டு இலட்சியத்துக்காக தேசிய அரசியலை மையப்படுத்தி செயற்படுத்திவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அமெரிக்காவின் அதிகார பீடத்தை சந்திக்கவுள்ளமை இனஅழிப்பாளர்களையும் போலி வேசம் போடும் தமிழ் அரசியல்வாதிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சந்திப்பின்போது தமிழர் தேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கட்டமைப்பு சார் இன அழிப்பு நடவடிக்கைகள் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும், தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாகவும் விளக்குவார் என தெரியவருகிறது.
கடந்த காலத்தில் சர்வதேச விவகாரங்களை கையா
ள்வதற்காக தமிழீழ தேசியத் தலைவரால் கஜேந்திரகுமார் நியமிக்கப்பட்டிருந்தார். ஆயினும் கூட்டமைப்பிலிருந்த சில உயர்மட்டத்தினர் வஞ்சகத் தனத்தினால் கஜேந்திரகுமாரின் நகர்வுகளை குழப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக