கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சி நகரப்பகுதிக்குள் வைத்துப் பொதுமக்கள் பலர் பார்த்திருக்க பகலில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக அழுது கொண்டு தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆயினும் அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடம் எதுவென்றோ அல்லது அவரைக் கடத்தியவர்கள் யார் என்றோ இதுவரை அறிந்து கொள்ளமுடியவில்லை என குடும்பத்தவர்கள் கூறுகின்றனர்.
வெள்ளை வான் குழுவால் கடத்தப்பட்ட இவர் பிரதான வீதி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும் கூழாவடி உருத்திரபுரம், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட 35 வயதுடைய சிவகுமார் பாஸ்கரன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பஸ்த்தர் இராணுவத்தினரின் தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுதலையாகிய நிலையில் கடத்தப்பட்டிருப்பது பல முன்னாள் போராளிகளின் மனதில் அச்சத்தினை விளைவித்துள்ளது.
அத்துடன் இவர் கடந்த வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தீவிர பரப்புரையினை கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடத்தல் விடயம் குறித்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பினும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக