15 நவம்பர் 2013

யாழில் பெண்கள்,சிறுமிகள் மீது சிங்கள பொலிஸ் காடையர்கள் அடாவடி!

யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டு உள்ளனர்.தனது கழுத்தை நெரித்ததாக ஒரு பெண் அழுதவாறு தெரிவித்துள்ளார்.ஒரு சிறுமி கூறுகையில்"பொலிசார் தன்னை கன்னம் கன்னமாக அறைந்ததாகவும்,நாம் எம் உரிமையைதானே கேட்டோம் அதற்கு இப்படி அடிக்கிறாங்களே,எங்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் மாமா"என குளோபல் தமிழ் வானொலியிடம் அழுதழுது தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அனந்தி சசிதரன்(திருமதி எழிலன்)தெரிவிக்கையில் தாங்கள் முனியப்பர் கோவிலடியில் அமைதியான முறையில் நின்றிருந்ததாகவும் பிரித்தானியப்பிரதமர்  வந்ததும் தாம் பொது நூலகத்திற்கு முன் வந்தபோது அங்கு வந்த இலக்கமற்ற பொலிஸ் அதிகாரிகள் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர்கள் வெறியில் இருந்ததுபோல் காணப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.தன்னை மாகாணசபை உறுப்பினர் எனத் தெரிந்தும் தன்மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதல்களின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் தள்ளி விழுத்தப்பட்டு உள்ளனர் எனவும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக