இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு போரின் இறுதி நாளன்று பெண் ஒருவர் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டுள்ளார். வீடியோ ஒன்றின் வெளிப்பாட்டில் இருந்து இவர் படையினரால் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெளிவுபடுத்தப்பட்டு இருப்பதால் போர்க்குற்ற புலன்விசாரனை நடாத்தும்படி ரொறொன்ரோவில் வசிக்கும் அவரது உறவினர்கள் கேட்டுள்ளனர்.
காட்சி ஒன்றில் கொல்லப்பட்டவரான சோபனா சோபா உயிருடன் மே மாதம் 18ந் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், அதே நாள் சிறிது நேரத்தின் பின்னர் எடுக்கப் பட்ட படத்தில் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக நிலத்தில் கிடத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் சனல் 4 மூலம் ஒளிபரப்பப்பட்ட காணொளியை பார்த்த சோபனாவின் அத்தையான ரொறொன்ரோவைச் சேர்ந்த தாதி றஞ்சனி ரவி, சோபனா கொலைசெய்யப்பட்டுள்ளார் என்பது 100 சதவிகிதம் உண்மை என கூறியுள்ளார். அத்துடன் இது சம்பந்தமாக சர்வதேச புலன் விசாரனை தேவை எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதம மந்திரி Stephan Harper பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை புறக்கணித்தமைக்கு இத்தகைய நீதிக்குப் புறம்பான கொலை குற்றச்சாட்டுக்களும் ஒரு காரணமென கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விவகார மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் திரு. ஓப்ராய் இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் செய்தபோது மக்களிடம் போர் நிறுத்தத்தின் பின்னர் சமரசப்படுத்துதல் இடம்பெற்றதா என கேட்டபோது இல்லை என்பதே ஒரே பதிலாக கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
சோபனா சோபா [இசைப்பிரியா] போரில் மரணமடைந்ததாக இலங்கை இராணுவம் கூறுகின்ற போதிலும் காணொளி ஆதாரத்தின் மூலம் சோபனா சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இலங்கை பாதுகாப்பு படையினரின் காவலில் இருந்த போதுதான் சோபனா கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது வீடியோ காட்சி மூலம் தெரிகின்றதென சர்வதேச பொதுமன்னிப்பு உத்தியோகத்தர் யொலான்டா வோஸ்ரர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மட்டும் ஒரு தனி சம்பவம் இல்லை என்றும் இவர் தெரிவித்துள்ளார்.
போர் இறுதிக்கால கட்டங்களில் நீதிக்குப் புறம்பான கொலை, கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களினால் பலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் போராளிகளால் பலர் துன்புறுத்தப் பட்டிருப்பதற்கான சான்றுகளும் இருப்பதாக யோலான்டா கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
ஆனால் பொதுவான சர்வதேச புலன்விசாரனை இல்லாமல் எதையும் உறுதிசெய்ய முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.
திருமதி.சோபா இறந்த அடுத்த நாள் போர் முடிவடைந்தது. தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். திருமதி சோபாவின் கைது பற்றிய வீடியோ அரசாங்கத்தை அவமானப் படுத்துவதற்காக போலியாக தயாரிக்கப் பட்டதென இலங்கை படைகளின் பேச்சாளர் ஒருவர் பிபிசி ற்கு கூறியுள்ளார். இது நடிப்பல்ல என திருமதி ரவி எதிர்த்துள்ளார்.திருமதி சோபாவின் பேத்தியார், இரண்டு அன்ரிமார்கள், கனடாவில் வசிக்கின்றார்கள் என திருமதி ரவி கூறியுள்ளார்.
சோபாவிற்கு 5 சகோதரிகள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக