22 நவம்பர் 2013

லைகா மொபைலுக்கும் ராஜபக்சவுக்கும் என்ன தொடர்பு?பிரிட்டன் பிரதமர் அதிரடி

லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு? என்பதை விசாரித்து அறிக்கை தருமாறு டேவிட் கேமரூன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இலங்கை அரசு மற்றும் அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக அடுத்தடுத்து சவுக்கைச் சுழற்றி வருகிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.யாழ்ப்பாண விஜயம், தமிழர்கள்பால் பரிவு, போர்க்குற்ற விசாரணை கோரல், ராஜபக்சேயை இம்மியளவுக்கும் நம்ப முடியாது என பகிரங்கமாக அறிவித்தது என கேமரூனின் ஒவ்வொரு நடவடிக்கையும், காயம்பட்ட தமிழர் மனதுக்கு ரொம்பவே ஆறுதலைத் தந்து வருகிறது.
தமிழர்கள் தங்கள் பிரதமர் என இப்போது கொண்டாடி வருவது டேவிட் கேமரூனைத்தான்!அவர்களின் நம்பிக்கையை உயர்த்தும் விதமாக நேற்று இரு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் டேவிட் கேமரூன். ஒன்று, ராஜபக்சே அரசின் போர்க்குற்ற விசாரணைகளை ஏற்க முடியாது என்பது.
அடுத்து ராஜபக்சேயை அலற வைத்திருக்கும் அதி முக்கியமான உத்தரவு. ராஜபக்சே குடும்பத்தினருக்கும், லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நிறுவனமான லைக்கா மொபைல்ஸ் உடனான தொடர்புகளை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.கேமரூனின் கட்சிக்கு 420000 பவுண்டுகள் இந்த லைக்கா மொபைல் நிறுவனம் மூலம் வந்துள்ளது. லைக்கா மொபைலை நடத்தும் சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கைத் தமிழர். ராஜபக்சேவுக்கு நெருக்கானவர் என்றும், அதனால்தான் அந்த நிறுவனம் கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக நியமிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து எப்படி அவ்வளவு பணத்தை ஆளுங்கட்சி பெறலாம் என ஆளுங்கட்சி எம்பி டாம் பென்கின்சோப் கேமரூனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதைத் தொடர்ந்து, லைக்கா மொபைல் நிறுவனம் எதற்காக இந்தத் தொகையை வழங்கியது, அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு? இரு தரப்புக்கும் நடந்த சட்டவிரோத பணப்பரி மாற்றங்கள் குறித்து விசாரித்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கேமரூன் தெரிவித்துள்ளார்.
மேலும் லைக்காமொபைல் நிறுவனம் பிரிட்டனில் பெரும் அளவில் வரிமோசடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இது குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் கேமரூன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக