14 நவம்பர் 2013

சிங்கள பேரினவாதிக்காக பத்திரிகையாளரை இடைநிறுத்தம் செய்த தினக்குரல்!

வடமாகாண ஆளுநரும் தமிழ் மக்களை படுகொலை செய்த போர்க்குற்றவாளியுமான சந்திரிசிறியின் உரையை பிரசுரிக்கவில்லை என்ற குற்றம் சாட்டி யாழ். தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியர் பொன்ராசா கொழும்பில் உள்ள அதன் நிர்வாகத்தால் உடனடியாக வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா பேரினவாத அரசுக்கு விசுவாசத்தை காட்டுவதற்காகவும், வடமாகாண ஆளுநரிடம் நக்கி பிழைப்பதற்காகவும் தினக்குரல் நிர்வாகம் இதனை செய்திருப்பதாக தமிழ் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வட மாகாணசபையின் இரண்டாவது அமர்வில் ஆளுநர் சந்திரசிறி நிகழ்த்திய உரையை பிரசுரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டி தினக்குரலின் கொழும்பு நிர்வாகம் அந்த ஊடகவியலாளரை இடைநிறுத்தி உள்ளது.
அரசாங்க பத்திரிகையான லேக்கவுஸ் பத்திரிகைகள் கூட செய்யாத சிங்கள பேரினவாத அரச விசுவாசத்தை தினக்குரல் நிர்வாகம் செய்திருக்கிறது. வழமையாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால் அது தொடர்பாக நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் இந்த விடயத்தில் தினக்குரல் நிர்வாகம் சிறிய விசாரணைகளை கூட நடத்தவில்லை.
ஆளுனரின் உரை நீண்டதாக இருந்ததால் அதனை எடிட் பண்ணி வெளியிடுவதில் அல்லது மொழிபெயர்ப்பில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஒரு செய்தியை வெளியிடாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது தொடர்பாக விசாரணை நடத்தாமல் எப்படி ஒரு ஊடகவியலாளரை வேலை நீக்கம் செய்ய முடியும்?
ஆளுனர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் இந்த ஊடகவியலாளர் இடைநிறுத்தப்பட்டு இருக்கின்றார்.
இரவுப் பணியை முடித்து அதிகாலை வீட்டுக்குச் சென்ற ஊடகவியலாளர் அடுத்தநாள் வழமை போன்று இரவுப் பணிக்காக அலுவலகத்திற்கு சென்ற போது அவரை உள்ளே செல்லவிடாமல் காவலாளி மறித்தார். ஏன் மறிக்கிறீர்கள் என காவலாளியிடம் கேட்டபோது ‘தெரியாது உங்களை

இடைநிறுத்திவிட்டனர்’ என்றுகாவலாளி கூறியுள்ளார். அப்போதும் காரணம் புரியமால் அந்த ஊடகவியலாளர் தனது ஆசிரியரான அற்புதானந்தனிடம் தெலைபேசியில் கேட்டபோது நடந்த விடயத்தை அவர் சொன்னார்.
அந்த ஊடகவியலாளர் தவறு செய்திருந்தால் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அவரிடம் கால அவகாசம் கொடுத்து விளக்கம் கேட்டிக்க வேண்டும். இது எதுவும் இல்லாமல் ஆளுநரின் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் நாய்போல வாலை ஆட்டிக்கொண்டு சிங்கள பேரினவாதிகளுக்கு விசுவாசம் செய்யும் நிலைக்கு தினக்குரல் நிர்வாகம் மாறியுள்ளது.
சாமியின் நிர்வாகத்தின் கீழ் இருந்த தினக்குரல் பத்திரிகையை இந்திய வியாபாரிகளான ஞானம் சந்ததியின் நாடார்களின் நிர்வாகம் வாங்கிய பின் சிங்கள பேரினவாதிகளின் விசுவாசிகளாக தினக்குரல் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாறு இணையம் ஒன்று தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக