26 நவம்பர் 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு!

நவம்பர் 27 மாவீரர் தினம். இந்த நாளை உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் தமிழின உணர்வாளர்கள் அனுசரித்து வருவது வழக்கம்.
ஈழத்தில் மாவீரர்கள் துயிலகங்களில் அனுசரிக்கப்பட்டு மாவீரர் உரை நிகழ்த்துவார் பிரபாகரன். 2009 முள்ளிவாய்க்கால் கொடூர சம்பவத்திற்கு பிறகு துயிலகங்கள் தகர்க்கப்பட்டது. அதன் பிறகு ஏதாவது ஒரு இடத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகள் இருந்த போதிலும் கடந்த ஆண்டில் சென்னை கடற்கரை போன்ற இடங்களில் குழந்தைகள், மாணவர்கள் ஏராளம் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இந்த ஆண்டு துயிலகம் போல தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து உணர்வாளர்கள் கலந்த கொள்கிறார்கள். மேலும் வெளிநாடு களில் இருந்தும் உணர்வாளர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
27 ந் தேதி புதன் கிழமை நாள் முழுவதும் மாவீரர் தின நிகழ்வுகள் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக