02 மார்ச் 2013

ஈழ விடுதலைக்கு இளைஞர்கள் முன்வரவேண்டும்: வைகோ

20130301-200132.jpgஇலங்கையில் ஈழ விடுதலைக்காக இளைஞர்களும், மாணவர்களும் முன்வரவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கேட்டுக்கொண்டார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ, பூரண மதுவிலக்குப் பிரசார நடைப்பயணத்தை கடந்த பிப்ரவரி 18-ம் தேதி கோவளத்தில் தொடங்கினார். 11 நாட்கள் 300 கி.மீ. பயணம் செய்து வியாழக்கிழமை மறைமலைநகரில் பிரசார நடைப்பயணத்தை முடித்துக்
கொண்டார்.அங்கு நடந்த கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு வரவேற்றுப் பேசினார்.
மறைமலைநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியது: நடைப்பயணம் மேற்கொண்டபோது ஏராளமான பெண்கள் என்னை சூழ்ந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் எப்படியாவது மதுவை ஒழித்துவிடுங்கள் என கண்ணீர் விட்டு அழுதனர். அவர்கள் கூறியது என்னைக் கலங்கவைத்தது. ராஜாஜி, காந்தியடிகள், பெரியார், அண்ணாதுரை வழியில் மதுவின் கொடுமைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்துவருகிறேன். மது அருந்துபவர்கள் மது அருந்தாத நேரத்தில் மது அருந்திவிட்டு தரையில் விழுந்து கிடப்பவர்களை கண்டு அவமானப்படுகிறார்கள். இந்த பிரசாரம் மூலம் இளைஞர்கள் மாறிவிடுவார்கள் என நினைக்கிறேன். நான் மாணவப் பருவத்திலேயே மது ஒழிப்பு போராட்டம் நடத்தியுள்ளேன். ராஜாஜி, அண்ணாதுரை தமிழ்நாட்டில் மதுவை அனுமதிக்க வில்லை. ஆனால் அதிமுக, திமுக ஆட்சியில் மதுக்கடைகள் ஏராளமாக திறக்கப்பட்டன.
எனது பிரசாரத்தின்போது கதறிய பெண்கள், மதுவால் குடும்பமே அழிந்துவருவதாக கூறுகின்றனர். மதுவால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதும் 90 சதவீதம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மது அருந்துவதால்தான் நடைபெறுகின்றன. தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டுóம. தொடர்ந்து கடைகள் நடத்தி வந்தால் மக்கள் சக்தியை திரட்டி போராடி வெற்றிபெறுவோம் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு பன்னாட்டு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக