02 அக்டோபர் 2012

நோர்வேயில் 25 தமிழ் குடும்பங்கள் சாகும் வரையில் உண்ணாவிரதம்!

நோர்வேயில் சுமார் 25 தமிழ் குடும்பங்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நோர்வே நலன்புரி அதிகாரிகளினால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை மீள ஒப்படைக்குமாறு கோரி இந்தத் தமிழ்க் குடும்பங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
ஒஸ்லோவின் டொம் கிர்கன் பகுதியில் தமிழ் குடும்பங்கள் இந்த உண்ணாவிராதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஈராக்கிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இவ்வாறு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ் பெற்றோரின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.நோர்வே தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இவ்வாறு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வீடுகளில் பெற்றோர் உரிய முறையில் பிள்ளைகளை பராமரிக்கத் தவறியதாகத் தெரிவித்து, பிள்ளைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். குறித்த பிள்ளைகளை விடுதலை செய்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் நோர்வே தமிழ்ப் பெற்றோர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக