01 அக்டோபர் 2012

இந்தியா அழுத்தம் கொடுத்தாலும் முகாம்களை அகற்ற முடியாது!

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசு மூலம் அழுத்தம் கொடுத்தாலும் ஒருபோதும் அங்குள்ள படை முகாம்களை அகற்றப் போவதில்லை என இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்று, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்த உள்ளனர்.
இந்தப் பேச்சின் வடக்கில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தல், கிழக்கு மாகாண சபை ஆட்சி விவகாரம், முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் தொடர்பாக இந்திய அரசிடம் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ளதாக ஊகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று இந்தியா ஊடாக கூட்டமைப்பு எவ்வகையான அழுத்தங்களைக் கொடுத்தாலும் ஒருபோதும் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என்று அரசின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 1959 ம் ஆண்டு முதல் இராணுவ முகாம்கள் இயங்கி வருவதாகவும் எனவே தேசிய பாதுகாப்பு கருதி இந்த முகாம்களை அகற்ற முடியாது என்றும் இலங்கை பதிலளிக்கும் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக