
பங்களாதேசில் முஸ்லிம்களால் 11 பௌத்த விகாரைகள் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று கொழும்பில் பௌத்த பிக்குகள் பேரணி ஒன்றை நடத்தினர்.
சுமார் 500 பௌத்த பிக்குகளும் ஆதரவாளர்களும் பேரணியாக, பங்களாதேஸ் தூதரகத்தில் கண்டன மனுவைக் கையளிக்கச் சென்றனர்.
இதன்போதே பௌத்த பிக்குகள் பங்களாதேஸ் தூதரகம் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதனால், தூதரகத்தின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து நொருங்கின.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தனர்.
எனினும் இந்தத் தாக்குதலில் பௌத்த பிக்குகள் எவரும் ஈடுபடவில்லை என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக