02 அக்டோபர் 2012

தமிழக எதிர்ப்பு எமக்கொரு பொருட்டல்ல என்கிறார் ஜகத் ஜெயசூரிய.

தமிழ் நாட்டின் ௭திர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாம் அலட்டிக் கொள்ளத் தேவை யில்லை. ௭திர்ப்புகளுக்கு அஞ்சி, இரா ணுவ ரீதியிலான நட வ டிக் கை களை கைவிட முடி யாது. வரும் டிசம்பர் மாத த் தில் விசேட படை யணியை சார்ந்த 45 உயரதிகா ரி கள் பயிற் சிக் காக இந்தியா செல்லவுள்ளனர் ௭ன்று இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் 63 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற இராணுவத்தின் 143 படையணிகளைச் சார்ந்த கொடிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இரா ணுவ தளபதி மேற்கண்டவாறு கூறினார்.
இவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையி ல்,
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின் னர் இராணுவத்தின் ௭ண்ணிக்கை இர ண்டுஇலட்சத்திற்கு மட்டுப்படுத்தப்ப ட்டு ள் ளது.அது மட்டுமன்றி பாதுகாப்பு நட வடி க்கைகளுக்கு அப்பால் சென்று நாட் டின் மீள் கட்டுமான பணிகளுக்கும் இரா ணுவ வீரர்களின் ஒத்துழைப்பு பெறப்ப ட்டு ள்ளது. இதனை சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.
சும்மா இருந்து ஊதியத்தை பெற் றுக் கொள்ளும் அளவிற்கு இராணு வம் கௌரவத்தை இழந்து விடவில்லை. இராணுவத்திற்காக ஒதுக்கப்படுகின்ற நிதியில் ஒரு பில்லியனை நாட்டின் கட்டு மான பணிகளுக்காக இராணுவம் வழங்கி யுள் ளது.௭திர்காலத்திலும் அவ்வாறே செய் யும். இராணுவம் ௭ப்போதுமே முன்மாதி ரியாகவே செயற்படுகின்றது.
நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுக ளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமா கவே உள்ளோம்.இதனடிப்படையில் இந்தியா, பாகிஸ் தான் மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடு களின் இராணுவத்தினருடன் இணைந்து கூட் டுப்பயிற்சிகளை இலங்கையில் இரா ணுவம் அண்மையில் நடத்தியது.இதை விட பாரியளவிலான பயிற்சிகளை ௭திர் கால த்திலும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் சுமார் 800 க்கும் அதிகமான இலங்கை இராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.அதேபோன்று இந்திய வீரர்களும் இலங் கை யில் பயிற்சிகளையும் பாதுகாப்பு கற் கை நெறிகளையும் பின்பற்றி வரு கின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் மிக நெரு ங் கிய புரிந்துணர்வு காணப்படுகின்றது.
ஆனால் தமிழகம் இலங்கைக்கு ௭திரான செய ற்பாடுகளையே முன்னெடுக்கின்றது. இது குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இந்தியாவின் ஒரு பிராந்தியம் மட்டுமே தமிழகமாகும் இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ ஒத் துழைப்புகளுக்கு தமிழக ௭திர்ப்பு சவாலாக அமையாது ௭ன்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக