“தமிழகத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்து வருகிறதா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த மத்திய ராணுவத்துறை அமைச்சர் அன்ரனி, நேரடியாக பதில் சொல்லாமல், “நடப்பவற்றை மத்திய அரசு, உன்னிப்பாகக் கவனித்து வருகிறது” என்றார்.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த தடையை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து, நீதிபதி ஆர்.கே. ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயத்தின் விசாரணை சென்னையில் நடைபெற்றபோது, மத்திய உள்துறை அமைச்சின் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவாக செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாகவே இராணுவ அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது,
“உன்னிப்பாக கவனிக்கிறோம்” என்றார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி ஆர்.கே. ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் விசாரித்தபோது, தீர்ப்பாயத்தில் ஆஜரான ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, “இந்தியாவில் விடுதலைப்புலிகள் இல்லை” என வாதிட்டார்.
ஆனால், அந்த அமைப்பு ‘எங்கோ’ இருந்து இயங்குகிறது என்பது அவரது கட்சியின் நிலைப்பாடு. அந்த ‘எங்கோ’ இந்தியா கிடையாது என்றார் வைகோ.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக