11 அக்டோபர் 2012

தமிழினப் படுகொலைகள் ஜேர்மன் மொழியில் வெளிவருகிறது!

http://eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/damit%20wir%20nicht%20(2).jpgவடகிழக்கு மனித உரிமை செயலகம் தொகுத்து வெளியிட்ட தமிழினப்படுகொலைகள் என்ற நூல் ஜேர்மன் மொழியில் Damit wir nicht vergessen…“. Massaker an Tamilen 1956–2008. எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
இந்நூல் எதிர்வரும் 14ஆம் திகதி (14.10.2012 அன்று பிறாங்பேட் நகரில் இடம்பெற உள்ள புத்தக கண்காட்சி விழாவில் வெளியிடப்பட உள்ளது.
கிளிநொச்சியை தலைமையகமாக கொண்டு இயங்கிய வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் 1956- 2008 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இடம்பெற்ற தமிழின படுகொலை விபரங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கு மனித உரிமை செயலகத்தின் தலைவராக இருந்த வணபிதா மாரியம் சேவியர் கருணரட்ணம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், அரியநாயகம் சந்திரநேரு, ஆகியோர் சிறிலங்கா படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கைத்தீவிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்றனர்.
ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான தமிழின படுகொலை நூலை தழுவி ஜேர்மன் மொழியில் பேராசிரியர் பீற்றர் சால்ஸ் எழுதியுள்ளார். இதற்கு உறுதுணையாக ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகுவதற்கு உதவிய என்.மாலதி அவர்கள் பேராசிரியர் பீற்றர் சால்ஸ் அவர்களுக்கு இந்நூலை வெளியிட உதவியுள்ளார்.
ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான தமிழின படுகொலை நூல் இந்தியாவில் அச்சுப்பதிப்பு செய்து வெளியிடப்பட்டதால் இந்திய படைகளால் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற வில்லை. ஆனால் ஜேர்மன் மொழியில் வெளிவரும் இந்நூலில் இந்திய படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழின படுகொலைகள் விபரமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வெளியிடப்பட்ட தமிழின படுகொலைகள் நூலில் இலங்கை இந்திய இராணுவத்தினரால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் இவை அனைத்தும் ஜேர்மன் மொழியில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை இந்திய போர்க்குற்றவாளிகளை கூண்டில் நிறுத்துவதற்கு இந்நூல் உதவும் என வெளியீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Frankfurt நகரில் வாழும் தமிழ் மக்கள் இவ் நிகழ்வில் கலந்துகொள்ளும் படி வெளியீட்டார்கள் வேண்டியுள்ளனர் .
வெளியீட்டு வைபவம் நடைபெறும் காலம் மற்றும் இடம் :
14 .10 .2012 அன்று மாலை 15 :00 மணிக்கு
Frankfurter Buchmesse Draupadi-Stand (3.1 A 136).
சிறிய நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டியதை உங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக